உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/குழுப்போட்டிகளும்

விக்கிமூலம் இலிருந்து

12. குழுப் போட்டிகள் (Group Competitions)

உடற்கல்விப் பாட வகுப்புகளில், பல்வேறு விதமான, உடல் இயக்கச் செயல்கள், அடிப்படைத் திறமைகளுடன் விளக்கம் தந்து கற்பிக்கப் படுகின்றன.

ஆர்வமுடன் அவற்றைக் கற்றுக் கொள்கிற மாணவர்கள் பயிற்சிகணைத் திறம்படச் செய்து, திறமைகளை வளர்த்துக் கொள்கின்றனர்.

வளர்த்துக் கொண்ட திறமைகளை, மற்றவர்களுடன் போட்டியிட்டுத் தெரிந்து கொள்ளவும், மேலும் மேலும் திறமைகனை வளர்த்துக் கொள்ளவும் கூடிய வாய்ப்புகளை, குழுப் போட்டிகள் கொடுக்கின்றன.

அதற்குரிய வாய்ப்புக்ளாக அமைவன-வகுப்புகளுக் கிடையே போட்டிகள். மாணவர் பிரிவுகளுக்கிடையே போட்டிகள் ஆகும்.

குழுப் போட்டிகளில் கிடைக்கும் நன்மைகள்

1. குழுப் போட்டிகள், மாணவர்களிடையே ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ஊட்டி வளர்க்கின்றன.

2. பங்கு பெற வேண்டும் என்று மாணவர்களின் விருப்பம் மேலும் விரிவடைகிறது. வேகம் கொள்கிறது.

3. இதனால் விளையாட்டுத் திறமைகளின் வளர்ச்சி மேலோங்குகிறது.

4. ஒவ்வொரு மாணவரும் தனிப்பட்ட முறையில் பங்கு பெறுவதில் ஏற்படுகிற மகிழ்ச்சியையும், தனது குழுவுக்குத் தன் பங்கினை ஆற்றுகிறோம் என்ற திருப்தியையும் பெறுகின்றனர்.

5. போட்டிகளில் பங்கு பெறுவதால், குறிப்பிட்ட அந்த விளையாட்டில் உள்ள பல விதிமுறைகளை, தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

6. விளையாட்டு போட்டிகளின் மூலமாக, தலைமை ஏற்று நடத்தல்; தலைமைக்குப் பணிதல், ஊக்க முடன் இறுதிவரை போட்டியிடுதல், வெற்றி தோல்வியால் பாதிக்கப்படாத மனம் பெறுதல் ஆகிய பண்பான குணங்கள் மென்மேலும் வளர்ச்சி பெறுகின்றன.

இப்படிப்பட்ட குழு விளையாட்டுகளுக்குப் பொருத்த மான விளையாட்டுக்களை சூழ்நிலை பார்த்து, தேர்ந்தெடுக்க வேண்டும்.

இறு விளையாட்டுக்கள், முன்னோடி விளையாட்டுக்கள், சாகசச் செயல்கள். தனித்திறன் போட்டிகள், தனிநடைப் வயிற்சிகள், ஒழுங்கு முறை உடற்பயிற்சிகள், கோபுரப் பயிற்சிகள், ஜிம்னால்டிக் பயிற்சிகள் எல்லாம் சிறப்பான மூழுப் போட்டிகளாகும்,

குழுப் போட்டிகளை கடத்தும் முறைகள் 1. 10 அல்லது 15 மாணவர்கள் ஒரு குழுவில் இருப்பது போல, பல குழுக்களைப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு குழுத் தலைவனை நியமிக்கவேண்டும்.

2. குழுக்களைப் பிரிக்கிறபோது, திறமையில், உடல் வலிமையில் சமமாக மாணவர்கள் இருப்பது போல, பிரிக்க வேண்டும்.

3. ஒவ்வொரு குழுவையும் அழைப்பது போல, ஏதாவது ஒரு பெயர் தரலாம். (பூக்கள், மிருகங்கள் பறவைகள், நிறங்கள் ஏதாவது ஒன்றில்)

4. முன்னதாகச் சுற்றுக்கொடுத்த விளையாட்டுக்களில் ஏதாவது ஒன்றைப் போட்டி விளையாட்டாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. குறிப்பிட்ட நேரத்திற்குள், முடிவு பெறுவதாக, அந்தப் போட்டி அமைய வேண்டும்.

6. குழுக்கள் பெறுகிற வெற்றி நிலைக்கு ஏற்ப, வெற்றி எண்களை அளிக்க வேண்டுல். முதல் இரண்டு, மூன்று, நான்கு நிலைகளுக்காக 5, 3, 2, 1 என்று வெற்றி எண்கள் தரலாம். 7. 200 சதவிகிதம் வருகை தருகிற குழுக்களுக்கு, சிறப்பு வெற்றி எண்கள் கொடுக்கவும் செய்யலாம்.

8. வருடத் தொடக்கத்திலிருந்தே, போட்டிகளைத். தொடங்கி, நடத்திக் கொண்டே வந்து, வருடக் கடைசியில் பரிசுகள் தரலாம்.

இதற்கான வெற்றி எண் அட்டவணையை பின் பக்கத்தில் காண்போம்.

பள்ளியின் பெயர் : ................................................................................. வகுப்பு : ....................................................................... போட்டியின் காலம் : ............................................................................. தொடக்கம் : ..............................................................

முடிவுத் தேதி : ......................................................


...................................................... ஆசிரியரின் கையொப்போம்