உலகம் பிறந்த கதை/சூரியனின் பிறப்பு

விக்கிமூலம் இலிருந்து

5. சூரியனின் பிறப்பு


சுமார் முந்நூறு கோடி ஆண்டுகள் முன்பு ஞாயிறு இருந்ததா? இல்லை. கிறிஸ்தவப் பெருமக்களது வேதத்திலே கூறியுள்ளபடி-இந்துமதக் கோட்பாடுகளிலே சொல்லியுள்ளபடி இந்தப் பிரபஞ்சம் அந்த காரத்தில் ஆழ்ந்து இருந்தது. இருள்! இருள்! எங்கும் ஒரே இருள். வெளிச்சமே இல்லை. பிரபஞ்சம் முழுதும் வாயுவே நிரம்பியிருந்தது. உஷ்ணவாயு. அது, கனத்தால் அமுக்கிற்று. அந்த அமுக்குதலால் விரிந்தது. விரிந்து கொண்டே இருந்தது. எவ்வளவுதான் விரிய முடியும்?

ஒரு கட்டத்தில் அது சிதறியது. சிதறல்கள் கோளமாயின. பல கோளங்கள் உருவாயின. அவற்றில் ஒன்றே சூரியன். மற்றவை பிற கிரகங்கள்.

இவ்விதம் தோன்றிய சூரியன் என்ற கோளம்-பிண்டம்-வாயு கோளம் சுருங்கியது.

சுருங்கச் சுருங்க, அதன் சூடும் அதிகம் ஆயிற்று. இதுவே, சூரியன் தோன்றிய கதை.

சூரியனுக்கு மகத்தான ஒளி எப்படி வந்தது? சூடு எப்படி ஏற்பட்டது? கவனிப்போம்.