என் சுயசரிதை/S. I. A. A.

விக்கிமூலம் இலிருந்து

S. I. A. A.

சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேஷன் என்னும் அச்சபையானது சென்னையில் கிரிக்கெட் (Cricket), டென்னிஸ் (Tennis) கால் பந்து (Foot ball) முதலிய விளையாட்டுகளைக் அபிவிருத்தி செய்வதற்காகவும் வருடந்தோறும் டிசம்பர் மாதம் பீபில்ஸ் பார்க் (People's Park) வேடிக்கை விநோதங்களை நடத்தவும் ரேக்ளா முதலிய பந்தயங்களை நடத்தவும் 1903-ஆம் வருஷம் சென்னை வாசிகள் சிலரால் எற்படுத்தப்பட்டது. அதில் நான் ஒருவனாய் இருந்தேன். அதுமுதல் பல வருடங்கள் கமிட்டி அங்கத்தினனாகவும் சில வருடங்கள் உபதலைவனாகவும் இருந்து அதன் காரியங்களைப் பார்த்துவந்தேன். தேகப் பயிற்சிக்கும் வியாயாமத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட இச்சபையின் தொடர்பை விடலாகாதென்றும், இப்போது என் முதிர் வயதிலும் அங்கத்தினனாக இருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=என்_சுயசரிதை/S._I._A._A.&oldid=1112748" இலிருந்து மீள்விக்கப்பட்டது