இளையர் அறிவியல் களஞ்சியம்/துருவ நட்சத்திரம்

விக்கிமூலம் இலிருந்து

துருவ நட்சத்திரம் : ‘துருவம்’ எனும் வட சொல்லிற்கு ‘வடக்கு’ என்பது பொருளாகும். துருவன் எனும் சிறுவன் இறைவனை நோக்கிக் கடுந்தவம் இருந்ததனால் அவன் பெயரில் ‘துருவ நட்சத்திரம்’ என அழைப்பாருமுளர். வடக்கே காணும் இந் நட்சத்திரத்தை ஆங்கிலத்திலும் வட நட்சத்திரம் (North star or pole star) என்று அழைக்கின்றனர், பண்டைக்காலம் முதலே கப்பல் மாலுமிகள் இத்துருவ நட்சத்திரத்தை வைத்தே திசையறிந்து வந்தனர்.

சூரியனைவிட 4,000 மடங்கு பேரொளி கொண்டது துருவ நட்சத்திரம். இருப்பினும், இந்நட்சத்திரம் சூரியனுக்கப்பால் நெடுந் தொலைவில் இருப்பதால் கதிரவனைப் போன்று ஒளியைப் பரப்புவதில்லை.

உலகம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும். அதன் அச்சு துருவ நட்சத்திரத்தை நோக்கிய படி அமைந்திருப்பதால் அது எத்திசையிலும் உதிக்காது என்றென்றும் ஒரே இடத்தில் இருப்பதுபோல் நமக்குத் தோற்றமளிக்கிறது.