இளையர் அறிவியல் களஞ்சியம்/ராமன் விளைவு

விக்கிமூலம் இலிருந்து

ராமன் விளைவு : அறிவியல் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய

சர். சி. வி. இராமன்

அறிவியலறிஞர் சர். சி. வி. ராமன் ஆவார். இவர் இயற்பியலில் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்பான "ராமன் விளைவு’ (Raman Effect) என்பதற்காக இப்பரிசு பெற்றார்.

இவருக்கு இளம்வயதிலேயே கல்வி கற்பதில் பேரார்வம் ஏற்பட்டது. சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பட்டப் படிப்பு படித்த இவர் தன் பதினாராவது வயதிலேயே இயற்பியலில் முதன்மை நிலை பெற்றுத் தேறினார். அதன்பின் சிறிதுகாலம் கல்கத்தா ரங்கூன், நாகபுரி போன்ற விடங்களில் அரசுப் பணியாற்றினார். எனினும், அவரது நாட்டம் இயற்பியல் ஆய்விலேயே கருத்துான்றி இருந்தது. அவர் கல்கத்தாவில் பணியாற்றிய போது, அங்கிருந்த அறிவியல் வளர்ச்சிக் கழகத்தோடு தொடர்பு கொண்டார். அவ்வமைப்பின் தலைவர் அனுமதியோடு ஓய்வு நேரங்களில் சோதனைக் கூடத்தில் இயற்பியல் ஆய்வுகளை செய்து வந்தார். அதன் விளைவாக 1817ஆம் ஆண்டு கல்கத்தாப் பல்கலைக் கழக அறிவியல் கல்லூரியொன்றில் இயற்பியல் பேராசிரியரானார். அங்கு தொடர்ந்து தன் இயற்பியல் ஆய்வைச் செய்து வந்தார். அப்போது தான் ராமன் விளைவைக் கண்டு பிடித்தார்.

ராமன் விளைவு என்பது ஒர் அலை நீளமுள்ள ஒளியானது (எ.டு: பாதரச விளக்கிலிருந்து வரும் ஒளி), ஒரு திரவத்திற்குள் அல்லது வாயுவிற்குள் பாயும்போது, அந்தத் திரவத்தின் மூலக்கூறு ஒளியை பக்கவாட்டில் சிதறடிக்கிறது. ஊடகம் ஒருவகைப் பிரகாசமான கோட்டினையும், வேறுசில கோடுகளையும் காட்டும். இந்தக் கோடுகள், திரவத்தின் மூலக்கூறுகளுக்கு எதிராக ஒளியின் துகள்கள் தாக்கி, அதனால் ஆற்றலை ஈட்டுவதால் அல்லது இழப்பதால் உண்டாகின்றன. இதைக் கண்டுபிடித்ததற்காகத்தான் இயற்பியல் நோபல் பரிசு 1980இல் இவருக்கு வழங்கப்பட்டது.

இவரது ஆய்வுப் பணியைப் பாராட்டி ஆங்கில அரசு ‘சர்’ பட்டமளித்துப் பாராட்டி மகிழ்ந்தது. தன் ஒய்வுக்குப் பின் பெங்களுரில் தங்கித் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து வந்தார். அவரது அறிவாற்றலையும் பாரத நாட்டின் பெருமையை வானளாவ உயர்த்தும் வகையில் ஆற்றிய அறிவியல் கண்டுபிடிப்புத் திறனையும் போற்றும் வகையில், இந்திய அரசு 1964ஆம ஆண்டு ‘பாரத் ரத்னா’ விருது அளித்தது. இவர் தமது 82ஆம் வயதில் 1970ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் பெங்களுரில் காலமானார்.