இளையர் அறிவியல் களஞ்சியம்/சூரிய மண்டலம்
சூரிய மண்டலம் : சூரியனும் கிரகங்களும் துணைக் கோள்களும், வால் நட்சத்திரம், மற்றும் எரி நட்சத்திரங்களும் அடங்கிய பெருந்தொகுதியை சூரிய மண்டலம் ஆகும். ஆகாய கங்கையாலும், நட்சத்திர மண்டலத்தின் ஒரு சிறு பகுதியாக சூரிய மண்டலம் அமைந்துள்ளது.
இம் மண்டலத்தின் தலையாயதாக அமைந்துள்ள சூரியனைச் கற்றியே அனைத்துக் கிரகங்களும் அமைந்துள்ளன. இவை சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனையே சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றி வரும் கிரகங்கள் மொத்தம் ஒன்பது எனக் கண்டறிந்துள்ளனர். மேலும் கிரகங்கள் ஏதும் உள்ளனவா எனத் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
'நவகிரகங்கள்’ என அழைக்கப்படும் ஒன்பது கிரகங்களில் புதன், வெள்ளி (இதைச் சுக்கிரன் என்றும் அழைப்பர்) பூமி, செவ்வாய் வியாழன் (இது குரு என்றும் குறிக்கப்படும்). சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ கிரகம் ஆகியன அடங்கும். இவற்றுள் புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. புளுட்டோ கிரகம் நீண்ட நெடுந் தொலைவிலுள்ளது. கிரகங்கள் அனைத்தும் நீள்வட்டப் பாதையில் ஒரே திசையில் நியதிப்படி சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரிய மண்டத்தில் உள்ள கிரகங்களில் சூரியன் மட்டுமே இயற்கையாக ஒளிவீசிப் பிரகாசிக்கக் கூடிய ஒளிரும் கோளம். மற்ற கிரகங்களுக்கு இயற்கையில் தானாக ஒளிவீசும் தன்மை இல்லை. இவை ஒளிராக் கோளங்களாகும். இவை சூரிய ஒளியைப் பெற்று அவ்வொளியையே திரும்பப் பிரதிபலிக்கக்கூடியவைகளாகும்.
சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் புதன், வெள்ளி, கிரகங்களைத் தவிர்த்து மற்றவற்றிற்குத் துணைக்கோள்கள் உள்ளன. பூமிக்குத் துணைக்கோள் சந்திரன் ஆகும்.
சூரியனின் ஈர்ப்பாற்றலால் கிரகங்கள் விலகிச் சென்றுவிடாமல் சூரியனையே சுற்றிச் சுற்றி வருகின்றன. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதோடு பூமியையும் சுற்றி வருகின்றது.
சூரிய மண்டலத்தின் தோற்ற வரலாறு சுவையானதாகும். சூரியனுக்கு அருகே வந்த நட்சத்திரம் ஒன்றின் ஈர்ப்பாற்றலால் ஆவி வடிவிலான சூரியனின் ஒரு பகுதி மாதுளம் பழத்தின் முனைப்பகுதி போன்று கூம்பி எழுந்தது. இப்படி பருத்து எழுந்த பகுதி தனியாக சூரியனிடமிருந்து பிரிந்து சென்றது. இவை பின்னர் குளிர்ந்து தனித்தனிப் பகுதிகளாயின. இத்தனிப் பகுதிகளே கிரகங்கள். இவை முற்றிலும் குளிர்ச்சியடையுமுன் மீண்டும் சூரியனுக்கருகில் செல்ல நேர்ந்தபோது அக்கிரகங்களிலிருந்து மேலும் சில பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்து சென்றன. பின்னர் இவைகள் துணைக் கோள்களாயின.
இவை எந்தக் கிரகத்திலிருந்து வெளியேறினவோ அந்தக் கிரகத்தையே சுற்றிவர ஆரம்பித்தன. இவை அந்தந்த கிரகங்களின் துணைக்கோள்களாக அழைக்கப்பட்டன. இத்தகைய துணைக்கோள்கள் பூமிக்கு ஒன்று, செவ்வாய்க்கு இரண்டு, நெப்டியூனுக்கு இரண்டு. யுரேனசுக்கு ஐந்து, சனிக்கு ஒன்பது, வியாழனுக்குப் பன்னிரண்டு எனத் துணைக் கோள்கள் அமைந்துள்ளன. புளுட்டோவிற்குத் துணைக்கோள்கள் இருப்பதாகத் தெரியவில்லை.