உள்ளடக்கத்துக்குச் செல்

உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/உள்ளகப்

விக்கிமூலம் இலிருந்து
13. உள்ளகப் போட்டிகள்
(INTRAMURAL COMPETITÍONS)

Intramural என்ற ஆங்கிலச் சொல்லுக்கு with in the walls அதாவது நான்கு சுவர்களுக்குள்ளே எபுைற பொருளாகும்.

ஒரு நிறுவனம் அல்லது பள்ளி, கல்லூரிக்குள்னே தடிை பெறுகின்ற போட்டிகளை உள்ளகப் போட்டிகள் என்று நாம் அழைக்கலாம்.

கோக்கங்கள்

1. குறிப்பிட்ட ஒரு விளையாட்டு செயல்களுக்கான திறமைகளை வளர்த்து, மாணவர்களைத் திறமையாகவும்களாக்க, உள்ளகப் போட்டிகள் உதவுகின்றன. 2. எல்லா மாணவர்களுக்கும் சம வாய்ப்பு என்கிற, முறையில், (பள்ளி) மாணவர்கள் அனைவரும், அதிக எண்ணிக்கையில் போட்டியில் கலந்து கொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.

3. தலைமையேற்றுப் பிறரை வழி நடத்தவும், தலைமை வகிப்பவர்களின் வழி நடந்து பின்பற்றிச் செல்ல வும் கூடிய பேராண்மை குணங்களை வளர்த்துவிட.போட்டி கள் உதவுகின்றன.

4. மகிழ்ச்சி, கேளிக்கை, சந்தோஷம், திருப்தியில் மாணவர்கள் திளைக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு, போட்டிகளை நடத்துகின்ற அனுபவங்கள் தருவது, பாடத் திட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது.

போட்டிகளை நடத்துவது, போட்டிகளில் அதிகாரி نجینه (தளாகப் பணியாற்றுவது, போன்ற காரியங்களில் நல்ல அனுபவங்களைத் தந்து, ஆற்றலை வளர்த்துத்தரவும் உள்ள கப் போட்டிகள் உதவுகின்றன.

உள்ளகப் போட்டிகளை கடத்தும் முறைகள்

உள்ளகப் போட்டிகளை நடத்துவதற்கு முன்பாக, ழ்ேக்காணும் குறிப்புகளைக் கண்டறிந்து, கடைபிடிப்பதுதல்லது. 1. நிறுவனத்தின் தன்மை (மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்து படிக்கும் நிறுவனமா, வீட்டிலிருந்து வருபவர்களா என்பதற்கேற்ப).

2. நிறுவனம் இருக்கும் இடத்தின் தட்ப வெப்ப அமைப்பு.

3. இருக்கின்ற வசதிகள் (ஆடுகளங்கள் உதவிப் பொருட்கள், உதவியாளர்கள் முதலியன).

4. பொருளாதார வசதி.

5. போட்டிகள் நடத்தக் கிடைக்கும் நேரம்

6. மாணவர்கள் பெரிதும் விரும்பிப் பங்கேற்கும் விளையாட்டுகள்.

7. சக ஆசிரியர்களிடமிருந்து கிடைக்கின்ற உதவி

போட்டிகளுக்காகப் குழு பிரித்தல்

1. மாணவர்களை , அவரவர்கள் திறமைக்கும் சாமர்த்தியத்திற்கும் ஏற்ப, பல பிரிவுகளாகப் பிரித்து போட்டியிடச் செய்யலாம்.

2. அதிகத் திறமையுள்ளவர்கள் திறமையுள்ளவர்கள், திறமை குறைந்தவர்கள் என்று மூன்று பிரிவுகளாக்கி, குழுக் களைப் பிரிக்கலாம்.

3. விடுதியில் தங்கிப் படிப்பவர்கள் அதிகம் இருந்து, விடுதிகள் ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தால், விடுதிகளுக் கிடையே போட்டிகள் என்று நடத்தலாம்.

4. விடுதிகள், வீட்டிலிருந்து வருபவர்கள், இப்படியும் போட்டிகள் நடத்தலாம். விடுதிகள் பல இருப்பதால், அந்தந்த விடுதி ஒரு குழுவாகும். வீட்டிலிருந்து வருபவர்களை, அந்தந்த ஏரியா பார்த்துப் பிரித்து, பல குழுக்களாக்கியும் போட்டியிட வைக்கலாம்.

5. விடுதிகள் இல்லாத பள்ளிகள், நிறுவனங்களில், வகுப்பு வாரியாகப் பிரிக்கலாம் : சிறுவர், இளையோர். மூத்தவர் என்றும் பாகுபடுத்தலாம்.

6 . கல்லூரியாக இருந்தால், துறை வாரியாகப் (Department) பிரித்து, போட்டிகள் நடத்தலாம்.

இப்படிப்பட்ட போட்டிகளை நடத்திட, அதையும் வெற்றிகரமாக நடத்திட, அதற்கென்று நிர்வாகக் குழு ஒன்றை அமைத்திட வேண்டும். அந்தக் கமிட்டியில் இடம் பெறுபவர்கள் பற்றி, இனி அறிந்து கொள்வோம்.

உள்ளகப் போட்டி நடத்தும் குழு (Intramural Committee)


1. உள்ளகப் போட்டிக் குழு இயக்குநர் (Intramural Director)


மூத்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவரே இயக்குநராகப் பொறுப்பு ஏற்பார். மற்ற உடற்கல்வி ஆசிரியர்களில் ஒருவர், துணை இயக்குநராகப் பொறுப்பேற்று உதவுவார். மற்ற வகுப்பு ஆசிரியர்களும் போட்டி நடைபெறுகிறபோது, உதவி செய்வார்கள்.


2. குழுத் தலைவர்களும், குழுத் துணைத்தலைவர்களும்

ஒவ்வொரு குழுவின் தலைவரும், உதவித் தலைவரும், போட்டி நடத்தும் குழுவில், உறுப்பினராகி விடுகிறார்கள் இவர்களில் ஒருவர் செயலராகவும், துணைச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இந்தப் போட்டிக் குழுதான், போட்டி நடத்துவதற்குரிய விதிமுறைகளை உருவாக்கித் தரும்.

செயலர் பொறுப்பேற்றுள்ளவர், போட்டிக்குழு நடத்துகின்ற கூட்டம், அதில் நிறைவேற்றப்படுகின்ற நீர்மானங்கள் போட்டிகள் பற்றிய போட்டி நிரல், போட்டிகள் , வெற்றி எண் குறிப்பேடுகள், போன்றவற்றைப் பதிவு செய்து, பத்திரப்படுத்தி வைத்திடல் வேண்டும்.

எதிர்ப்பு மனு ஏதாவது வந்தால், அத்னைத் தீர்க்கும் பொறுப்பு, போட்டிக் குழுவுக்குரியதாகும்.

3. மாணவர்களுக்குப் பிடித்த பொருத்தமான வினை யாட்டுக்களைத் தேர்ந்தெடுத்தல்

முதன்மை விளையாட்டுக்கள், ஒடுகளப் போட்டிகள், குட்டிக்கரணமடித்தல், கோபுரப் பயிற்சிகள், அணி நடை முறைகள், தற்காப்புக் கலைகள், தாளலயப் பயிற்சிகள் எல்லாம் போட்டி நடத்துவதற்கு பொருத்திசி" செயல்களாகும்.

இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதனை போட்டிப் பட்டியலில் சேர்த்து, கமிட்டியிடம் அனுமதியும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

4. கால நேர அவகாசம்

உள்ளகப் போட்டிகள் ஆண்டு முழுவது? நடத்தப்பட லாம். கால் ஆண்டு, அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் காலத்திற்குள்ளே தான் (First and Second Term) அதிகமான போட்டிகள் நடத்தப்பட வேண்டியிருக்கும்.

முன்றாவது பருவம் (Term) முழுத் தேர்வுக்குரிய கால மானதால், அப்பொழுது போட்டிகள் குறைக்கப்பட்டு, படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற அவசியத்திற்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

பள்ளி முடிந்த பிறகு உள்ள நேரம். விடுமுறை நாட் கனில் போட்டி.கள் நடத்துவது பொருத்தமாக இருக்கும். பந்தயங்களை ஒரு வாய்ப்பு முறை அல்லது தொடர் வாய்ப்பு முறையில் நடத்தலாம்.

5. வெற்றி எண் வழங்குதல்

வெற்றி பெறுகிற குழுக்களின் வரிசைக்கு ஏற்ப, வெற்றி எண்கள் வழங்கப்படல் வேண்டும். முதல் குழுவுக்கு 5 , இரண்டாவது குழுவுக்கு 3, மூன்றாவது குழுவுக்கு ,ே நான்காம் குழுவுக்கு 1 என்பதாக போட்டி முடிந்தவுடன் வழங்கி, அதை வெற்றி எண் அட்டவணையில் பதிந்து விட வேண்டும்.

ஆண்டு இறுதியில், அனைத்துப் போட்டிகளும் முடிந்த பிறகு, அதிகமான வெற்றி எண்களைப் பெற்றிருக்கிற குழுவே, உள்ளகப் போட்டி வெற்றிக் குழு (Intramural Champion) என்று முடிவு செய்ய வேண்டும்.

6. வெகுமதியும் பாராட்டும்

போட்டிகளில் வெற்றி பெறுகிறவர்களுக்கு, நினைவில் இருப்பதுபோல், நல்ல பரிசுகளை வழங்கலாம். ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு வெற்றிக் கேடயம் அல்லது வெற்றிக் கோப்பையை வழங்கலாம். சுழல் கோப்பைகளும் தரலாம்.

உள்ளகப் போட்டிகள் புகழ்ப் பலகை (Honour Board) என்று ஒன்றை அமைத்து, அதில் வெற்றிக் குழுக்களின் பெயர்களைப் பொறித்து வைக்கலாம்.

வெற்றிக் குழுவைப் புகைப்படம் எடுத்தும், புகழ்ப் பலகையில் ஒட்டி, வெற்றியாளர்களைப் பெருமைப்படுத்தலாம்.

உள்ளகப் போட்டிகள் பற்றி சில குறிப்புகள்

1. சிறுவர், இளையோர், மூத்தோர் என்று மாணவர்களைப் பிரித்து, அந்தந்தப் பிரிவுக்குள் போட்டிகள் நடத்தி, எல்லா மாணவர்களையும் போட்டிகளில் பங்கு பெறச் செய்ய வேண்டும்.

2. திறமையானவர்களாக குழுக்களில் இடம்பெறச் செய்து, அந்தந்த ஆற்றல் மிக்க குழு, அப்படிப்பட்ட குழுக்களுடன் போட்டி இடுகின்ற சூழ்நிலையை அமைத்துத் தருதல் வேண்டும்.

3. பள்ளிகள் சார்பாக விளையாடுகிற திறமைமிக்க ஆட்டக்காரர்கள், உள்ளகப் போட்டிகளில் பங்கு பெறாமல் செய்ய வேண்டும்.

4. பல போட்டி ரில் ஒரு சில மாணவர்களே பங்கு பெறுவதைத் தவிர்த்து ஓரிரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கு பெறலாம் ன்ற விதியை ஏற்படுத்திக் கட்டுப்படுத்துவது நல்லது.

5. பள்ளிகளில் இருக்கின்ற இடவசதி, உதவி சாதனங்கள், பொருளாதார வசதி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொாவது போல, போட்டிகளை நடத்த வேண்டும்.

6. முழு அளவில் பங்கு பெறுகிற குழுக்களுக்கு, அதிகமாக வெற்றி எண்களை வழங்க வேண்டும்.

7. மாற்றாட்டக்காரர்களை வெளியே நிறுத்திவிட்டு, நிரந்தர ஆட்டக்காரர்களே ஆட்டம் முழுவதையும் ஆடி விடுவார்கள். மாற்றாட்டக்காரர்கள் குறைந்தது 10 நிமிடம் ஆடவேண்டும். (கால் பந்தாட்டிம்) அல்லது 4 வெற்றி எண்கள் எடுக்கும் (கைப் பந்தாட்டம்) வரையிலாவது ஆடுகளத்திற்குள் இடம் பெற்று ஆடவேண்டும் என்கிற வினை, கட்டாயப்படுத்தி, நடைமுறைப்படுத்த வேண்டும்.

8. தனிப்பட்ட வெற்றியாளர்கள், அல்லது வெற்றிக் குழுவிற்கும் பாராட்டும் அளித்து கெளரவிக்க வேண்டும்.

இத்தனைக் கருத்துக்களும், மாணவர்கள் மிகுதியான எண்ணிக்கையில், உள்ளகப் போட்டிகளில் பங்கு பெற ஊக்குவிக்கும். உற்சாகப்படுத்தும். போட்டிகளை வெற்றி மயமாக்கும்.