ஒப்பியன் மொழிநூல்/இடைச்சொல்
இடைச்சொல்
இடை ஒன்றன் இடம். இடு(கு)தல் சிறுத்தல், உடம்பில் இடுகிய பாகம் இடை. இடைாேல ஒன்றன் பாகமான இடம் இடை. ஒ. நோ. கண், கால், தலை, வாய், இடம் என்பது உண்மையான இடத்தையும் இடை என்பது 7ஆம் வேற்றுமை இடத்தையுங் குறிக்கும்.
பெரும்பாலும் பெயரிடத்தும் வினையிடத்தும் வருஞ் சொல் இடைச் சொல்.
இடைச்சொற்கள், பொருள் இடம் பயம்பாடு குன்றிய பொருண்மை என்பனபற்றி, நால்வகையாக வகுக்கப்படும்.
(1) பொருள்கள் குறிப்பு, வினா, ஐயம், உயர்வு, இழிவு, எச்சம், விளி, வியப்பு, காலம், இடம், பிரிநிலை, தேற்றம், முற்று, எண், பயனின்மை , பிறிது முதலியன.
(2) இடம் பற்றியவை முன்னொட்டும் பின்னொட்டும்.
(3) பயம்பாடு பற்றியவை வேற்றுமையுருபு, உவமவுருபு; பெயரீறு, வினையிறு, சாரியை, இனக்கச்சொல், இணைப்புச் சொல், வரிசைக்குறி என்பன.
இடைச்சொல் பெரும்பாலும் பயம் பாட்டைப் பொறுத்தது.
கா : போன்றான் (வி.), போல (இ); என்றான் (வி), என்று (இ.).
(4) குன்றிய பொருள சிவசிவா (சூசுவா). பார்த்தாயா பார் முதலியன.
இணக்கச்சொல் ஆம், சரி, நல்லது, ஆகட்டும் முதலியன:
இணைப்புச் சொல் நால்வகைய. அவையாவன :—
i கூட்டிணைப்புச்சொல் (Cumulative Conjuncion).
கா : ஏ, உம், என, அதோடு, அன்றியும், மேலும், இனி.
ii. விலக்கிணைப்புச்சொல் (Alternative Conjuuction)
கா : ஆயின், ஆனால், ஆனாலும், என்றாலும், இருந்தாலும்.
iii: மாறிணைப்புச் சொல் Adversative Conjunction)
கா : ஆவது, ஆதல், ஆயினும், அல்லது, எனினும்— ஏனும்.
iv. முடிபிணைப்புச்சொல் (Illative Conjuncion)
கா : அதனால், ஆதலால், ஆகையால், ஆகவே, எனவே வரிசைக்குறிகள் ஆம், ஆவது என்பன.
சாரியை, கரம் காரம் கான் என்னும் எழுத்துத் துணையொலிகள், சாரியை இடை நிலையென்று உண்மையில் சொல்லறுப்பில்லை.
கைலையங்கிரி =கைல என் கிரி, கூட்டாஞ்சோறும்= கூட்டு ஆம் சோறு. புளியம்பழம் = புளியின்பழம், ஆலங்காடு = ஆலம்+காடு.
வல்லோசையுள்ள தோன்றல் திரிதல் இரட்டல் ஆகிய புணர்ச்சிகள் முது பழந்தமிழில் இல்லை.
அறிஞன் என்பதில் நகரம் போலியே. அறிநன்—அறிஞன்.
அறிகின்றாள் — அறியுன்னான் — அறியுன்னன் — அறியுநன்—அறிஞன். னகரத் தோன்றுமுன் நகரமே வழங்கிற்று.
அசை நிலையென்று ஒரு சொல்லுமில்லை. பொருள் குன்றிய அல்லது பொருள் தெரியாத அல்லது தவறாகப் பிரித்த சொற்களையே அசைநிலையென்று இலக்கணிகள் கூறிவிட்டனர், அதனால் பிற்காலத்தார் அவற்றைப் பொருளின்றியும் வழங்கினர்.
அசைநிலைச் சொற்கள்
மா : “புற்கை யுண்கமா கொற்கை யோனே”
மாகொற்கையோனே என்று பிரிந்திசையும்,
மியா :கேளுமையா— கேளுமியா — கேள்மியா— கேண்மியா.
இக : 'கண்பனியான்றிக', ஆன்று இக = நிறைந்து விழஏ: செல்லுமையே — செமியே — சென்மியே — சென்மே. ஐயே-(இயே)-ஏ-ஏன். கா : வாருமே, வாருமேன்.
மோ: மொழியுமையோ—மொழியுமியோ—மொழிமியோ. மொழிமோ.
மதி: மதி = அளவு, போதும், செல்மதி=போ, அது போதும்.
அத்தை: அதை — அத்தை. ஒ. நோ. 'எத்தால் வாழலாம்.
இத்தை: இதை — இத்தை.
வாழிய: வியங்கோள்வினை.
மாள : 'தவிர்ந்தீகமாள.' மாள = முடிய, முற்றிலும்.
ஈ: சென்று+ஈ=சென்றீ = சென்றாய்.
யாழ: “யாழநின்“ = யாழ்போலும் இனிய நினது (கலி 18)
யா: பன்னிருவர் மாணாக்கர். யார் அல்லது யாம் என்பதன் ஈற்று மெய் விட்டுப்போயிருக்கலாம். யா என்னும் அஃறிணைப் பன்மை வினாப் பெயரே ஒரு காலத்தில் உயர் திணைக்கும் வழங்கிற்று:
கா:'இவள் காண்டிகா' காண்டி = பார், கா = காத்துக்கொள்:
பிற:'ஆயனையல்ல பிற' = ஆயனையல்லாத மற்றவை.
பிறக்கு : 'பிறக்கதனுட் செல்லான்.' பிறக்கு = பிறகு.
அரோ : அரன் என்பதன் விளி, அரோ = சிவனே.
போ : இது வெளிப்படை மறுப்புப் பொருளில் உலகவழக்கிலும் வழங்கும்.
மாதோ :மகடூஉ முன்னிலை. மாதோ = பெண்ணே.
இகும்:'கண்டிகும்.' இகும் = இடும். இடுதல் = கொடுத்தல்.
சின்: உரைத்து+ஈ = உரைத்தீ, உரைத் தீயினோர்— உரைத் தீசினோர்— உரைத்திசினோர். ஈ துணை வினை. ஈதல் கொடுத்தல் ஏன்றீயேன் (என்றிட்டேன்) — என்றியேன் — என்றிசேன் — என்றிசின்.
குரை: குரு + அ = குர —குரை=பெருமை. ஒ. நோ.குரு+ அவு = குரவு. குரவு+ அன் = குரவன் = பெரியோன் “பல்குரைத்துன்பம்”, “பெறலருங் குரைத்தே.”
ஓரும்: ஓர்=உணர்,ஒன்று “அஞ்சுவதோரும் அவா“ = அஞ்சுவதொன்றும் அவாவே ; (அல்லது) அஞ்சுவது அவா, அதை நீர் உணரும். அதனோரற்றே அதனொடு ஒரு தன்மைத்து. அன்றே = அவ்லவோ போலும் இருந்து முதலிய பிறசொற்கள் வெளிப்படை.
சில இடைச்சொற்கள் வீண் வழக்கால் பொருளிழந்துள்ளன. கா : ஊரிலே — ஏ ; மரத்தினின்றும்—உம்.