இளையர் அறிவியல் களஞ்சியம்/வேகம்

விக்கிமூலம் இலிருந்து

வேகம் : விரைந்து செல்லுவதை 'வேகம்' என்று கூறுகிறோம். மனிதன், பிராணிகள் ஓடுவது, எந்திரங்கள் விரைந்து இயங்குவது, வாகனங்கள் விரைவாகச் செல்லுவது ஆகிய இவையெல்லாம் வேகத்தின்பாற் பட்டதாகும்.

மிக வேகமாக நடப்பதும்கூட வேகத் தன்மையுடையதாகும். ஒரு மனிதன், விரைந்து ஓடினால் 8 நிமிடங்களுக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க முடியும். மனிதர்களைவிட குதிரை விரைந்து வேகமாக ஓட வல்லதாகும். குதிரையின் வேகத்தையும் விஞ்சவல்லது சிறுத்தையின் ஓட்டம். பறவைகள் விலங்குகளைவிட இருமடங்குக்குமேல் விரைந்து பறக்க வல்லனவாகும்.

அறிவியல் வளர்ச்சியின் விளைவாக மனிதன் விரைந்து செல்லும் வகையில் தனக்குத் துணைபுரிய சைக்கிள், கார், ரெயில், கப்பல், விமானம், ராக்கெட் எனப் புதிய வாகனங்களை உருவாக்கலானான். ராக்கெட்டுகள் மணிக்கு நாற்பதாயிரம் கி.மீ. வேகத்தில் செல்லவல்லவனவாகும்.