உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்
Appearance
அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்
சி.என்.அண்ணாத்துரை
தோற்றம் | - | 15 - 9 -1909 |
தந்தை | - | நடராசன் |
தாய் | - | பங்காரு அம்மாள் |
பிறந்த ஊர் | - | சின்ன காஞ்சிபுரம் |
வாழ்க்கைத் துணை | - | இராணி அம்மையார் |
புனைபெயர் | - | சௌமியன், சமதர்மன், சம்மட்டி, ஒற்றன், ஆணி, பரதன் |
1929 - 1934 | - | சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ ஆனர்சு பொருளியல் பட்டப்படிப்பு |
11-2-1934 | - | முதல் சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்தது |
1-2-1936 | - | சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் 'பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும்காங்கிரசும்' பற்றிச் சொற்பொழிவு |
1936 | - | சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிகட்சி உறுப்பினராக நிற்றல் |
11-4-1937 | - | நீதிக்கட்சிச் செயற்குழு உறுப்பினராதல் |
1937 | - | விடுதலை, குடிஅரசு இதழ்களில் துணை ஆசிரியர் பணி |
9-12-37 | - | முதற்கவிதை, 'காங்கிரஸ் ஊழல்' விடுதலையில் |
26-9-38 | - | இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு நான்கு மாத வெறுங்காவல் |
13-1-39 | - | தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் இரங்கற் கூட்டத்தில் உரை |
18-1-39 | - | தமிழர் திருநாள் உரை நிகழ்த்துதல். |
10-2-39 | - | சென்னை கிறித்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர் |
6-1-40 | - | பம்பாயில் பெரியார் - அம்பேத்கார் உரையாடல் மொழிபெயர்ப்பு |
2-6-40 | - | காஞ்சியில் திராவிட நாடு பிரிவினை மாநாடு |
7-3-42 | - | 'திராவிடநாடு' கிழமை இதழ் தொடக்கம் |
14-3-43 | - | சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமாயணச் சொற்போர். |
5-6-43 | - | 'சந்திரோதயம்' நாடகம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடத்தல். |
19-8-44 | - | சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு அண்ணாதுரை தீர்மானம் நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் பெற்று மக்கள் இயக்கமாக மலர்தல். |
15-12-45 | - | 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' நாடக அரங்கேற்றம் - அண்ணா நடித்தல். |
மே 1946 | - | கருஞ்சட்டைப்படை மாநாடு - தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு |
29-7-46 | - | நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தருக்குப் பொற்கிழி வழங்கல் |
25-4-47 | - | 'வேலைக்காரி' நாடகம். |
1-6-47 | - | 'நீதிதேவன் மயக்கம்' நாடகம். |
15-8-47 | - | ஆகஸ்டு பதினைந்து 'விழா நாளே' என விளக்கம் தருதல். |
28-9-47 | - | தந்தை பெரியார் 69 வது பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை 'இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்.' |
14-1-48 | - | 'நல்ல தம்பி' திரையிடல் |
18-6-49 | - | தந்தை பெரியார் - மணியம்மை திருமணம். அண்ணா பிரிந்து நிற்றல். |
10-8-49 | - | 'மாலைமணி'- நாளிதழ் ஆசிரியர். |
17-9-49 | - | தி.மு.க. தோற்றம் |
18-9-49 | - | 'திராவிட நாடு' இதழில் 4, 18-4-48இல் வரைந்த கட்டுரைக்காக வழக்கு, நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல்; அரசுக்கு எதிர்ப்பு; பத்தாம் நாள் விடுதலை. |
12-1-50 | - | நாடெங்கும் பொங்கல் விழா உழவர் விழா எடுக்க அறிக்கை விடல். |
1950 | - | திருச்சிச் சிறையில் 'இலட்சிய வரலாறு' எழுதுதல். |
1951 | - | 'ஆரியமாயை' நூலுக்குத் தடை |
17-9-51 | - | திராவிட நாடு பிரிவினை நாள் அறிவித்தல். |
16-12-51 | - | தி.மு.க. முதல் மாநில மாநாடு. |
1-8-52 | - | சென்னையில் இந்தி எதிர்ப்பு அறப்போர் |
15-6-53 | - | 'நம்நாடு' நாளிதழ் தொடக்கம். |
13-7-53 | - | மும்முனைப் போராட்டம் - மூன்று மாதம் சிறை |
2-2-56 | - | தேவிகுளம், பீர்மேடு இணைப்புக்காகப் பொதுவேலை நிறுத்தம். |
29-4-57 | - | தமிழ்நாடு சட்டமன்றத் தி.மு.கழகத் தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல். |
9-6-57 | - | 'ஓம் லேண்டு' ஆங்கிலக் கிழமை இதழ் தொடங்குதல் |
2-3-58 | - | தி.மு.கழகத்தினை மாநிலக் கட்சியாக இந்திய அரசு ஒப்புதல் அளித்தல். |
24-4-59 | - | அண்ணாவின் தம்பியர் சென்னை மாநகராட்சி மன்ற ஆட்சியில் அமர்தல். |
1-8-60 | - | இந்தி எதிர்ப்பு மாநாடு செங்கையில் அண்ணா தலைமை உரை |
1962 | - | சம்பத் விலகல் குறித்து அண்ணா அறிக்கை |
26-2-62 | - | சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராதல். |
2-8-62 | - | விலைவாசி உயர்வுப்போர் சிறையில் - வேலூர் பத்து வாரம். |
17-11-63 | - | கட்டாய இந்தி - 17வது மொழிப் பிரிவு சட்டம் எரித்தல்; |
16-11-63 அன்றே கைதாகி, ஆறுமாதம் சிறைத்தண்டனை ஏற்றல். | ||
1-3-67 | - | தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் 138 பேர் தம்பியருடன் அண்ணா தமிழக முதல்வர் ஆதல். |
14-4-67 | - | 'தமிழ்நாடு' பெயரிட்டுப் பெருமை பெறல் |
10-1-68 | - | இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு எடுத்தல் |
8-9-68 | - | அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்குதல் |
4-1-69 | - | கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கடைசிச் சொற்பொழிவு. |
2-2-69 | - | புகழ் உடம்பெய்தல். |