இளையர் அறிவியல் களஞ்சியம்/வெப்பமானி
வெப்பமானி : வெப்ப அளவைக் கண்டறிய உதவும் கருவிகளுள் ஒன்று வெப்பமானி ஆகும். சாதரணமாகப் பொருள் சூடானதா அல்லது குளிரானதா என்பதைக் கையால் தொட்டு ஓரளவு அறியலாம். ஆனால், வெப்பத்தைத் துல்லியமாகக் கண்டறிய வேண்டுமானால் அதை வெப்ப மாணியைக் கொண்டே அளந்தறிய முடியும்.
வெப்பத்தைப் பெறுகின்றபோது பொருட்கள் விரிவடையும் எனும் இயற்பியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வெப்பமானி அமைந்துள்ளது.
வெப்பமானி தந்துகிக் குழாய் உள்ள கண்ணாடித் துண்டால் செய்யப்பட்டது.
இரு புறமும் நன்கு மூடப்பட்ட இதன் அடிமுனை சிறு குமிழாக இருக்கும். இக்குமிழ்ப் பகுதியில் பாதரசம் அல்லது ஆல்கஹால் நிரப்பப்பட்டிருக்கும். குழாயின் எஞ்சிய மேற்பகுதி வெற்றிடமாக இருக்கும். சூடான பொருளின் மீது குமிழ்பகுதியை வைத்தால் அதன் வெப்பச் சக்திக்கேற்ப குமிழிலுள்ள பாதரசம் அல்லது ஆல்கஹால் விரிவடைந்து மேலேறும். வெற்றிட மேற் பகுதி வெப்பநிலையில் அளவைக் குறிக்க எண்களும் கோடுகளும் இருபுறமும் இருக்கும். எந்த எண்ணுக்கு பாதரசம் அல்லது ஆல்ஹால் ஏறி நிற்கிறதோ அந்த அளவே அப்பொருளின் வெப்ப அளவு ஆகும். வெப்பப் பொருளினின்றும் வெப்பமானியை எடுத்துவிட்டால் பாதரசம் அல்லலது ஆல்கஹால்
வெப்பத்தை இழந்து மீண்டும் பழைய நிலையில் அடிக் குமிழுக்குள் சென்றுவிடும்.
வெப்பநிலையை செல்சியஸ், ஃபாரன்ஹீட் மற்றும் ரோமர் என்ற அளவு முறைகளில் அளந்து வந்தோம். தற்போது கெல்வின் என்ற அளவு முறை உலகளாவிப் பரவி வருகிறது.
நமது உடலின் வெப்பநிலையை 370 செல்சியஸ் = 98.4 ஃபாரன்ஹீட் = 310 கெல்வின் என்று கூறலாம்.
ஒரு நாளின் உயர்ந்த-தாழ்ந்த வெப்பநிலைகளைக் கண்டறிய உச்ச-நீச வெப்பமானி பயன்படுகிறது.
உடலின் வெப்ப நிலையை அளக்க வெப்ப மானியை சிறிது நேரம் வாயினுள்ளோ அல்லது கக்கத்திலோ வைத்துப் பார்பபர்கள். மேலேறிய பாதரசம் மீண்டும்குமிழுள் இறங்காது உடலின் வெப்ப நிலையை உடனடியாகவோ அல்லது சிறிது நேரம் தாழ்த்தியோ பார்க்க இயலும். பாதரசம் மறுபடியும் குமிழுள் இறங்க வெப்பமானியைச் சற்று பலமாக உதற வேண்டும்.
வெப்பம் மிகுந்த பகுதிகளில் பாதரசத்தையும் குளிர்ச்சி மிகுந்த துருவப் பகுதிகளில் உறைநிலை மிகுந்த ஆல்கஹாலையும் வெப்ப மானியில் பயன்படுத்தி வெப்பநிலைகளை அறிகின்றனர்.
ஓர் உலோகச் சுருள் வெப்பமானியும் புழக கத்தில் உண்டு. ஓர் உலோகச் சுருளின் மின் தடை வெப்பநிலை சார்ந்தது. எனவே, மின் தடை மாற்றத்தின் மூலம் உயர்வெப்ப நிலைகள் அளவீடு செய்யப்படுகின்றன. மேலும், திரவப் படிகங்கள் (Liquid Crystals) ஆகியவற்றின் மூலம் வெப்பநிலை அளவீடுகள் நடைபெறுகின்றன.