உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/கட்டளைகள்

விக்கிமூலம் இலிருந்து
9. கட்டளைகள் கொடுக்கும் முறை
(COMMANDS)

சென்ற பகுதியில் கட்டளை முறை என்ற ஒரு கற்பிக்கும் முறையையும், அதில் இரு பகுதியாக உணர்த்தும் கட்டளை முறை. தொடர்ந்து செய்யும் கட்டளை முறை என்று உள்ளன என்பதையும் அறிந்து கொண்டோம்.

இந்த இரு பகுதிகளையும் செயல்படுத்த, எவ்வாறு: கட்டளைகள் கொடுப்பது என்பதை, இப்பகுதியில் காண்போம்.

1. உணர்த்தும் கட்டளை முறை (Response Command)

இதை மறு செயல் கட்டளை முறை என்றும் கூறுவார்கள்.

இந்த முறையை மூன்று நிலையாகப் பிரித்துக் கட்டளையிட வேண்டும்.

1. விளக்க முறை (Explanation)

2. நேரம் தரும் முறை (Pause)

3. செயல்படச் செய்தல் (Execution)

இம் மூன்றையும் ஒன்றாக்கி எப்படி கட்டளை கொடுப்பது?

கைகளை மேற்புறமாக உயர்த்து என்பது ஆசிரியர் கட்டளையிட வேண்டிய முறை

1. கைகளை மேற்புறமாக -சத்தமாக அதிகாரத்துடன் கட்டளையிடுதல்.

2. பிறகு சிறிது நேரம் தந்துவிட்டு

3. உயர்த்து என்பதைக் கட்டளையிடுதல்.

செய்ய வேண்டிய பயிற்சியினை முதல் நிலையாகக் கொண்டு விளக்கி, இடையில் நிறுத்தி நேரம் தந்து, இறுதியாக உரத்த குரலில் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுவதுதான் சிறந்த கட்டளை கொடுக்கும் முறையாகும்.

2. தொடர்ந்து செய்யும் கட்டளை முறை
(Rhythmic Command)

கற்றுக் கொண்ட ஒரு பயிற்சியை, மாணவர்கள் தொடர்ந்து, திரும்பத் திரும்ப, தாளலயத்துடன் செய்ய வேண்டியிருக்கிற பொழுது, அதற்காக உதவுவது தான். இந்தக் கட்டளை முறை.

இந்தக் கட்டளையையும் 5 நிலையில் கூற வேண்டும்.

1. விளக்கம் (Explanation)

2. நேரம் தருதல் (Pause)

3. செயலைத் தொடங்குதல் (Execution)

4. தொடர்ந்து தாளலயத்தில் எண்ணுதல் (Rhythmic Counting)

5. பயிற்சியை நிறுத்தல் (Halting)

உதாரணத்திற்கு ஒரு பயிற்சியைப் பார்ப்போம்.

கைகளை பக்கவாட்டிலிருந்து, தலைக்கு மேலே உயர்த்தி, பிறகு பக்கவாட்டில் கொண்டு வந்து, தொங்கவிடு. என்பது தான் பயிற்சி.

இந்தப் பயிற்சியை 12345678 என்று எண்ணத் தொடங்கி

87654321 என்று நிறுத்து.

இவ்வாறு விளக்கி, நேரம் தந்து, செயலைத் தொடங்கிச் செய்யக் கற்றுத்தந்த பிறகு, அடுத்ததாக, தொடர்ந்து செய்யுங்கள் என்று கட்டளை இடவும்.

அதை இப்படி ஆங்கிலத்தில் கூற வேண்டும்.
Continuously and Rhythmically, class... Begin

தொடங்கு என்று சொல்லிய உடனேயே, முன் விளக்கியது போல 12345678 என்று மேல் நோக்கி எண்ணி, பிறகு கீழ்நோக்கி இறக்கிக் கொண்டுவரவும்.

இறக்கிவருகிற போது 43 என்று வந்தவுடன், பயிற்சியை மாற்ற வேண்டுமானால், பயிற்சியை - மாற்று (Exercise change) என்று மாற்றிக் கூறவேண்டும்.

பயிற்சியை நிறுத்திட வேண்டுமானால், 8லிருந்து இறக்கிக் கொண்டுவந்து 4, 3 என்று வந்தவுடன், பயிற்சியை நிறுத்து (Class Halt) என்று கூறி நிறுத்த வேண்டும்.

876543 பயிற்சியை நிறுத்து என்று இரண்டு எண்ணிக் கையில் பயிற்சியை நிறுத்துவது தான் சிறந்த முறை என்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

பயிற்சிகளை மாற்ற நேரிடும்போது, Next change என்றும் (அடுத்ததற்கு மாற்று); வலப்புறம் வகுப்பைத் திருப்பி பயிற்சியைச் செய்யச் சொல்கிற போது (Right-change) வலப்புறம் மாற்று என்றும்.

ஒன்று மாற்றி ஒன்றாகப் பயிற்சியைத் தொடரும்போசி (Alter-mate) மாறி மாறி என்றும் கட்டளையிடலாம்.

இப்படியாக வசதிக்கேற்றவாறு, மாணவர்களின் எளிதான இயக்கத்திற்கும்; துரிதமான செயல்களுக்கும், கட்டளைகளை மாற்றிக் கொண்டு, கம்பீரமாகக் கொடுக்கிறபோது, வகுப்பு மாணவர்களுக்கும் விறுவிறுப்பு இருக்கும். சுறுசுறுப்பு நிறைந்திருக்கும், செய்கையில் புதுப் பொலிவும் தெளிவும் சூழ்ந்திருக்கும்.

ஆகவே, கட்டளை கொடுக்கும் முறைகனை, கணக்காக கச்சிதமாக ஆசிரியர்கள் கற்றுத் தருகிற போது. கற்பிக்கும் கலையில் கவர்ச்சியும் எழுச்சியும் கரைபுரண்டு, காண்பதற்கு அரிய காட்சியாகத் திகழும்.