இளையர் அறிவியல் களஞ்சியம்/தனிமம்

விக்கிமூலம் இலிருந்து

தனிமம் : இது 'எலெமென்ட்' (Element) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. தனித்திருப்பது தனிமம். அறைவெப்ப நிலையில் தனிமம் திண்ம, நீர்ம மற்றும் வாயு நிலையிலும் இருக்கும்.

தனிமங்கள் வெவ்வேறு வடிவங்களில் அமைந்துள்ளன. சில தனிமங்கள் பிராண வாயு, குளோரின் போன்ற தனிமங்கள் வாயு வடிவத்தில் உள்ளன. பாதரசம் போன்றவை திரவ நிலையில் அமைந்துள்னன. மற்றும் சில இரும்பு, தங்கம் போன்ற திடப்பொருட்களாக உள்ளன. பெரும்பாலான தனிமங்கள் இயற்கையாகத் தனிப்பொருளாகக் கிடைப்பதில்லை. மற்ற தனிமங்களுடன் கலந்த கலவையாகவே கிடைக்கின்றன. இவற்றைத் தனியே பிரித்தே தனிமமாகப் பெற முடிகிறது. உலகில் 100-க்கு மேற்பட்ட தனிமங்கள் இது வரை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றிற்குத் தனித்தனி அணுஎடை கணிக்கப்பட்டுள்ளது. அணுஎண் என்பது தனிமத்தின் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.

எனவே உட்கருவேதியல் முறைப்படி ஒவ்வொரு தனிம உட்கருவிலும் புரோட்டான்களை நுழைத்து புது செயற்கை தனிமம் உருவாக்கப்படுகிறது. இவ்விதம் பெறப்படும் தனி மங்கள் நிலைப்புத்தன்மை குறைவாக உள்ளனவாகும்.