உள்ளடக்கத்துக்குச் செல்

இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்/இன்ஷூயூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம்

விக்கிமூலம் இலிருந்து

ஏழாவது அதிகாரம்


இன்ஷியூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம்

றுநாள் காலை ஏழு மணியிருக்கும். நான் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, சிற்றுண்டியருந்தி விட்டு, என் தந்தையின் அறைக்குச் சென்றேன். அங்கு ஒரு சோபாவில் சாய்ந்த வண்ணம், மணிலா சுருட்டை வாயில் வைத்துப் புகைத்துக் கொண்டிருந்தார். அவரது முகம் ஆழ்ந்த, சிந்தனையில் மூழ்கியிருப்பதை வெளிப்படுத்திக் காட்டியது. நான் சென்று சில விநாடிகள் கழிந்த பிறகே, அவர் எதிரில் நான் நிற்பதையறிந்தார். உடனே அவர் வாஞ்சையோடு, “அம்மா இப்படி உட்கார். உன்னைப் புற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். நீயும் வந்து, 104 o இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

விட்டாய்-என்ன் உன் முகம் ஒருவிதமாகக் காணப்படு கிறதே" என்று கேட்டவாறே எழுந்து அமர்ந்தார்.

நான் சிறிது தாத்திருந்த வெல்வெட்டு மெத்தை வைத் துத் தைத்த நாற்காலி யொன்றை என் தந்தையருகே இழுத் துப்போட்டு உட்கார்ந்தவண்ணம், ஒன்றுமில்லை யப்பா! இரத்திரி என்னமோ தாக்கம் வரவில்லை. அககுல் முகம் ஒருவாறு மாறுபட்டிருக்கலாம். அவ்வளவுதான்” என்ற புன் சிரிப்பை வலுவந்தமாக வருவித்த வண்ணங் கூறி னேன். r - - ...} என் தங்கை சிறிது நேரம் சும்மா இருந்துவிட்டுப் பின் னர் என்னேப் பார்த்து, புவனு! இராத்திரி நீ சாப்பிடுகை யில் உன் காய் கூறிய விஷயம் உனக்கு ஞாபக மிருக் கிறதா!-நமக்கு இச்சமயம் காலம் சரியாயில்லே என்று தெரிகிறது. சில நாட்களாகவே வியாபாரம் மந்தம்ாயிருக் கிறது. முன்போல் மோட்டார்களுக்கு ஆர்டர் வருவ தில்லை. இம் மாறுதல்களே யெல்லாம் பார்த்தால் நேற்று , ஜோஸியர் சொன்னபடி நமக்குச் சனிதசை ஏற்பட்டிருக் கிறது என்று திட்டமாகத் தெரிகிறது. ஆதலால் நாம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே நடந்துகொள்ளவேண்டும். அதிலும் உனக்குத் தற்சமயம் கேது. தசை நடப்பதால் உயி ருக்கு ஆபத்து எற்படக்கூடிய சம்பவங்கள் நிகழுமென்று ஜோஸியர் கூறியிருக்கிறபடியால், ஒன்று மறியாக் குழந்தை யாகிய நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இனி மேல் நானே உன்னேக் காலையிலும் மாலையிலும் கலாசாலை கொண்டுபோய் விட்டு அழைத்து வருகிறேன். தனி எங்கும் செல்லாதே.தெரிகிறதா' என்று மிகப் பள்.

கான் ஆவர் கவனத்தை வ்ேறு வழியில் திருப்பு தெல்லாம் ஒன்ற்யில்லை; அப்ப் விளுக்னே இன்ஷியூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம் 10s

தைக் கவலைப் படுத்திக்கொள்ளவேண்டாம்-அது கிடக் கட்டும். சில நாட்களுக்கு நான் ராஜதானி கலாசாலைக்குப் போவதை நிறுத்தி வைக்கலாமென்று கினைக்கிறேன். நீங் கள் என்ன சொல்கிறீர்களப்பா' என்று கேட்டேன்.

ஏன்? புவன!” என்று வியப்போடு கேட்டார் என் தந்தை. : : ,

ஒன்று மில்லை. இந்த ஆடவர்களோடு சேர்ந்து படிப்

பது எனக்குப் பிடிக்கவில்லை. நான் எடுத்திருக்கும் சப்ஜக்

டைப் போதிக்கும் பெண்கள் கலாசாலே நம் நகரில் வேறு எங்கும் இல்லையா? அப்பா!' என்று சிறிது இழுத்தாம்

போல் கேட்டேன். х

அப்படி யொன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே!

(சிறிது நேரம் தம் நெற்றியை விரல்களால் அழுத்திய வண் ணம் ஏதோ யோசித்து) ஆமாம். இப்போதுதான் ஞாபகம்

வருகிறது. ஒரு வாரத்துக்கு முன் பேப்பரில் ஒரு விளம்

பரத்தைப் பார்த்தேன். அதில் வடகாட்டிலிருந்து யாரோ வந்து உயர்தர படிப்புப் படிக்க விரும்பும் கலாசாலைகளில் சேர்ந்து படிக்க முடியாதி @LisirsSjšāras “Mahila Devi ாக college என்ற பெயரோடு ஒரு தனிக் கலாசாலை

ஏற்படுத்தப் போவதாகவும், அதில் எஸ். எஸ். எல். ஸி. வகுப்பிலிருந்து எம். ஏ. வகுப்புவரை எல்லாவிதமான விஷ யங்களும் கற்றுக்கொடுத்துப் பரிசுைக்குத் தயாராக்குவ தாகவும் போதிப்பவர்களெல்லாம் மேட்ைடில் உயர்தரப் பட்டம் பெற்ற பெண்மண்ணிகளே யென்றும், பிரின்ஸ்பால் மிஸஸ். மஹிளாதேவி எம். எ (Oxon) எல். எல். பி. என். லும் வங்காளி மாதென்றும், அடுத்த வருஷம் பரீசுைக்கு ஆஜர்ருக விரும்புபவர்கள் உடனே இக்கலாசாலையில் துே. இன்ன்ப்பித்துக்கொள்ள வேண்டுமென்றும் விவரிக்கம் 106 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

பட்டிருந்தது; போன வார ஹிந்து பேப்பர்களைப் பார் “................ ’ என்று சொன்னர். -

'அப்படியா' என்று கூறி உற்சாகத்தோடு எழுங் திருக்கப் போகுஞ் சமயத்தில், வேலேயாள் ராமன் அங்கு தோன்றிப் பணிவாக என் கையில் ஒரு கடிதத்தை நீட்டிய வண்ணம், 'அம்மா இந்த கடுதாசியை சேற்று இராத்திரி நீங்க வாதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னே தான் চত ஆள் கொடுத்துவிட்டுப் போனன். நீங்கள் ரொம்ப நேரம், பொறுத்து வந்தீங்களே என்ற கவலையிலே இ.தெ அப்பவே: கொடுக்க மறந்துவிட்டேன். இப்பொ நெனப்பு வந்ததும் எடுத்துக்கிட்டு ஓடி வந்தேன் கோவிச்சிக்காதீங்கம்மா" என்று பல்லேக் காட்டிக் கெஞ்சிக் கூறினன். ராமன் ஒரு. அப்பாவி. அவனைப்போல அசட்டை இவ்வுலகத்திலேயே காண முடியாது என்பது என் கருத்து. ஆகவே, நான் அதுபற்றி அவனேயொன்றுங் கடிந்து கொள்ளவில்லை.

பின்னர், ராமன் என் தந்தையைப் பார்த்து, எஜமா னைப் பாக்கணம்னு யாரோ ஒரு ஐயா காத்துக்கிட்டு இருக் காங்கோ-வரச் சொல்லட்டுங்களா' என்று மிகச் சாவ: தானமாகக் கேட்டான்.

،مسابقه தடிாமா! அப்பவே எண்டா சொல்லல. உடனே ப்ோய் வந்தவரை உள்ளே அனுப்படா" என்று. ஆதட்டினர் என் தந்தை. w -

o யாரோ என் தந்தையைப் பார்க்க வந்திருக்கிருர், என்று அறியவே, நான் அங்கிருப்பது உசித மல்லவென்று எண்ணிக் கடிதத்தைப் பிரித்தவண்ணம் அடுத்த அறைக்கு மெல்ல கழுவினேன். அங்கு நான் கடிதத்தைப் பிரித்து பார்த்ததும், அது புரொபலர் சம்பத் ஐயங்காரர்ல் எழுதப். புட்டிருப்பதறிந்து ஆவ்லோடு விஷயத்தைப் படிக்கலா, இன்ஷியூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம் 107

னேன். உடனே எனக்கு அடக்கமுடியாமல் சிரிப்புண் டாய் விட்டது. நான் சிரிப்பது எங்கு என் தக்கைக்குக் கேட்டு விடுமோ என்ற அச்சத்தால் மிகவும் சிரமத்தோடு அடக்கிக்கொண்டேன். எனக்கு ஈகைப்பு ஏற்படும்படியாக அக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த விஷயங்கா னென்ன? நேற்று மாலே தனது மிருக சுபாவ மேலிட்டால் என்ஆக பலாத்காரப் படுத்தியகற்காக அவர் மனம் மிகவும் துன் புற்று எனக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிருராம்! அதோடு ஆசிரியராகிய தான் மாணவியாகிய என்னிட த்தில் கேவலமான முறையில் கடந்துகொண்டதை யாராகிலும் அறிந்தால் தன்னே மிக இழிவாகப் பேசுவார்களென்றும், தான் என்றும் தலே தாக்க முடியாதவாறு அவமான நிஜ யையே அடைய நேருமென்றும், மேலும் தன்னுடைய ஆசிரிய பதவிக்கு ஆபத்துக்கூட எற்படலாமென்றும், o ஆகவே, நான் பெரியமனதுவைத்துத் தான்செய்த கொடிய செயலே மறந்து இதை பாரிடமும் தெரிவிக்காதிருக்க வேண்டுமென்றும் மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கெ: டிருந்தார். t - ..

இலக்கண வரம்பு கடவாது மிக விரிவாக எழுதப்பட் டிருந்த அக்கடிதத்தில் அவர் ஒரு விநோதமான வாதத்தைக் கிளப்பிவிட்டிருந்தார். மிகவும் கண்ணியமான முறையில் வாழ்ந்து வந்த தான் தன் வாழ்க்கையில் என்றும் மாருக் களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டதற்கு நானே காரண மாம்! என்னுடைய பேரழகே நன்னிலையி லிருந்த கன்னத் தலைகிறுக்க வைத்து இவ்வளவு தாரம் பாழ்படுத்தி விட்ட தாம் ஆதலால் அதைக் கருதியும் நான் அவரை மன்னித்து விடவேண்டுமாம்!-எப்படி யிருக்கிறது அவர் கூற்று என்ன சிரிக்கிறீர் நண்பரே! அக்கமடையனின் அயோக்கி 108 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

யக் கனத்துக்கு நான் காரணமாம். அவனது அசட்டு வாதத்தைப் படித்தால் எனக்குச் சிரிப்பு வருமா, வராதா? பொதுவாக, சம்பத்தினுடைய கடிதத்தைப் படித்ததில் எனக்கு அவன் மீது இரக்கமே யுண்டாயிற்று. எனவே, நான் அக்கடிதத்தைத் துண்டு துண்டாகக் கிழித்தெறிக் தேன். ஜான் கில்பர்ட்டிடம் சொல்லி இதைப் பிரமாதமாக் காது விட்டுவிடவேண்டுமென்று தெரிவிப்பது அவசியம் எனவும் தீர்மானித்தேன். ஆகவே, அவ்வளவோடு அவ் விஷயத்தை மறந்து, என் தந்தையைப் பார்க்க வந்திருப்ப வர் யாரெனக் கவனிக்கச் சென்றேன். நானிருந்த அறைக் கும், என் தந்தையி னறைக்கும் ஒரு கதவு மட்டும் தான் இடைமறித்திருந்தது. ஆகவே, நான் அக்கதவருகிருந்தே எதிர் அறையில் இருப்பவர்களையும் அவர்கள் பேசுவதையும் அறியலாம். எனவே, நான் அக்கதவில் இடுக்கு வழியாக

என் தந்தையோடு பேசுபவர் யாரெனப் பார்த்தேன். வந்த

வருக்குச் சுமார் 35 வயதிருக்கும். ஆள் ஆறடிக்கு மேற் பட்ட உயரமும் நல்ல பருமனும் உடையவரா யிருந்தார். அதோடு அவர் அணிந்திருந்த ஹாட்டும் பூட்டும் கம்பீரத் தேர்ற்றத்தை யுண்டு பண்ணியது. அச்சமயம் அவர் என் தந்தையோடு பேசிய தோரணை விநோதமாயிருந்தது. அச் சம்பாஷணை தனிப்பட்ட இரகசிய விஷயமாய் இல்லாதிருக் தமையால், நான் கதவின் மறைவிலிருந்தே கின்று கேட்க லானேன். - o

'என்னேத் தாங்கள் இதற்குமுன் பார்த்ததாக ஞாப கக்கூட இல்லே பீென்ரு கூறுகிறீர்கள்!-உம், என்ன இருந்தாலும் மனிதர்களுக்கு இவ்வளவு மறதி கூடாது; சார்” என்று தடுமாற்றத்தோடு கூறினர் வந்தவர். அவர் முகம் எழிாற்றத்தைக் காட்டியது. - இன்வியூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம் 109

என் தந்தை சிறிது ஆத்திரத்தோடேயே, கான் தான் சொல்கிறேன்; நீர் குறிப்பிட்ட இடங்களுக்கு நான் போனது கூட இல்லையென்று. நீர் அதைக் கவனியாது சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக் கிறீரே!-இவ்வளவு தாரம் பீடிகை எதற்கு? நீர் என்ன நாடிவந்த காரியத்தைச் சொல்லித் தொலையுமே!’ என்று

கேட்டார்.

கோபித்துக் கொள்ளாதீர்கள் இவ்வளவு காலேயில் தங்களைத் தொந்தரவு செய்கிறேன் என்று எண்ணவேண் டாம்.-நான் இதற்கு முன் தங்களைப் பார்த்துப் பேசிப் பழகியதில்லை யென்முல், தங்கள் பெயர், தகுதி வியாபாரம், குடும்ப விஷயம் இவ்வளவும் எனக்கு எப்படி, சார், கெரிங் திருக்க முடியும்? இதைத் தாங்கள் சிறிது யோசித்துப்

பார்க்கே வண்டும்........ ”என்று அம்மனிதர் வாதித்தார்.

யாரிடமும் சாந்தமாகப் பேசும் இயல்பு வாய்ந்த என் தந்தை தம் பொறுமையை இழந்தவராய், “ggaur! உமக்கு என்ன! ஏதேனும் மூளையில் கோள்ாறு உண்டா! நமக்குள் இதற்கு முன் அறிமுகமாகி யிருக்கவேண்டுமென்ற அவசி பமேயில்லை; வந்த காரியத்தைத் தெரிவியும் என்று எத்தனை முறை உமக்கு எடுத்துச் சொல்வது? அதைக் கூருமலே ஏதேதோ கூறி என்னத் தொந்தரவு செய்கிறீரே?-எனக்கு மிகவும் வேலை யிருக்கிறது. இன்னும் கால்மணி சேர்த்தில் கம்பெனிக்குப் போகவேண்டும். நீர் எதற்காக என்ன காடிவந்தீர் என்ற விஷயத்தைச் சொன்குல் சொல்லும் இல்லாவிடில் நான் எழுந்து போகிறேன்" என்ற். க்ரி எழுந்திருப்பதுபோல் பாவனை செய்தார். 法 。”·

வந்த மனிதர் தாம் உட்கார்க் இடத்தைவிட்டு துள்ளி எழுந்துள்ன் தந்தையைப் பார்த்து இர்க்கம்ாகக் கைய்ம்ர்த்தி, 110 இவ்வுலகைத் திரும்பிப் LTGET

'தயவுசெய்து கொஞ்சநேரம் இரும். தங்களுக்கு ஆபாச மேற்படும்படியாக ஏதேதோ விண் வார்த்தைகள் பேசி விட்டதற்காக வருந்துகிறேன். ஒன்றுமில்லை: நான் தங்கள் சமூகம் வந்ததன் நோக்கம்......... ......."என்று வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்காமலே, ஹாட்டை யெடுத்து மடி மீது வைத்துக்கொண்டு தலையைச் சொறிய ஆரம்பித்தார்.

என் தந்தை வெறுப்போடு அம்மனிதரது முகத்தையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். என் தந்தை முகத்தைச் சுளித்தும், பதட்டமாகப்பேசியும் இதற்குமுன் நான் பார்த்த தில்லை. அப்பேர்ப்பட்டவர் இவ்வளவு கடுமையாக இப் போது இருப்பதைப் பார்த்தால், வந்த மனிதர் தோற்றத் தில் ஆடம்பரமாகவும், கம்பீரமாகவும் காணப்பட்டாலும் எவ்வளவு அற்பத்தனமாக-ஆபாசமாக-நடந்து கொண்டி ருக்கிருர் என்று தெரிந்தது. -

அம்மனிதர் மீண்டும் பேச முயன்று, சார்! தங்களுக்கு இப்போது வயதென்ன ஆகிறது? நான் கடைசி முறை யாகப் பார்த்தபோதுகூட மிகவும் இளமையாகக் காணப் பட்டீரே! இரண்டு மூன்று வருடத்துக்குள் இவ்வளவு மாறுதலா? இப்போது தங்கள் முகத்தில் முதுமை தலே காட்டிவிட்டதே! அதோடு தங்களுக்கு ஏதோ உள்ளே வியாகி யிருப்பதாக முகத்தின் மிலுமினுப்பிலிருந்து தெரி கிறது-ஆமாம்; தாங்கள் ஏன் இன்ஷியூர் செய்துகொள் ளக்கூடாது? தங்களுக்குப் பின்னல் தங்கள் மனைவி மக்க ஆககு à. பேருதவியாக இருக்குமே!’ என்று நெடுநேரம் அனைத்து வளைந்து பேசிக் கடைசியாகத் தம் தாண்டிலைப்

- - - - - -- ... . - 密”。 y: : : : - -

இப்பேச்சைக் கேட்டு என் தந்தைக்கு ஒரு பக்கத்தில் கோபமும்,மற்ருெரு பக்கத்தில் சிரிப்பும் வந்தது. அவர் அம் இன்ஷியூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம் 111

மனிதனைப் பார்த்து, ஓகோ இதுவா இதற்கா இவ்வளவு நேரம் சிரமப்பட்டீர். முதலிலேயே கூறியிருந்தால், உமக்கு இத்துணே கஷ்ட மேற்படாதபடி ஒரே வார்த்தையில் பதில் சொல்லி யனுப்பியிருப்பேனே! பாவம்' என்ன செய்வது? நீர் மேற்கொண்டுள்ள வேலை அப்பேர்ப்பட்டது. நான் இதற்கு முன்பே பல கம்பெனிகளில் இன்வியூர் செய்திருக்

கிறேனே!” என்று இரக்கமாகச் சொன்னுர். -

அம்மனிதர் என் தந்தை கூறியதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர் மேலும் பேசத் தொடங்கி, தாங்கள் இன்வியூர் செய்துகொள்வது மாத்திரம் போதாது. தாங் கள் நடத்திவரும் மோட்டார் கம்பெனியையும் இன்வியூர் செய்யவேண்டும். ஏனென்ருல் அதற்குத் தீவிபத்து முதலிய ஏதேனும் ஏற்பட்டுப் பெரு நஷ்ட முண்டானல், கவலை வேண்டியதேயில்லே. இன்வியூர் செய்து வைத்திருந்தால் டைடனே அந்த நஷ்டத்தை ஈடு செய்துவிடலாம். எங்களது இன்ஷியூரன்ஸ் கம்பெனி இந்தியாவிலேயே பெரிய மூல கனத்தில் நடப்பதாகும். சதுர்புஜ தாஸ், சோடா காஸ்-இன் வியூர் கம்பெனி யென்ருல் உலகத்தில் எப்பாகத்திலுள்ள வர்களுக்கும் தெரியுமே! எனவே, தாங்கள் அவநம்பிக்கைப் என்று அளந்துகொண்டே போகையில் ” • . . . . . . . . . . . نتیجہ iT سس! فL என் தந்தை இடைமறித்து, போதும்; போதும். உமது இன்ஷியூான்ஸ் புராணத்தை நிறுத்தும். நான் கூறியது உன் காதில் விழவில்லையா எற்கனவே, பல கம்பெனிகளில் இன் வியூர் செய்துவிட்டேன்? இனிச் செய்ய முடியாது. நீர் இங்கு பிரயாசை எடுத்துக் கொள்வதில் பயனில்லை. வேறு எங்கேனும் போய்ப்பாரும்” என்று சிறிது அழுத்தமாகவே கூறினர். .

இன்வியூரன்ஸ் கம்பெனி ஏஜண்டு கெஞ்சும் பாவனை காகப் பல்லக் காட்டி, தாங்கள் பெரிய சீமான், அப்படி 112 இவ்வுலகத்தைத் திரும்பிப் பாரேன்

சொல்லி விடப்படாது. தாங்கள் இதிலும் பாலிஸிதாரராய்ச் சேர்வதில் பாதகமொன்று மேற்பட்டு விடாது.............. ..” என்று மேலும் எதோ கூற முயன்ருர்.

என் தந்தை ஆத்திரத்தோடு எழுந்து, மரியாதையாய்ச் சொன்னல் கேட்கமாட்டீர், நீர் இப்போது வெளியே போகப் போகிறீரா? @వుడిur?’ என்று கேட்டார்.

ஏஜண்டு. அவசரப் படாதீர்கள். சிறிது யோசித்துப் பாரும்................ ’ என்று கூறிக்கொண்டே எழுந்து என் தந்தையருகே சென்று பணிவாக கின்ருர்.

என் தந்தை கோபத்தைத் தாங்கமாட்டாமல், அடே சாமா ராமா? இங்கு வாடா!” என்று கூறினர்.

அதேசமயம் கதவைத் திறந்து கொண்டு, என் தங்தை யின் சிநேகிதர் ஆலால சுந்தர முதலியார் வந்தார். அவர் பின்னே ராமன் வேகமாக வந்தான். ' ' ' to

ஆலால சுந்தர முதலியார் துழையும்போதே, "என்ன செட்டியார் காலையில் ஆர்ப்பாட்டம்! தாங்கள் போட்ட கூச்சலில் பங்களாவே அதிர்ந்துபோச்சே!............” என்று: கூறிக்கொண்டே வந்தவர், என் தந்தையின் எதிரே நிற்கும் எஜண்டைப் பார்த்து ஆச்சரியத்தோடு, "இவ்வளவு காலே. யில் இங்கு நீர்.................... ’ என்று வார்த்தையை முடிக்காமலே வாயைப் பிளந்து நின்ருர். - -

முதலியாரைக் கண்டதும் ஏஜண்டு முகம் இருண்டது. வாய் திறவாது திகைத்து கின்று விட்டார். -

ஆலாலசுந்தர முதலியாரும், இன்வியூான்ஸ் கம்ப்ெனி எஜண்டும் ஒருவரை யொருவர் பார்த்ததும் நடந்துகெர்ண்ட் மாதிரியையும் மாறுதலையுங் கண்ட் என் தந்தை, என்ன முதலியார்; இவரை உமக்குத் தெரியும் போலிருக்கிறதே இன்ஷியூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம் 113.

உமது நண்பரா என்ன?....................” என்று வியப்பாகக் கேட்டார். - -

எனக்கு ஆவலும் ஆச்சரியமுங் காங்க முடியவில்லை. இனி, மறைந்திருக்க விரும்பாமையால், கதவைத் திறந்து கொண்டு இவ் வறையுள் நுழைந்து என் தந்தையின் பின்னே நின்று அங்கு நடப்பதை கவனிக்கலானேன்.

ஆலால சுந்தர முதலியார் என் தந்தையின் கேள்விக் குப் பதிலாக, 'இவரைத் தெரியாதவர்கள் கூட உலகத்தி லிருக்கிருர்களா என்ன? நீங்கள் கேட்குங் தோரணையைப் பார்த்தால், இவரை இதற்குமுன் உங்களுக்குப் பழக்க மில்லையென்று தெரிகிறது. இது ஒரு பெரிய ஆச்சரியந்தான். உலகாதிசயங்களி லொன்றென்றே இதைச் சொல்லவேண் டும். ஏனென்ருல், இத்துணை பெரிய சீமாளுகிய நீங்கள் இவ்வளவு நாட்களாக இவரது தரிசனத்தைப் பெருதது உங்களுடைய புண்ணியமோ! அவரது துரதிர்ஷ்டமோ!இல்லையில்ல்ே; வாய் தவறிக் கூறிவிட்டேன்-உங்களுடைய துரதிர்ஷ்டக்கான். # * * * * * * * ’ என்று அவ் ஏஜண்டைக் கடைக்கணித்துக்கொண்டே கூறினர்.

எனக்கு சிரிப்புக் தாங்கவில்லை. களுக்கென்று ஈகைத்துவிட்டேன், பாவம்! அந்த மனிதரது கிலே முன் னிலையிலும் மோசமாய்விட்டது. முகம் சுருங்கிவிட்டது. தலையைத் தொங்கப்போட்டுவிட்டார். அதிகாலையில் தன் முயற்சி பலிக்காது போனதால் ஏற்பட்ட ஏமாற்றம்தான் குறிவைத்த 'மனிதரின் மனக்குறிப்பறியாது பேசி அவர் கோபத்துக் காளான அவமானம்-தன் குட்டு களெல்லாங் த்ெரிந்த ஒருவரின் பரிகாசப்பேச்சு..இவை யெல் ல்ாம் ஒன்றுசேர்ந்து அவரது எண்சாண் உடம்பும் ஒரு சாளுகி அவர்ை கில்ே குலையச் செய்துவிட்டது. இவ்வளவு #14 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

நிகழ்ச்சிகளும் தம் மினத்தவராகிய ஆடவர் முன்னிலையி லேயே கடந்திருந்தாலும், அவர் அவ்வளவாக அவமான உணர்ச்சியால் மனங் குன்றி யிருக்கமாட்டார். பெண் ணெதிரே-அதிலும் என் போன்ற ஓர் இளம் பெண் ணெதிரே-அம்மனிதர் தம் விஷயங் தெரிந்த ஒருவரால் பரி கசிக்கப்படுவது-அவள் எளனமாகச் சிரிப்பது-என்ருல், ஆண்மகனென்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் எவனுக் குத்தான் அவமான முண்டாகாது? எனவே, அந்த இன்வி யூரன்ஸ் ஏஜண்டு வாப் திறந்து ஒன்றுஞ் சொல்லாமல், என் தந்தையின் பக்கங் திரும்பிமட்டும் ஹாட்டைத் தாக்கி வங் தன மளித்துவிட்டு, எங்களையெல்லாம் ஏறிட்டுப் பார்க்கா மல் வெகு வேகமாக வெளியே போய்விட்டார்.

அவர் ஒர் அடி வெளியே எடுத்து வைத்தாரோ இல் லேயோ ஆலால சுந்தர முதலியார் நாங்களிருந்த அறையே அதிர்ந்து போகும்படியாகக் கைகொட்டிச் சிரித்தார். அவ் வாறு சிரித்தபோது அவரது தொந்தி குலுங்கியதைக் கண்டு எனக்கு நகைப்பேற்பட்டாலும், அந்த ஏஜண்டின் பரிதாப மான கிலேமைக்காக மனம் வருந்தினேன்.

என் தந்தை ராமனே வெளியே போகும்படி சைகை செய்துவிட்டுத் தம் சிநேகிதரைப் பார்த்து, உட்காருங்கள் முதலியார்-என்ன அந்த ஆசாமியை உங்களுக்குத் தெரியுமா?’ என்று மீண்டுங் கேட்டவண்ணம் தாமும் ஒரு சோபாவில் உட்கார்ந்தார். -

ஆலாலசுந்தர முதலியார் எதிரிலுள்ள மற்ருெரு சோபாவில் அமர்ந்த வண்ணம், தெரியாம லென்ன? உங் கணப் போன்ற பணக்காரர்கள் அவனைத் தெரிந்துகொள் ளாமலிருக்க முடியாது. நீங்கள்மட்டும் இதுவரை அம் மனிதனது கண்ணில் அகப்படாமல் இருந்தது எவ்வாறு இன்ஷியூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம் 115

என்றுதான் இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். 莎

அதற்குப் புல னகப்படவில்லை. அவன் எதிரில் சொல்லி பவை பரிகாச வார்த்தைகளல்ல; அவ்வளவும் உண்மை சொல்லிய தோரணையில் வேண்டுமானுல் கேலிப் பேச்சாக இருந்திருக்கும். (தந்தையின் பின்னே சோபாவைப் பிடித் துக்கொண்டு கிற்கும் என்ன நோக்கி) குழந்தை என்ன! ஏதோ ஒரு மாதிரியாக இருக்கிறதே!-சுந்தரி என்னம்மா! நான் அம்மனிதனிடம் நடந்துகொண்ட மாதிரி உனக்குப் பிடிக்கவில்லேயா என்ன? நான் அநாகரிகமாக நடந்து கொண்டதாக எண்ணுகிருயா? உன் அபிப்பிராயம் என்ன இப்படி வந்து உட்கார்த்து சொல்” என்று கேட்டார்.

தந்தையும் என்னேத் திரும்பிப் பார்த்தார். ஆகவே நான் நின்ற இடத்தை விட்டு நடந்து அவர்களுக்கருகே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்த்து, அப்படி யெல்லாம் ஒன்றும் கினேக்கவில்லே அண்ணு' காலையில் வந்து அப்பாவை மிகவும் தொந்தரவு படுத்திவிட்டார் அந்த மணி த்ர். ஆனலும் அவர் முயற்சி பலிக்காததோடு இத்தனே பேரிடையே அவமான மடைந்தாரே என்று கருதும்போது தான் சிறிது கஷ்டமாயிருந்தது. உங்களைக் கண்டதும் அம் மனிதர் முகம் எவ்விதமாக விகாரமடைந்தது தெரியுமா? ஏன்? அண்ணு நீங்க ளென்ன அவருக்கு விரோதியா?” என்று அறியாமையோடு கேட்டேன்.

முதலியார் புன்சிரிப்போடு, கான் என்ன! அவ்வளவு கெட்டவணு அம்மா?-தன்னல மொன்றே கருதி மற்றவர் களுக்குத் தொந்தரவு கொடுக்கும் தடியர்களுக்கு நான் விரோதிதான்: அத்தகையோர் பகைமையை நான் வரவேற் கிறேன்.இம்மனிதன் தான் பிழைப்பதற்காக எத்தனைபேருக் 116 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

குத் தொந்தரவு கொடுத்து வருகிமுன் தெரியுமா என்னிடம் ஒரு முறை இப்படித்தான் வந்து சங்கடப்படுத்தின்ை. அவனிடமிருந்து தப்புவது பெரிய பிரமாதமாகப் போய்விட் டது. அச்சமயத்தில் இம்மனிதன் விஷயம் தெரியாததல்ை, கெளரவமாகவே பேசிப் பக்குவமாக அனுப்பிவிட்டேன். அதற்கப்புறம் பல இடங்களில் இம் மாதிரியே நடந்து கொண்டு வருவதைப் பார்த்த பிறகு தான் அவனுடைய அயோக்கியத்தனமெல்லாம் வெளியாயிற்று. அதிலிருந்து எனக்கு அவன்மீது ஆக்கிரமுண்டாயிற்று. அவனே இனி எங்குக் தலைகாட்ட விடக்கூடாது என்று அன்றிருந்து ர்ே மாளித்துக்கொண்டேன். கன் விஷமத்தனம் தெரிந்துவிட் டது என்று அறிந்த அம் மனிதனும் என்னைக் கண்டால் கடுங்குகிமுன்-என்னதான் வயிற்றுப் பிழைப்புக்கு வழி தேட வேண்டுமென்ருலும், கெளரவமான முறையில் நடந்துகொள்ள வேண்டாமா? சுகாத முறைகளைக் கைக் கொள்வானேன்?” என்று ஆயாசமாகக் கூறினர்.

என் தந்தை சாவதானமாக கம் போன்றவர்களைப் பாலிஸிகாராகச் சேர்ப்பதற்குத் தகாத முறை என்ன வேண்டி யிருக்கு? பீடிகை யெதுவும் போடாமல் வெளிப் படையாகப் பேசி இன்வியூர் செய்துக்கொள்ள விரும்பு பவர்களைச் சேர்த்துக்கொண்டு, விரும்பாதவர்களை விட்டு விட்டுப் போவதுதானே!” என்ருர்.

முதலியார், ஐயையோ! உமக்கு இது சம்பந்தமாக ஒன்றுமே தெரியாது போலிருக்கிறதே! இன்வியூான்ஸ் ஏஜண்டோ மற்றெந்த எஜண்டோ, காகரிகள்ோசரி தன் கள் காரியங்களைச் சித்தி செய்து கொள்வதற்கு என் ಶ್ಲೆ: முேறைகளைக் கையாளுகிருர்கள் தெரியுமா? அதி: இன்விழான்ஸ் ஏஜண்டின் மாற்றம் 117

லும் இந்த ஏஜண்டு பலே பேர்வழி. இவ்வித அயோக்கிய சிகாமணிகளுக்கு அக்ர ஸ்தானம் வகிப்பவன். அவன் உங் களிடம் சாதாரணமாக வந்து பீடிகை போட்டுப் பேசிவிட் டுப் போப்விட்டா னென்று நினைக்கிறீர்களா! உங்களைத் தன் வலையில் வீழ்த்துவதற்கு ஏதேனும் சூழ்ச்சி செய்து விட்டே வந்திருப்பான்-ஆமாம். அவன் தானகவே உங்க ளிடம் வந்தான?” வேறு யாராகிலும் சிபார்சு செய்து அப் புறம் வந்தான?” என்று வினவினர்.

என் தந்தை சிறிது திகைத்து, தாளுகத் தான் வந் தான்’ என்று பதிலளித்தார். -

முதலியார் சிறிது நேரம் சும்மா இருந்துவிட்டு, உங் களை யாரேனும் ஜோஸியர் வந்து பார்த்தாரா?” என்று ஆழ்ந்த யோசனையோடு கேட்டார்.

இதைக் கேட்டதும் நானும் என் தந்தையும் வியப் படைந்தோம். என் தங்தை, ஆமாம். சசிராம ஐயர் அந்த சாஸ்திரியை அறிமுகப்படுத்தினர். அந்த ஜோஸியர் வந்து பார்த்தது உமக்கு எப்படி ஜோஸியம் தெரியும்? அவரைவிட நீர் பெரிய ஜோஸியரா யிருக்கிறீரே!” என்று கூறினர்.

முதலியார் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்துவிட்டது போன்ற ஒன்றைக் கண்டு பிடித்துவிட்ட வர்போல் மகிழ்ந்து, 'நான் ஒன்றும் ஜோஸியனன்று: தகதிண வைக்க வேண்டுமே என்று பயப்பட வேண்டாம். -இதில் தான் விஷய மிருக்கிறது. இந்த சாஸ்திரி உம் மைப் பற்றியும் வியாபார, குடும்ப விஷயங்களைப்பற்றியும் என்ன சொன்னன்' என்று கேட்டார். :

என் தந்தை முன்னல் ஜோஸியர் வந்து தம்மைப். பார்த்துச் சொல்லிய விஷயங்களை யெல்லாம் ஒன்றுவிடாது, 118 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கூறி, அகளுல் காமும் கம் மனைவியும் கவலை யுற்றதாகவும், இரவெல்லாம் அதே சிந்தனையாக இருந்ததாகவும் விவ

முதலியார், பார்க்கிரா! இவ்வித மெல்லாம் ஒரு ஜோஸியன் ஜாதகங்களைப் பார்த்துக் கூறினல், யாருக்குத் தான் கவலே யேற்படாது? இச்சமயத்தில் இக்கஷ்டங்களே நிவர்க்கித்துக் கொள்வதற்கு வழி யேற்படாதா என்று எங்கி எதிர் பார்ப்பது மனிதராய்ப் பிறந்தவர்களுக்கு இயல்பு தானே!” என்ருர். -

ஆம்” என்றேன் தான். 'இவ்வாறு நீர் ஆகுல முற்றிருக்குஞ் சமயத்தில், இன்று காலே இந்த எஜண்டு உம்மையும் கம்பெனியையும் இன்வியூர் செய்து வைக்கும்படிக் கேட்டது பொருத்த மல் லவா! இன்னும் சபல சித்தமுடையவராக நீங்கள் இருக் 'தால் அவர் வந்து மெல்லக் கேட்ட உடனே சம்மதித்திருக்க மாட்டீரா? இவ்விடத்திலும் பாவம்! அம்மனிதர் வைத்த குறி தவறிவிட்டது” என்று முதலியார் அநுதாபப்படுவது போல் பேசினர். *

ன்ன் தந்தை சிறிது பொறுமையை இழந்து, என்ன அண்ணு கூடமாகவே ஏதேதோ சொல்லிக்கொண்டு. போகிறீரே விஷயத்தை விவரித்துக் கூறுங்கள். ஜோஸியர் வந்ததற்கும் இவ் ஏஜண்டுக்கும் என்ன சம்பந்தம்' என்று. கேட்டார்.

முதலியார், அப்படி கேளுங்கள். இந்த ஏஜண்டு உங் கள் போன்ற பணக்காரர்களே இன்வியூரன்ஸில் மாட்டி வைப்பதற்குப் பல சூழ்ச்சிகளைக் கையாள்வது வழக்கம் என்று முன்னே கூறினே னல்லவா? அவைகளில், ஜோஸி யரை முன்னே அனுப்பி, பின்னர்த் தான் வருவது ஒரு: இன்ஷியூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம் 1.19%

முறையாகும். அம் முறைப்படி இம்மனிதர், உங்களைப் பற்றி உங்கள் சிநேகிதர் யாரிடமோ விசாரித்துத் தெரிந்து கொண்டிருக்கிருர். அப்புறம் இவரது கையாளான சாஸ் திரியிடம் விஷயத்தைக் கூறி, நீங்கள் இன்வியூர் செய்து கொள்வது அவசியம் என்று உங்கள் மனதுக் கேற்படும் படி ஜோஸியஞ் சொல்ல வேண்டுமென்று அனுப்பியிருக் கிரு.ர். அதன்படி அந்த சாஸ்திரி உங்களிடம் வந்து வாயில் வந்தவாறு உளறிக் கொட்டி வீணுக வருந்துமாறு செப் திருக்கிருன். அந்த சாஸ்திரி கூறிய ஜோஸியத்தைக் கேட்டு உங்களுக்கு உண்மையிலேயே கெட்ட காலம் வந்து விட்ட தாக அஞ்சி வருந்தினர்களா இல்லையா? மறைக்காதீர்கள் உண்மையைக் கூறுங்கள்’ என்று குதுனகலமாக வினவினர்.

என் தந்தை, இப்போது எல்லாம் விளங்கிவிட்டது. நான் வீணுகவன்ருே மனம் வருந்தினேன்? நாளுகிலும் பரவா யில்லையே பாவம், பேதையாகிய தனலசஷ்மியு மல்லவா மிகவுக் துயருற்றிருக்கிருள். இன்னமும் அந்த ஜோஸியன் உளறியவைகளையேதான் எண்ணிக்கொண் டிருப்பாள்-அவளுக்குதான் துன்பப்படுவதோ சொத், தெல்லாம் போய்விடுவதோ பெரிதல்ல. அவள் உயிருக் குயிராக கினைத்துக்கொண்டிருக்கும் புவனவுக்கு ஏதோ 'தத்து ஏற்படுமென்று பிதற்றினனே அம் மடையன்: அதைத்தான் பிரமாதமாகக் கருதி செஞ்சங் கரைந்து கொண்டிருப்பாள்-ஆ என்ன உலகம் தங்கள் வயிறு. வளர்ப்பதற்கு-தங்கள் மனைவி மக்கள் நன்முக வாழ்வ. தற்கு-பிறரைத் துன்புறுத்திப் பணம் பறிக்க வேண்டுமா! தேகத்தை உழைத்து - அறிவை உபயோகப்படுத்தி-கல்ல வழியில் பணம் சம்பாதிக்க இவ். அயோக்கியர்களுக்குத் தெரியாதா ஆளப் பார்த்தால் ஆடம்பரமாகக் காணப் 龔20 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

படுகிருன். அவன் செய்வதோ இவ்வித சனத்தொழில்! இதனலேயே, முதலியார் எனக்கு வர வர இந்தமாதிரி மனிதர்களேயே பார்க்க பிடிக்கமாட்டே னென்கிறது’ என்று ஆயாசத்தோடு கூறினர்.

நான் முதலியார் கூறிவந்த வரலாற்றைக் கேட்டுக் திகைத்துப் போய்விட்டேன். உலகில் மக்கள் தங்கள் பிழைப்புக்காக இவ்வித கேவலமான முறைகளே யெல் லாமா கையாளுகிருர்கள்?' என்று அதிசயித்தேன்.

முதலியார் என் தந்தை கூறிய மொழிகளைக் கேட்டு மன முருகிவிட்டார் என்று கினைக்கிறேள். அவர் மேலே பேசவில்லை. இதல்ை எங்களிடையே ஒருசில நிமிஷங்கள் அமைதி கிலவியது. நான் சிறிதுநேரம் இவ் விஷயத்தைப் பற்றிச் சிந்தித்திருந்துவிட்டு, பின்னர், என் தந்தையையும் முதலியாரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இச் சயமம் அவ்வறையின் சுவரில் மாட்டப்பட் டிருந்த கடியாரம் ஒன்பது மணி அடித்தது. இதல்ை என் தந்தையின் சிந்தனே கலந்திருக்கவேண்டும். எனவே, அவர் திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவர்போலத் தம் இருக்கையை விட்டு எழுந்தவண்ணம், அது போகட் டும் அண்ணு சம் குழந்தை புவின என்னமோ ராஜதானி கலாசாலைக்குப் போக விருப்பமில்லையென்று சொல்கிறது. எழும்பூரில் எதோ பெண்களுக்கென்று தனியாகக் கலா சாலே யேற்பட்டிருக்கிறதாமே உங்களுக்குத் தெரியுமா? வங்காளத்திலிருந்து வந்த ரீமதி மஹிளாதேவி என்ற பெண்மணி அக் கலாசாலையை நடத்துகிமுராம். அங்கு சென்று பார்த்து எல்லாம் ஒழுங்காக இருந்தால், புவன வைச் சேர்த்துவிட்டு வர்லாமென்று நினைக்கிறேன்.உங்கள் அபிப்பிராயமென்ன? நீங்களும் வருகிறீர்களா? அண்ணா” என்று கேட்டார்.

முதலியாரும் எழுந்து நின்று, என்னைப் பார்த்துக் கொண்டே, “சுந்தரி காரணமில்லாது ராஜதானிக் கலாசாலைக்குப் போக மாட்டேனென்று சொல்லாது. ஆதலால், இதில் நாம் யோசிக்க வேண்டியதென்ன இருக்கிறது? வாருங்கள்; போவோம். எழும்பூரில் அந்த டியூடோரியல் கலாசாலை இருக்கிற இடம் தெரியுமா சுந்தரி?” என்று கேட்டார்.

நான், “தெரியாது” என்று சொல்லி விட்டு, எழுந்து உள்ளே போய், என் தந்தை குறிப்பிட்ட ‘இந்து’ பேப்பரைத் தேடியெடுத்துக் கொண்டு, முதலியாரிடம் அக்கலாசாலை விளம்பரத்தைக் காட்டினேன். சிறிது நேரத்திற்கெல்லாம் உள்ளே சென்ற என் தந்தை உடுத்துக் கொண்டு வரவும், நாங்கள் மூவரும் மோட்டாரில் அக்கலாசாலை இருக்குமிடத்தை நோக்கிப் புறப்பட்டோம்.