உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/டர்பைன்

விக்கிமூலம் இலிருந்து

டர்பைன் : இது ஒரு சுழல் எந்திரமாகும். எனவே, இதைச் சுழலி என்றும் அழைக்கலாம். இது பலவகைப்படும். நீரால் இயங்குவது நீரோட்டச் சுழலியாகும். நீராவியைக் கொண்டு இயக்கப்படுவது நீராவிச் சுழலியாகும். அதைப் போன்றே வாயுவைக் கொண்டு சுழன்று இயங்குவது வாயுச் சுழலி எந்திரமாகும்.

நீர்ச் சுழலி மீது வேகமாக நீரைப் பாய்ச்சிச் சுழலச் செய்யப்படுகிறது. டர்பைன் எந்திரம் விரைந்து சுழல்வதால் ஏற்படும் விசையைக் கொண்டு வேறுபல எந்திரங்களைச் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணைக்கட்டுகளிலும் நீர் பாய்ந்து கொட்டும் பேரருவிகளிலும் இத்தகைய டர்பைன் சுழல் எந்திரங்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. நீராவியால் இயங்கும் டர்பைன் சுழலிகள் பேராற்றல் மிக்கவைகளாகும். வாயு டர்பைன்கள் விமானம், கப்பல், ரெயில், கார் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.