உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/தாதுக்கள்

விக்கிமூலம் இலிருந்து

தாதுக்கள் : ‘மினரல்ஸ்' (Minerals) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தாதுக்கள் கரியற்ற இயற்கைப் பொருட்களாகும். பிற பொருட்களை உருவாக்குவது போன்று தாதுக்கள் எதையும் நம்மால் உருவாக்க இயலாது. அவை ஆயிரக்கணக்கில் தாதுப்பொருட்கள் உள்ளனவெனினும் சுமார் 150 தாதுக்கள் மட்டுமே முக்கியத்துவமுடையனவாகப் பயன்பட்டு வருகின்றன. இவைகளின் பல்வேறு தன்மைகளைக் கொண்டு இனம் பிரித்தறிய முடிகிறது. தாதுப் பொருட்கள் தனித்தும் பிற பொருட்களோடு கலந்தும் கிடைக்கின்றன.

தாதுக்கள் பல்வேறு நீளங்களில் அமைந்துள்ளன. அதற்குக் காரணம் அவற்றில் படித்துள்ள மாசுகளே யாகும். தாதுக்களின் கடினத் தன்மையின் அடிப்படையில் அவற்றிற்குத் தனித்தனி எண்கள் கொடுக்கப்பட்டுள்

குரோமைட் போன்ற சில தாதுக்கள் காந்தத் தன்மை கொண்டவைகளாக உள்ளன. சில தாதுப் பொருட்கள் அணு ஆற்றல் உள்ளவைகளாக அமைந்துள்ளன. யுரேனியம், தோரியம் போன்றவை இத்தகையனவாகும்.

மனித வாழ்க்கைக்குப் பல்வேறு வழிகளிலும் தாதுப் பொருட்கள் பயன்பட்டு வருகின்றன. குடியிருப்புக்கான கட்டிடங்களை உருவாக்கவும், அணிமணிகளைச் செய்து அணிந்து மகிழவும், சிலவகைத் தாதுப் பொருட்களை உணவில் கலந்து உண்பதால் உடல் வளர்ச்சி பெறவும் உதவுகின்றன.

பெரும்பான்மையான தனிமங்கள் அவற்றின் தாதுக்களிடமிருந்து வேதியல் முறையில் பிரித்தெடுக்கப்படுகின்றன. பூமியின் புறப்பரப்பிலோ அல்லது பரப்பின் கீழோ அமைந்திருக்கும். சுருங்கக்கூறின் இவ்வகைதாதுக்கள் மாசு கலந்த கலப்புச் சேர்மமாகும். இவற்றில் உள்ள மாசுகள் முறைப்படி அகற்றப்பட்டு உலோகவியல் முறையில் தனிமங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.