இளையர் அறிவியல் களஞ்சியம்/பச்சையம்

விக்கிமூலம் இலிருந்து

பச்சையம் : 'குளோரஃபில்’ என்று கூறப்படும் பச்சையம், தாவரங்கள் பச்சையாக இருப்பதற்கு மட்டுமின்றி பசுமையாக இருப்பதற்கும் காரணமாக உள்ளது. காளான் போன்ற ஒட்டுண்ணித் தாவரங்களைத் தவிர்த்துப் பிற எல்லா தாவரங்களிலும் பச்சையம் உண்டு.

தாவர இலைகளின் அடிப்பகுதியில் சிறுசிறு துவாரங்கள் உண்டு. இவை கண்ணுக்குத் தெரியாத அளவில் மிகச் சிறிய நுண்துளைகளாகும். இத்துளைகள் வழியாகக் காற்று

ஒளிச்சேர்க்கையை விளக்கும் படம்

உள்ளே நுழைகிறது. இலைகளில் உள்ள பச்சையம் காற்றிலுள்ள கரியமில வாயுவைப் பிரித்தெடுக்கிறது. வேரிலிருந்து வரும் நீருடன் இக் கரியமிலவாயு கலந்து புதுக் கலவையாகிறது. இக்கலவை சூரிய ஒளியின் உதவியால் வேதியியல் முறையில் மாற்றமடைந்து சர்க்கரைப் பொருளாகவும் மாவுப் பொருளாகவும் மாற்ற முடிகிறது. இச்செயலே 'ஒளிச் சேர்க்கை' ஆகும். இவ்வாறு தாவரங்களிலுள்ள பச்சையம் ஒளிச்சேர்க்கைக்கான அடிப்படைப் பொருளாக அமைந்துள்ளது.