கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து

முன்னுரை சில ஆண்டுகளுக்கு முன்னால் 'மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு விழா இந்திய நாட்டில் மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டதை நாமறிவோம். இந்தச் சந்தர்ப்பத்தில் அகில இந்திய சமா தானக் கமிட்டியினர் உலகத்தின் பல்வேறு நாடு களைச் சேர்ந்த கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் வரவழைத்து, 1951-ம் ஆண்டின் இறுதியில் கல்கத்தா நகரில் மாபெரும். “தாகூர்..-கலை இலக்கியத் திருவிழா”* ஒன்றை நடத்தினார்கள். ஒன்றரை ஆண்டுக் காலம் திட்ட மிட்டு, சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவிட்டு, அந்த விழாவைப் பன்னிரண்டு நாட்கள் நடத்தினார்கள். அவ்விழா வுக்குச் சென்ற தமிழகத்து எழுத்தாளர்களில் நானும் ஒரு பிரதிநிதியாகச் சென்று, அதனைக் கண்டேன்; களித் தேன். விழாவுக்குப் பின்னர் வங்கத்திலுள்ள தமிழ்ப் பெருமக்கள் நடத்தி வரும் சங்கங்கள் எங்களுக்களித்த வரவேற்பில் பேசும்போது நான் பின்வருமாறு குறிப்பிட் டேன்: “தாகூர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்தவன் நான். இந்த அற்புதமான விழாவைக் கண்டேன்; களித்தேன். கவிஞரான் தாகூருக்குச் செய்யும் இத்தகைய கெளரவத்தைக் கண்டு, இந்தியன் என்ற முறையில் நான் பெருமை கொள்கிறேன், தமிழன் என்ற முறையிலோ பொறாமை கொள்கிறேன்! இவ்வாறு நான் குறிப்பிட்டபோது, சுப்ரமண்ய. பாரதியை மனத்தில் கொண்டுதான் நமது மகாகவி குறிப்பிட்டேன். பாரதியின் பெருமையை நாம் பூரணமாக உணரவும் இல்லை, உலகுக்கு உணர்த்தவும் இல்லை என்பதே . என் கருத்து. இந்த எண்ணத்தில் எழுந்த தர்மாவேசமான பொறாமை உணர்ச்சியே என்னுள் கிளர்ந்தது. இந்தப் பொறாமையுணர்ச்சியில் நியாயத்தன் மையும் உண்டென நான் கருதுகிறேன். சொல்லப்போனால் அந்த நியாயத் தன்மையை வலியுறுத்தும் சிறு முயற்சியே இந்நூல் எனலாம், ஆம், இந்த நூல் இந்திய நாடு கண்ட, இரு பெரும் தேசிய மகாகவிகளான தாகூரையும் பாரதி யையும் ஒப்பு நோக்குகின்ற ஒரு விமர்சனமேயாகும். மேலும் பாரதியைப் பற்றி நான் எழுதத் திட்டமிட்டுள்ள நூல் வரிசையில் இதுவும் ஒன்றாகும். பாரதியின் புதுமையும் புரட்சியும் மிகுந்த கவிதைகளுக்கு முதற் பெரும் ஞான் பிதாவாக விளங்கும் ஷெல்லியையும், பாரதியையும் ஒப்பு நோக்கும் எனது நால் (பாரதியும் ஷெல்லியும் ஏற்கெனவே வெளிவந்துள்ளது.

தாகூர், பாரதி ஆகிய இரு, பெருங் - கவிஞர்களிடமும், எனக்கு இளமை முதலே மிகுந்த ஈடுபாடும் மதிப்பும் உண்டு. மேற்குறித்த தாகூர் நூற்றாண்டு விழா நடை பெற்ற 1961-ம் ஆண்டில் நான் தாகூரின் நூல்களை மீண்டும் ஒருமுறை படிப்பதை எனது அவ்வாண்டுக் கடமைகளில் ஒன்றாகக் கொண்டிருந்தேன். அத்துடன் தாகூரைப் பற்றி வெளிவந்துள்ள நூல்களையும் விமர்சனங் களையும் தேடிப் பிடித்து படித்து வந்தேன். அவ்வாறு படிக்கும்போதே, " தாகூரையும் பாரதியையும் ஒப்பு ேநாக்கி ஆராய்ந்தும் வந்தேன், இதனை அறிய வந்த எனது மதிப்புக்குரிய, தலை சிறந்த பாரதி அன்ப ரான அமரர் ஜீவா அவ்விருவரையும் ஒப்பு நோக்கித் தமது "தாமரைப்" பத்திரிகையின் பாரதி மலருக்கு ஒரு கட்டுரை எழுதுமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். எனவே அந்தப் பத்திரிகையின் பக்க வரம்பு அனுமதிக்கும் அளவுக்குத் 'தாகூரும் பாரதியும்' என்று தலைப்பில் ஒரு சிறு கட்டுரை எழுதினேன். அதில் நான் கண்ட பிரதானமான முடிவுகளையெல்லாம் தொட்டுக் காட்டத்தான் முடிந்தது. இதன் பின்னர் அதே ஆண்டில் எட்டையபுரத்தில் நடந்த பாரதி விழாவிலும், வேறு பல இடங்களில் நடந்த விழாக் களிலும் இதே விஷயத்தைக் குறித்துச் சொற்பொழிவாற்றி னேன், அந்தக் கட்டுரையையும், சொற்பொழிலையும் இலக்கிய அன்பர்கள் நன்கு வரவேற்றார்கள். மேலும், அவர் 'களில் பலரும் எனது விமர்சனத்தை விரிவாக எழுதுமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்தத் தூண்டுதலின் விளைவே இந்நூல். ""? : '... '.. பாரதியையும் தாகூரையும் மிகவும் விரிவாக ஆராய்ந்து இருவரின் பல்வேறுபட்ட படைப்புக்களையும், பக்குவப் பாட்டையும், ஒப்புநோக்கிப் பெரியதொரு நூலை ஆக்கு இதற்கு விஷயமும் உண்டு; அதற்கான அவசியமும் உண்டு., அந்த அளவுக்கு விரிவாக எழுத ஆர்வம் இருந்தாலும், 'இந்த நூல் எனது இலக்கிய திருஷ்டி, காலக் குரலோடு ஒட்டிக் கவிதைப் படைப்பைக் காணும் கண்ணோட்டம் ஆகிய வற்றின் நோக்கில் சில பிரதானமான விஷயங்களை மட்டும் சுட்டிக்காட்டும் விமர்சனமாகவே அமைந்துள்ளது எனலாம். பாரதியாரைப் பொறுத்த வரையில் அவர் இலக்கிய கர்த்தா வாக மட்டுமல்லாமல் அரசியல் வாதியாகவும் திகழ்ந்தார். 'நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்குழைத்தல்' என்ற அவரது மணிவாக்கில் அவர் இலக்கியத்தையும் அரசிய லையும் இணைத்தே காண்கிறார். இந்த வாக்குக் கொப்பு!, அவரிடத்தில் நாடும் மொழியும், அரசியலும் இலக்கியமும் பின்னிப் பிணைந்தே இருந்தன. அவற்றைப் பிரித்துக் காண்பதற்கில்லை. காண முயல்வது பாரதியை உடல்வேறு. "உயிர்லேறு எனப் பிரித்து, வைத்து ஆராய்வது போலத்தான் இருக்கும். இந்த உண்மையை நெஞ்சில் நிறுத்திக் கெண்டுதான் நான் இந்த ஒப்பு நோக்கு விமர்சனத்தை எழுதியுள்ளேன். - இதுவே இந்த விமர்) சனத்தின் அடிப்படை நோக்கும் போக்குமாக உள்ளது என்று சொல்லலாம். இந்த நூலில் நான் தெரிவித்துள்ள கருத்துக்களிலும், கண்டுள்ள முடிவுகளிலும் கருத்து வேற்றுமை கொள்ப வர்கள் இருக்கலாம். அவற்றை மறுப்பவர்களும் வெறுப்பு! வர்களும் இருக்கலாம். எனினும் நான் கொண்டுள்ள கருத்துக்கள், கண்டுள்ள முடிவுகள் ஆகியவற்றுக்குத் துணை நின்ற ஆதாரங்கள், மேற்கோள்கள் ஆகியவற்றை நான் போதுமான அளவுக்கு வழங்கியுள்ளேன் என்றே கருதுகிறேன். எவ்வாறாயினும் இந்நூலில் ' இலக்கிய நேயர்கள் தமது 'சிந்தனையைத் தூண்டும் பல புதிய, துணிந்த கருத்துக்களை நிச்சயம் காண்பார்கள் என்பதே என் நம்பிக்கை . மார்ச், 1966 - ரகுநாதன்