கணினி களஞ்சியப் பேரகராதி/F

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
F

F : ஃஎப் : 'Frequency' என்பதன் குறும்பெயர். இது அலை வெண் அல்லது அதிர்வெண் குறியீடாகும்.

F2F எஃப். 2. எஃப் : முகத்துக்கு நேராக என்று பொருள்படும் Face to Face என்ற தொடரின் குறுஞ்சொல். இணையத்தில் மின்னஞ்சலில் பயன்படுத்தப் படுகிறது.

fabricated language : உருவாக்கப்பட்ட மொழி; புனைவு மொழி : சங்கேத மொழி போன்றது.

fabrication உருவாக்கம்; புனைவு : விரும்பும் விதிமுறைகளுக்கேற்ப பொருள்களை உற் பத்தி செய்யும் செயல்முறை.

face : முகம்; முகப்பு : கணினி வரைகலைகளில், கூம்பு அல்லது பிரமிட் போன்ற பன்முக வடிவப்பொருள். பல பக்கங்கள் சேர்ந்து உருவாகும் இத்திடப்பொருள், 'திடப் பொருளின் முகங்கள்' என்று அழைக்கப்படும். சான்றாக, ஒரு கூம்புக்கு ஆறுமுகங்கள்.

FACE 'Field Alterable Control Element' என்பதன் குறும் பெயர்.

face time : பார்வை நேரம் : மற்றொருவருடன் நேருக்கு நேர் சந்தித்து செலவிட்ட நேரம். இணையம் வழிச் சந்திப்பை குறிப்பதில்லை.

facilities : வசதிகள் : கணினி மற்றும் தரவு தொடர்பு மையங்களில் பயன்படுத்தப்படும் பருப்பொருள் கருவிகள், மின் சக்தி , தரவுத் தொடர்பு கருவிகள் மற்றும் பிற வகையறாக்களைக் குறிப்பிடும் பொதுவான தொடர்.

facilities management : வசதிகள் மேலாண்மை : ஒரு தரவு செயலாக்க அமைப்பினை மேற் பார்வையிட்டு இயக்க, ஒரு தனிப்பட்ட சேவை நிறுவனத்தைப் பயன்படுத்தல்.

facility வசதி : 1. கணினி அமைப்பின் உற்பத்தித்திறனை முடிவு செய்ய கணினியை எளி தாகப் பயன்படுத்த முடிவதை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளுதல். 2. இரண்டு முனை களுக்கிடையில் மின்சாரப் பரி மாறலுக்கான வழித் தடம்.

facing pages : எதிர்ப்பக்கங்கள் : ஒரு கட்டுமானம் செய்யப்பட்ட ஆவணத்தில், ஆவணத்தைத் திறக்கும்போது ஒன்றை யொன்று எதிர்நோக்கியவாறு உள்ள இரு பக்கங்கள். இரட்டை எண்ணுடைய பக்கம் இடப் பக்கத்திலும், ஒற்றை எண் பக்கம் வலப்புறத்திலும் இருக்கும்.

facsimile : தொலைநகலி : 1. படங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றை அனுப்புதல். உருக்களை அனுப்பும் கருவி மாற்றி அனுப்ப, அவற்றைப் பெறும் நிலையத்தில் மீண்டும் உருவாக்கி ஒரு வகையான காகிதத்தில் நகலெடுத்தல். தொலை நகலெடுத்தல் என்றும் அழைக்கப்படும். 2. மூல வண்ணத்தை உள்ளது உள்ளபடி நகலெடுத்தல். 3. உண்மை நகல் மறு ஆக்கம். Fax என்று சுருக்கி அழைக்கப்படுகிறது.

facsimile transceiver : தொலை நகல் போக்கு வருவி : உருவங்களை மின்னணு அனுப்பு முறையில் அனுப்பவும் பெறவும் பயன்படுத்தும் அலகு.

facsimile transmission : தொலை நகல் செலுத்தம்; தொலை நகல் அனுப்பீடு.

factor : காரணி : கணித முறைப் படி செயற்படக்கூடிய ஒரு தரவு கூறு அல்லது மாறுவகை மதிப்புரு.

factor analysis : காரணி ஆய்வு : முக்கியத்துவத்தின் தன்மையையும், மிக முக்கிய காரணிகளையும்முடிவுசெய்ய பல காரணிகளின் இடைச்செயலை ஆய்வு செய்யும் கணிதத் தொழில் நுட்பம்.

factor, blocking : தடு, காரணி .

factorial : படிவரிசைப் பெருக்கப் பேரெண் : 1-லிருந்து குறிப் பிட்ட எண்ணுக்கு எல்லா முழு எண்களையும் (Integer) பெருக்கு வதன் மூலம் கணித்து காரணிகளை உருவாக்குதல். காரணியத்தைக் குறிப்பிடப் பயன்படுத் தப்படுகிறது. சான்றாக 4! என்பது 1 x 2 x 3 x 4-க்கு சம மானது; n! என்பது 1 x 2 x 3 x4 x .... (n - 1 ) x n -க்குச் சமமானது.

factor, scale : அளவுகோல் காரணி. அளவீட்டுக் காரணி.

facts : பொருண்மைகள் : சிறிய /நடுத்தர வணிகத்திற்கு வசதிகள் (பொதுப் பேரேடு, வரவுக் கணக்குகள், செலுத்தக் கணக்குகள்) உடைய நிதியியல் கணக்கீட்டுப் பொறியமைவு.

fact template : பொருண்மைப் படிம அச்சு; நிகழ்வுப் படிம அச்சு.

failsafe : பழுது தடுப்பி.

fail - safe system : பழுது தடுப்பு அமைப்பு. பெரும்சேதம் ஏற்படுவதைத் தடுக்க உருவாக்கப்படும் அமைப்பு. fail - soft system

fairness

இதனால் சில வசதிக் குறைவும் ஏற்படலாம். சான்றாக, கணினி கட்டுப்பாட்டு சாலை விளக்கு அமைப்பில், ஒரு தவறு ஏற்பட்டால், விளக்குகளை நிறுத் வதற்குப் பதிலாக, பழுது தடுப்பு அமைப்பின்படி, சாலை விளக்குகள் யாவும் சிகப்பு நிறத்தைக் காட்டும். மின்சக்தி நிலைய இயக்கத்தில், வெப்பம் அளவுக்கதிகமாகும்போது மின் வழங்குதல் துண்டிக்கப்படும்.

fail - soft system : பழுதாயினும் பணியாற்றும் அமைப்பு : ஒரு கணினி அமைப்பின் சில பகுதிகள் மட்டும் செயல்படவில்லை என்றாலும் தரவுச் செயலாக்கம் தொடரும் அமைப்பு. வழக்கமாக, அதைத் தொடர்ந்து செயல்திறனும் சீர்கேடு அடையும். பழுது தடுப்பு அமைப் பில் சொல்லப்பட்ட அதே எடுத்துக்காட்டைப் பயன்படுத்திக் கூறுவதென்றால் கோளாறு ஏற்படும்போது சாலை விளக்குகள் மஞ்சள் ஒளிவீசும், வெப்பம் அதிகமாகும்போது இந்த அமைப்பின்படி, மின்சக்தி வரும் ஆரம்ப பகுதியை நிறுத்தி விட்டு, அவசர சாதனமாகிய மாற்று மின்கலம் மூலம் மின் சக்தி வழங்குவது தொடரும்.

failure : பழுது : கணினி அல்லது கணினி சார்ந்த சாதனம் சரியாகச் செயல்படாமை அல்லது செயல்படா நிலை. மின்சாரம் நின்று போனால் கணினி செயல்படாமல் போகிறது. இதைத் தவிர்க்க மின் கலன் உடைய காப்பு மின்சாதனம் (யுபிஎஸ்) பயன்படுத்தலாம். கணினியை முறைப்படி நிறுத்தி வைக்கும் மின்சாரம் கிடைத்துக் கொண்டிருக்கும்.

failure prediction : பழுது முன்னறிவித்தல் : குறிப்பிட்ட துணை பாகங்கள் அல்லது கருவிகள் பழுதடையப்போவதை முன்ன தாகவே மதிப்பிட்டு அவற்றை நீக்கி வேறு ஒன்றை அந்த இடத் தில் பொருத்தி பழுது ஏற்படும் முன்பு சரி செய்து முடித்தல்.

failure rate : பழுது வீதம் : ஒரு கருவி செயல்படுவதிலுள்ள நம்பகத் தன்மையை அளவிடும் முறை. ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவில் எத்தனை முறை பழுதாகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது.

Fair child : ஃபேர்சைல்ட் : 1974இல் F-8 என்ற நுண்சிப்புவினை உருவாக்கிய ஒரு நிறுவனம். அந்தச் சமயத்தில் இந்தச் சிப்பு பெருமளவில் விற்பனையாகியது.

fairness : உறுதி; நயமை : ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் fair pointer

ஒரு கணினி அமைப்பில் தேவைப்படும் அனைத்துச் செயல்களும் உத்திரவாதமளிக் கப்படும் நிலை.

fair pointer : நடுநிலைச் சுட்டுமுள் : இன்டெல் 80 x 86 கூறிடப்பட்ட முகவரி எண்ணில், கூறு, மாற்றச்சு இரண் டையும் உள்ளடக்கியுள்ள ஒரு நினைவக முகவரி எண்.

fair use : நியாயமான பயன் நுகர்வு : சட்டப்படி பயன்படுத்தல் : பதிப்புரிமை பெற்ற ஒரு மென்பொருளை சட்டப்படி பயன்படுத்திக் கொள்ளுதல்.

falcon , ஃபால்க்கன் : சேமித்து வைக்கப்பட்ட செயல்முறை நினைவுப் பதிப்பானாக அல்லது தறியாகச் செயற்படும் காகித நாடா.

fall back : சார்ந்து நிற்றல் : அவசர சூழ்நிலையில் மாற்று ஏற்பாட்டைப் பயன்படுத்துதல். காலமுறை அமைப்பில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டால், மாற்று நிரலாக்கத் தொடர், தரவுத் தளம் உடனடியாக செயல்படுத்தப்படல்.

fallout : விழுந்துவிடல், சிதறல் : மின்னணு பாகங்கள் பழுது அடைதல். புதிய கருவியை எரிய வைக்கும்போது சில சமயங்களில் இது ஏற்படுகிறது.

567

fan

family of computers : கணினிக் குடும்பம் : ஒரு அளவை முறை வடிவமைப்பில் உள்ள வேகம் மற்றும் முதன்மை நினைவகத் திறன்களில் மட்டும் மாறுபடுகிற மையச் செயலக அலகுகளின் தொடர். குறைந்த செலவுள்ள மெதுவாகச் செல்லும் மையச் செயலகத்தில் இருந்து துவங்கி கணினி அமைப்பின் மற்ற பகுதிகளை மாற்றாமல் வேகமாக இயங்கும் மையச் செயலகங்களை மட்டும் வேலைப் பளுவிற்கேற்ப மாற்றிக்கொள்ளுதல்.

FAMOS : ஃபமாஸ் : Floating Gate Avalanche injection-MOS என்பதன் குறும்பெயர். PROM போன்ற மின்சக்தி மூலம் சேமிப்பகச் சாதனங்களை உருவாக்கும் தொழில் நுட்பம்.

fan! : விசிறி : கணினி உட் பாகங்கள், லேசர் அச்சுப்பொறிகள் தொடர்ந்து செயல்படும் போது வெப்பம் உண்டாகிறது. இதன் காரணமாய் அக்கருவி செயல்படாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. இக்குறையைத் தவிர்க்க அக்கருவிகளுக்குள் விசிறி பொருத்தப்படுவதுண்டு. கணினி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது தொடர்ந்து ஒரு மெல்லிய இரைச்சல் ஒலி கேட்டதுண்டா? அது விசிறி யின் சத்தமே. fan

fan! : பிரி; பிரிப்பு : அச்சுப் பொறியின் இரண்டு தாள்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாமல் வரச் செய்வது.

fanfold paper : விசிறி மடிப்புத் தாள் : ஒவ்வொரு பக்கத்தையும் குறிக்க விசிறி போன்று மடித்து, தொடர்ந்து இடைவெளிகளில் துளைகள் இடப்பட்ட ஒரு நீண்ட தொடர் காகிதத் தாள்.

fan - in உள்வீச்சு : ஒரு இலக்க முறை உறுப்புக்கு உள்ளீடு செய்யப்படும் சமிக்கைகள்.

fan - out : வெளிவீச்சு : 1. மோசமான நிலையிலும், டீடிஎல் (TTL) சாதன வெளியீடு ஏற்றக் கூடிய டீடிஎல் அலகுகள். 2. ஒரு வடிவமைக்கப்பட்ட நிரலாக்கத் தொடரில் ஒரு குறிப்பிட்ட மாடுலின் கீழ் அமைக்கப் படும் நிரலாக்கத் தொடர் கூறு களின் (Modules) எண்ணிக்கை.

fanzine : சுவைஞர் இதழ் : ஒரு குழு, ஒரு நபர் அல்லது ஒரு நடவடிக்கைமீது பற்றுக் கொண்டுள்ள சுவைஞர்களால் அத்தகைய சுவைஞர்களுக்காக இணையத்தில் மினனஞ்சல் வழியாக வழங்கப்படுகின்ற ஒரு இதழ்.

FAQ எஃப்ஏகியூ (அகேகே) : அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்று பொருள்

FAST

படும். Frequently Asked Questions என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு குறிப்பிட்ட பொருள்பற்றி பொதுவான வினாக்களும் அவற்றுக் குரிய பதில்களும் அடங்கிய ஒர் ஆவணம். இணையத்தில் செய்திக் குழுக்களில் புதிய உறுப்பினர்கள், ஏற்கெனவே பலமுறை பதிலளிக்கப்பட்ட கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்பதுண்டு. இப்படிப்பட்ட கேள்வி பதில்களைத் தொகுத்து நூலாக வெளியிடுவார்.

farad : ஃபராடு : தாங்கும் தன்மை அளவின் அலகு. 1 வோல்ட் திறன் அதனுள் அனுப்பப்படும்போது 1 கூலும் மின் ஆற்றல் அலகு சக்தியை அது சேமிக்குமானால் ஒரு தாங்கி யின் தாங்கும் திறன் 1 ஃபராட் என்று மதிப்பிடப்படுகிறது.

FAST . ஃபாஸ்ட் : 'மென் பொருள் திருட்டு எதிர்ப்பு கூட்டமைப்பி என்று பொருள். "Federation Against Software Theft" என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஒர் அமெரிக்க மென்பொருள் தொழிற் கழகம். இது கோப்புகளை மிக விரைவாக அனுப்புவதற்கு உதவுகிறது. கோப்பு முழுவதும் அனுப்பப்பட்டதும் பிழைதிருத்தம் நடைபெறுகிறது. fast-access storage : விரைவு அணுகு சேமிப்பகம்.

fastCAD : ஃபாஸ்ட் கேட் : நன்கு வடிவமைக்கப்பட்ட பயனாளர் இடை முகப்பு தயாரிப்பில் புகழ்பெற்ற'எவலூஷன் கம்ப்யூட்டர்ஸ்'என்ற அமைவனம் தயாரிக்கும் முழு அம்சங்களையும் கொண்ட PC CAD செயல் முறை. இதற்கு ஒரு கணித இணைச் செய்முறைப்படுத்தி தேவை.

fast core : விரைவு உள்மையம் : ஒரே செய்முறைப்படுத்தியில் செயல்முறைச் சேமிப்பகத்துக்குப் பயன்படுத்தப்படும் சாதனங்களைவிடக் குறைந்த அணுகுநேரம் கொண்ட ஒரு வகை உள்மையச் சேமிப்பகம்.

fast farward : வேகமாய் முன் நகர்.

fast fourier transform : விரைவு"ஃபூரியர்" உருமாற்றி : சிக்கலான குறியீடுகளை அடிப்படை அமைப்பான்களாகப் பகுக்கக் குறியீட்டுச் செய்முறைப்படுத்துதலில் பயன்படுத்தப்படும் ஒரு படிநிலை நடைமுறை.

fast line : விரைவு அனுப்பீட்டுத் தொடர்பு : தரவுகளை அனுப்பீடு செய்யும் வீதம் பெரும்பாலும்'பாட்' (Baud) என்ற அலகுகளில் குறிப்பிடப் படுகிறது. 'பிரஸ்டெல்'முறையில் பயன்படுத்து பவருக்கு 1, 200 பாட் வேகத்தில் அனுப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், தொலைபேசித் தொடர்புகளில் அதைவிட அதிகவேகத்தில் தரவுகள் இழக்கப்படுகின்றன. 'பிரிட்டிஷ் டெலிகாம்'என்ற அமைவனம் தயாரித்துள்ள தனி வகை நேரடித் தொடர்புகள், தரவுகளை 48, 000 அல்லது 96, 000 பாட் வேகத்தில் அனுப்ப வல்லவை. இவை விரைவு அனுப்பீட்டுத் தொடர்புகள் என அழைக் கப்படுகின்றன.

fast SCSI : வேக ஸ்கஸ்ஸி : ஸ்கஸ்ஸி-2 இடைமுகத்தில் ஒரு வகை. ஒரே நேரத்தில் எட்டு துண்மி (பிட்) களைப் பரிமாற்றம் செய்யும். வினாடிக்கு 10 மெகா துண்மி (மெகா பிட்) கள் வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக ஸ்கஸ்ஸி இணைப்பி 50 பின்களைக் கொண்டது.

fastwise SCSI : வேக/விவேக ஸ்கஸ்ஸி : ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் கொண்டது. FAT ஃபேட் : "கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் "File Allocation Table" என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

fatal error : முடிவான பிழை : ஒரு நிரலாக்கத்தொடர் இயக்கப் படும்போது ஏற்படும் எதிர்பாராத பழுது அல்லது பிற சிக்கல்களினால் கணினியானது தொடர்ந்து செயல்பட முடியாமல் போவது. முடிவான பிழை இல்லை எனில் சரியான முறையில் இல்லையென்றாலும் நிரலாக்கத் தொடர் சென்று கொண்டிருக்கும். நிரலாக்கத்தொடர் நின்றுபோகுமாறு செய்கின்ற ஒரு இயக்காளரின் தவறு அல்லது 'ராம்" நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள் அழிந்து போதல் போன்றவை முடிவான பிழைகளாகும் . Terminal Error என்றும் அழைக்கப்படுகிறது.

fat application : ஃ பேட் பயன்பாடு : பவர்பீசி பிராசசர் பொருத்தப்பட்ட மெக்கின்டோஷ், 68000 பிராசசர் பொருத்தப்பட்ட மெக்கின்டோஷ் ஆகிய இரு வகைக் கணினிகளிலும் செயல் படுத்தக்கூடிய ஒரு பயன்பாடு.

fat binary : ஃபேட் இருமம் : பவர்பீசி பிராசசர் அடிப்படையிலான மெக்கின்டோஷ், 68000 பிராசசர் அடிப்படையிலான மெக்கின்டோஷ் ஆகிய இருவகைக் கணினியிலும் செயல்படக்கூடிய ஒருவகை பயன் பாட்டு வடிவாக்கம்.

tatbits : பருமனான துண்மிகள் : தனிப்பட்ட திரை உறுப்புகளை மாற்றும் வகையில் திரையின் ஒரு பகுதியைப் பெரிதாக ஆக்குகிறது. வண்ணமிடும் ஒவிய நிரலாக்கத்தொடரின் தேர்ந்தெடுக்கும் முறை. எழுத்து அமைப்பு உருவாக்குவதில் பயனுள்ளது.

fat client : கொழுத்த கிளையன் : ஒருவகை கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் கிளையன் கணினி. இவ்வகை அமைப்பில் பெரும்பாலான அல்லது அனைத்துச் செயலாக்கங்களையும் கிளையன் கணினியே செய்து கொள்ளும். வழங்கன் கணினி மிகச் சிலவற்றைச் செய்யும் அல்லது எதையுமே செய்யாது. தகவலை வெளியிடும் பணியையும், செயல்கூறுகளையும் கிளையன் கணினியே கவனித்துக் கொள்ளும். வழங்கன் கணினி, தரவு தளத்தை மற்றும் அதனை அணுகுதல் போன்ற பணிகளைக் கவனித்துக் கொள்ளும்.

FAT file system : ஃபேட் கோப்பு முறைமை : கோப்புகளை ஒழுங்குபடுத்தி மேலாண்மை செய்ய எம்எஸ்-டாஸில் மேற்கொள்ளப்படும் முறைமை. கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் File Allocation Table என்பதன் சுருக்கமே FAT எனப்படுகிறது. ஒரு வட்டினை வடிவாக்கம் (Format) செய்யும்போது எம்எஸ்-டாஸ் அவ்வட்டில் ஒரு தரவு கட்டமைப்பை (Data Structure) உருவாக்குகிறது. ஒரு கோப்பினை வட்டில் சேமிக்கும்போது, சேமித்த கோப்பின் விவரங்களை எம்எஸ்டாஸ் ஃபேட்டில் எழுதிக்கொள்ளும். பின்னாளில் ஃபைலின் விவரங்களைப் பயனாளர் கோரும்போது, டாஸ், ஃபேட்டின் உதவியுடன் ஃபைல் விவரங்களைக் கொணர்ந்து தரும். டாஸ் ஃபேட் கோப்பு முறைமையை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒஎஸ்/2, விண்டோஸ் என்டி மற்றும் விண்டோஸ் 98 ஆகியவை தமக்கேயுரிய கோப்பு முறைமைகளை (முறையே HPFS, NTFS, VFAT) பின்பற்றுவதுடன் ஃபேட் முறைமையை ஏற்றுக்கொள்ளவும் செய்கின்றன.

father file : தந்தை கோப்பு : மூலப்பதிவேட்டின் ஒரு நகலையும் வைத்துக்கொண்டு திருத்தப்பட்ட பதிப்பையும் தருகின்ற வகையில் பதிவேடுகளைப்புதுப்பிக்கும் அமைப்பு. ஒரு கோப்பினைப் புதுப்பிக்கும் பணி நடைபெறும்போது பழைய மூல கோப்பை 'தந்தை கோப்பு' என்கிறோம். தந்தை கோப்பை உருவாக்கும் கோப்பு 'தாத்தா கோப்பு'. வட்டு அல்லது நாடா போன்ற மின்காந்த ஊடகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்புகளுக்கு இத்தொழில் நுட்பம் மிகவும் பொருத்தமானது.

fat server கொழுத்த வழங்கன்; கொழுத்த சேவையகம் : ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற் ள்ளும். கிளையன் மிகச் ல பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்யாது. பயன்பாட்டு நிரல்கள் மற்றும் தரவு, வழங்கன் கணினி லேயே இருக்கும். தகவலைப் பெற்று வெளியிடும் பணி யே கிளையன் செய்யும்.

fatware : கொழுத்த மென் பொருள் : திறனற்ற மோசமான வடிவமைப்பு, அரிதாகப் பயன்படுத்தப்படும் ஏராளமான தேவையற்ற வசதிகள் இவற்றின் காரணமாக, நிலைவட்டில் அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் மென்பொருள். fault : கோளாறு, பழுது : வடிவமைக்கப்பட்ட விதிமுறைகளின்படி செயல்பட முடியாமல் தடுக்கும் நிலை. பிரிந்தகம் அல்லது அரை மின்சுற்று போன்றவை ஒரு துணை பாகத்திலோ, கணினியிலோ அல்லது வெளிப்புற உறுப்பிலோ செயல்பட முடியாமையை ஏற்படுத்தல். Error and Mistake என்பதற்கு எதிர்ச்சொல்.

fault tolerance : பழுது தாங்கு திறன் : வன்பொருள் அல்லது மென்பொருள் கோளாறுகள் இருந்தபோதும் வடிவமைப்பு விதிமுறைகளின்படி ஒரு கணினி அமைப்பு தன் பணிகளைச் செய்யும் திறன். கோளாறின்போது இயங்கி அதே வேளையில் சரிவர செயல் படவில்லையென்றால் பாதி அல்லது ஒரளவு கோளாறு தாங்கும் திறனுடையது என்று சொல்லலாம். கூடுதல் வன் பொருள், மென்பொருள் அல்லது இந்த இரண்டின் இணைப்பின் மூலம் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது.

fault tolerance level : பழுது தாங்கு திறன் மட்டம், பழுது சகிப்பு நிலை.

fault-tolerant computer systems : பழுது சகிப்புக் கணினிப் பொறியமைவு : பன்முக மையச் செய்முறைப்படுத்தி, பொறியமைவு மென்பொருள் ஆகியவையுடைய கணினிகள். இவை, ஒரு முக்கியமான வன்பொருள் அல்லது மென்பொருள் செய லிழந்தாலுங்கூட செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுமாறு செய்கின்றன.

favorite : கவர்வி; ஈர்ப்பி; விருப்பமான விருப்பத்தளங்கள்; விரும்பும் பக்கம் : இணையத்தில் பயனாளர் ஒருவர் அடிக்கடி விரும்பிப் பார்க்கும் வலைப் பக்கம், மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. அடிக்கடி பார்க்க விரும்பும் பக்கத்துக்கு ஒரு குறுவழியை (Shortcut) பயனாளர் தாமாகவே அமைத்துக் கொள்ள முடியும். நெட்ஸ்கேப் நேவிக்கேட்டரில் இத்தகைய பக்கத்துக்கு புத்தகக்குறி (Book Mark) என்று பெயர்.

favourites folder : கவர்விகள் : கோப்புறை : அடிக்கடி பார்க்க விரும்பும் வலைப்பக்கங்களுக்கான குறுவழிகளடங்கிய கோப்புறை. மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இத்தகைய பெயர். பிற உலாவிகளில் புத்தகக் குறிகள் (Book Marks), சூடான பட்டியல் (Hotlists) என்று வேறுபல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

FAx : ஃபேக்ஸ்; தொலை நகலி 1. ஃபேக்சிமிலி (Facsimile) என்ற சொல்லின் பேச்சு வழக்கு. 2. ஒரு பொதுவான எடுத்துச் செல்லும் கட்டமைப்பின் மூலம் படங்களை ஒரு இடத்திலிருந்து வேறிடத்திற்கு அனுப்ப வசதியளிக்கும் கருவி.

fax board : தொலை நகலிப் பலகை : ஒரு விரிவாக்கப் பலகையிலுள்ள தொலைநகலி அனுப்பீடு. இது, வட்டுக் கோப்புகளிலிருந்து அல்லது திரையிலிருந்து தொலை நகலி குறியீடுகளை நேரடியாக உண்டாக்கும் மென்பொருள்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. மேலும், தனது உருக்காட்சியை நுண்ணாய்வு மூலம் பெறுகிற ஒரு தொலை நகலி எந்திரத்தைவிடச் செறிவான உருக்காட்சியை அனுப்பு கிறது. வந்து சேரும் தொலைநகல், கணினியின் அச்சடிப்பானில் அச்சடிக்கப்படுகிறது.

fax machine : தொலை நகல் எந்திரம் : தொலை பேசிக் கம்பிகளைப் பயன்படுத்தி மின்னணுவியல் செய்தித் தொடர்புகள் மூலமாக வாசகங்களையும், வரைகலைகளையும், உருக்காட்சிகளையும் அனுப்புவதற்கான ஒர் எந்திரம்.

fax/modem : தொலைநகலி| மோடெம் : ஒரு புறநிலை அலகாக அல்லது தரவு மோடெமாக இருக்கக் கூடிய தொலைநகல் தரவு மோடெம் இரண்டின் இணைப்பு. இதில், அழைப்

பினை தொலைநகலிக்கு அல்லது தரவு மோடெமுக்கு வழிச் செலுத்துகிற ஒரு தொலைநகல் செய்தி விசையினை உள்ளடக்கியிருக்கிறது.

fax programme : தொலைநகலி செயல்முறை; தொலைநகலி கட்டளைத்தொடர்; தொலை நகலி நிரல்.

fax server : தொலைநகல் வழங்கன்.

fax switch : தொலைநகல் விசை : ஒரு தொலைநகல் குறியீட்டுக்காக ஒரு தொலைபேசிக் கம்பியினை சோதனை செய்து, தொலைநகல் எந்திரத்துக்கு அழைப்பினைச் செலுத்துகிற சாதனம். ஒரு தொலைநகல் எந்திரம் ஒர் எண்ணைச் சுழற்றி, அதற்கு அந்த இணைப்பு பதிலளிக்கும்போது, அது தன்னை அடையாளம் காட்டுவதற்கு ஒரு தொனியை வெளிப்படுத்துகிறது. சில சாதனங்களில், குரல் தொலை நகல் தரவு வகையைக் கையாள்கின்றன. இதனை மாற்றுவதற்கு ஒரு விரிவாக்க எண்ணில் விசை இயக்கம் தேவைப்படும்.

FCB : எஃப்சிபி : 'கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதி' என்று பொருள்படும் "File Control Block" என்பதன் தலைப்பெழுத்து குறும்பெயர்.

FCC : எஃப்சிபி : Federal Communications Commission என்பதன் குறும்பெயர். அமெரிக்க அரசின் நிறுவனமாகிய இது மாநிலங்களுக்கிடையிலான தரவுத் தொடர்புகளையும், பொதுத் தரவு போக்குவரத்து வழித்தடங்களையும், ஒலிபரப்பு ஊடகங் களையும் (Media) ஒழுங்குபடுத்தும் பொறுப்பேற்றுள்ளது.

F connector : எஃப் இணைப்பி : ஒளிக்காட்சி (Video) பயன்பாடுகளில் பெருமளவு பயன்படுத்தப்படும் ஒர் இணையச்சு (Coaxial) இணைப்பி. இணைக்கும்போது திருப்பாணி (Screw) ஒன்று தேவை.

எஃப் இணைப்பி
FDDI : எஃப்டிடிஐ : ஒளியிழை பகிர்ந்தமை தரவு இடைமுகம் என்று பொருள்படும் Fiber Distributed Data Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அதிவேக ஒளியிழை குறும்பரப்புப் பிணையங்களுக்காக அமெரிக்க தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (ANSI) உருவாக்கிய செந்தரம். வில்லை வளைய (Token Ring) கட்டமைப்பில் அமைந்த பிணையங்களில் வினாடிக்கு 100 மெகா துண்மிகள் (மெகா பிட்ஸ்) வீதம் தரவு பரிமாற்றம் செய்வதற்கான வரையறுப்புகள் இதில் அடங்கியுள்ளன. எஃப்டி டிஐ-II என்பது எஃப். டி. டி. ஐ-ன் நீட்டித்த வடிவமாகும். நிகழ் நேரத் தரவு பரிமாற்றத்தில் தொடர்முறைத் தகவலை இலக்க முறைத் தரவு வடிவத்தில் அனுப்புவதற்குரிய கூடுதலான

வரையறுப்புகள் இதில் உள்ளன.

FDM எஃப்டிஎம் : அலைப் பகிர்வுச் சேர்ப்புமுறை என்று பொருள்படும் Frequency Division Multiplexing என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒன்றுக்கு மேற்பட்ட தரவு சமிக்கைகளை வெவ்வேறு அலைவரிசைக்கு மாற்றிப் பின் அனைத்து அலை வரிசைகளையும் ஒற்றை அலைக்கற்றையாக்கி ஒரே தரவு தடத்தில் அனுப்பிவைக்கும் முறை. அடிக்கற்றைப் (Baseband) பிணையங்களிலும், தொலைபேசி வழித் தரவு தொடர்பிலும் தொடர்முறை (Analog) சமிக்கைப் பரிமாற்றத்திலும் எஃப்டிஎம் பயன்படுகிறது. எஃப்டிஎம் முறையில் தரவுத் தடத்தின் அலைக்கற்றை சிறுசிறு கற்றையாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கற்றையும் ஒரு தரவு சமிக்கைகளை ஏந்திச் செல்லும்.

FE : எஃப் இ : Field Engineer என்பதன் குறும்பெயர்.

feasibility study : சாத்தியக்கூறு : இயலுமை ஆய்வு : மாற்றுத் தீர்வுகள், செயல்முறை பரிந்துரைகள், செயல் திட்டத்துடன் ஒரு தரவு செயலாக்கச் சிக்கலை வரையறுத்து கணினி அமைப்பை வடிவமைத்து நிறுவுவதுபற்றிய ஆய்வு "Preliminary Study', 'Systems Study' என்றும் அழைக்கப்படுகிறது.

feathering : இறகிணைப்பு : ஒரு பக்கத்தில் அல்லது பத்தியிலுள்ள ஒவ்வொரு கோட்டுக் கிடையிலும் செங்குத்து வரிச் சரியமைவினை ஏற்படுத்துவதற்காகச் சரிநிகரான இடைவெளியைச் சேர்த்தல். feature : தன்மை; பண்புக்கூறு : ஒரு சொல்பகுப்பி நிரலாக்கத் தொடரில் வலது பக்க இடை வெளி அமைப்பது போன்று ஒரு நிரலாக்கத்தொடரில் அல்லது வன்பொருளில் சிறப்பாக ஏதாவது செய்தல்.

feature extraction : தன்மை கண்டறிதல்; பண்புக் கூறறிதல் : அமைப்பு கண்டறிதலுக்காக மேலோங்கும் தன்மைகள் தேர்ந்தெடுத்தல். கணினி கட்டுப்பாடு ஒளிப்படக் கருவியில் (வீடியோ) வடிவங்கள் மற்றும் முனைகள் போன்ற தன்மைகளைக் கொண்டு பொருள்களை அறியும் திறன்.

federal database கூட்டிணைப்புத் தரவுத் தளம் : ஒரு குறிப்பிட்ட துறை பற்றிய அல்லது சிக்கல் பற்றிய தத்தம் கண்டுபிடிப்புகளையும் பட்டறிவையும் அறிவியல் அறிஞர்கள் சேமித்து வைத்துள்ள ஒரு தரவுத் தளம். ஒரு தனி மனிதரால் தீர்க்க முடியாத அல்லது தீர்ப்பதற்குக் கடினமான சிக்கல்களுக்குத் தேவையான அறிவியல் கலந்தாய்வுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது கூட்டிணைப்புத் தரவுத் தளம்.

Federal Information Processing Standards : கூட்டரசின் தரவு செயலாக்கத் தரங்கள் : அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்க அமைப்புகளுக்குள் நடைபெறும் தரவு செயலாக்கத்திற்கான வழி காட்டுதல்களும் தொழில்நுட்ப வழிமுறைகளும் அடங்கிய செந்தரக்கட்டுப்பாடு.

Federal Privacy Act : ஐக்கிய தனிமைச் சட்டம் : அரசாங்க அமைப்புகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் தனிநபர் பற்றிய இரகசியக் கோப்புகளை வைத்திருப்பதைத் தடுக்கும் ஐக்கியச் சட்டம். அனைத்து அரசாங்க அமைப்புகளிலும் அவர்களது ஒப்பந்தக்காரர்களிடம் தங்களைப் பற்றிய எத்தகைய தரவு, கோப்பில் உள்ளது என்று தனிநபர்கள் அறிந்து கொள்ள இது அனுமதி அளிக்கிறது . Private Act of 1974 என்றும் அறியப்படுகிறது.

Federation of American Research Networks : அமெரிக்க ஆராய்ச்சிப் பிணையங்களின் கூட்டமைப்பு : அமெரிக்க நாட்டிலுள்ள பிணையங்களின் இணைப்புத் தொழில்நுட்பக் குழுமங்களை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு லாபநோக்கில்லா சங்கம். கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொடர்புடைய சமூகங்களிடையே பிணையங்களை ஒருங்கிணைப் பதை தேசிய அளவில் முக்கியமாக வலியுறுத்தும்.

Federation on Computing; in the United States : அமெரிக்காவின் கணிப்பணிக் கூட்டமைப்பு : தகவல் செயலாக்கப் பன்னாட்டுக் கூட்டமைப்பில் (International Federation of Information Processing - IFIP) அமெரிக்க நாட்டின் பிரதிநிதி அமைப்பு.

feed : செலுத்து : காகித அல்லது மின்காந்த நாடா, வரி அச்சுப்பொறி காகிதம் அல்லது அச்சுப்பொறி நாடா போன்ற நீளமான பொருள்கள் இயக்கப்படும் நிலைக்கு நகர்த்துகின்ற எந்திரச் செயல்முறை.

feedback : பதில்பெறுதல்; பின்னூட்டம்; நிலையறிதல் :

1. ஒரு செயலாக்கத்தில் உண்மை நிலையை அளந்து அதை மாற்றக்கூடிய உள்ளீடு அனுப்பும் செயலை கட்டுப்பாட்டு அமைப்பு செய்ய வகை செய்யும் தானியங்கிக் கட்டுப்பாட்டு முறைகள்.
2. தரவு செயலாக்கத்தில், செயலாக்கத்தின் ஒரு குறிப்பிட்ட நிலையில் உருவாகும் தரவு, அடுத்துவரும் தரவு செயலாக்கத்தைப் பாதிக்கும் வகையில் பதில் பெறக் கூடும். சான்றாக சேமிப்பகம் நிரம்பிவிட்டது என்ற பதில் பெற்றால் மேலும் தரவுகளை

ஏற்றுக்கொள்வதைத் தாமதப்படுத்தலாம் அல்லது வேறு சேமிப்பகத்துக்கு அனுப்பலாம். 3. வரிசைமுறை செயல் வெளியீடு அடுத்து வரும் செயலை மாற்றுகின்ற செயலாக்க முறை.

feedback circuit : நிலையறியும் மின் சுற்று : ஒரு மின்னணு மின் சுற்று அல்லது கட்டுப்பாட்டு அமைப்பின் வெளியீட்டுச் சமிக்கைகளில் ஒரு பகுதியை அந்த அமைப்பு அல்லது மின்சுற்றின் உள்ளிட்டுப்பகுதிக்கு அனுப்புகின்ற மின்சுற்று.

feed, card : அட்டை செலுத்தம்.

feed, friction : உராய்வு ஊட்டல், உராய்வு செலுத்தம்.

feed holes : செலுத்து துளைகள் : ஸ்ப்ராக்கெட் சக்கரத்தில் செலுத்த வசதியாக காகித நாடாவில் இடப்படும் துளைகள்.

feed, horizantal : கிடைமட்டச் செலுத்தம்.

feed, vertical : செங்குத்துச் செலுத்தம்.

feep : ஃபீப் : பயன்படுத்துபவரின் கவனத்தை இழுக்க முகப்புகள் செய்யும். 'பீப்'பின் மற்றொரு பெயர்.

Felt Dorr : ஃபெல்ட் டார் : பரிசோதனை முறையில் 1885 இல் ஒரு பன்முறை விசை இயக்கும் கணக்கிடும் எந்திரத்தை உருவாக்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், காம்ப்டோ மீட்டர் என்னும் பயன்படுத்தக் கூடிய காட்டும், பட்டியலிடும் எந்திரத்தை உருவாக்கினார்.

female connector : துளை இணைப்பி : இணைப்பி சாதனத்தில் வேறொரு பகுதி சேரக்கூடிய எஞ்சியுள்ள பகுதி.

துளை இணைப்பி

துளை இணைப்பி

Male connector-க்கு எதிர்ச்சொல்.

femto : ஃபெம்ட்டோ : மில்லியனில் அல்லது ஒரு குவாட்ரில்லியனில் ஒரு பகுதி என்பதன் முன்சொல், 10-15.

femtosecond : ஃபெம்ட்டோ நொடி : ஒரு நொடியின் குவாட்ரில்லியனில் ஒன்று. 30 மில்லியன் ஆண்டுகளுக்கு எத்தனை நொடிகள் உண்டோ அத்தனை ஒரு நொடிக்கும் உண்டு. 1 -ஐ அடுத்து வரும் 15 சுழி (பூஜ் யம்) கள். 1, 000, 000, 000, 000, 000. இரண்டு நொடிகளில் ஒளி பூமியில் இருந்து நிலவைக் கடந்து செல்கிறது. 12 ஃபெம்ட்டோ நொடிகளில், அது ஐந்து மைக்ரான்கள் மட்டுமே நகர்கிறது. ஒரு மனித முடியின் அகலத்தில் பத்தில் ஒரு பங்கு. FS என்று சுருக்கி அழைக்கப்படுகிறது.

ferric core : அய உட்புரி : வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் போன்று ஒரு வளையத்திற்கும் வலஞ்சுழியாக அல்லது இடஞ்சுழியாகக் காந்த மேற்றலாம். இது ஈரிலக்க '0'-களையும் 1 - களையும் சேமித்து வைக்க உதவுகிறது. ஒரு கணினியின் உள்மையச் சேமிப்பியை உருவாக்குவதற்கு இத்தகைய உட்புரிகள் அமைக்கப்படுகின்றன.

ferric oxide (Fe2 O3) : அய ஆக்சைடு (Fe2 O3) : மின்காந்த வட்டுகளிலும் நாடாக்களிலுமுள்ள பூச்சுகளில் பயன்படுத்தப்படும் இரும்பின் ஆக்சி கரணி. ferromagnetic : அயக்காந்தம் : அயம், நிக்கல் போன்ற ஒரு பொருள். மிக உயர்ந்த காந்த மேற்பரப்புத் திறன்.

ferromagnetic material இரும்புக் காந்த ஆக்கப் பொருள் : நேர்காந்த ஆக்கப் பொருள் : மிகுகாந்தப் பண்பு பெறக்கூடிய பொருள். மின்னணுத் துறையில் பரவலாகப் பயன்படுத்தக்கூடிய பொருள். எஃகு மற்றும் தூளாக்கப்பட்ட இரும்பு ஆகியவை. மின்தூண்டி (Inductor) களின், தூண்டல் திறனை அதிகரிக்க, அவற்றின் சுருள் மையமாய்ப் பயன்படுகிறது. நெகிழ்வட்டு, நிலைவட்டு மட்டும் காந்த நாடாக்களில் மேல்பூச்சுக்குப் பயன்படுகிறது.

ferrous oxide ஃபெர்ரஸ் ஆக்சைடு : பதிவு செய்யும் வட்டுகள் மற்றும் நாடாக்களுக்கு பூசும் பொருள். இதை மின்காந்தப்படுத்த முடிவதால், மின்காந்த முறையில் தரவுப் பதிவு செய்ய முடிகிறது.

FET : எஃப்இடீ : Field Effect Transistor என்பதன் குறும்பெயர்.

fetch : கொண்டு வா, கொணர், எடு : ஒரு சேமிப்பகத்திலிருந்து நிரல் அல்லது தரவுகளைக் கண்டுபிடித்து ஏற்றுதல்.

fetch cycle : கொணர் சுற்று.

fetcher daemon : நேர்த்திச் செயல்முறை : முதன்மைச் செயல் முறையிலிருந்து வேண்டு கோள்களைக் கேட்டறிந்து, பிறகு முதன்மைச் செயல்முறையின் சார்பாக ஒரு வேண்டுகோளை விடுக்கிற ஒரு பெரிய செயல்முறையின் பகுதியாக இருக்கிற ஒரு சிறிய செயல்முறை. இந்தச் செயல்முறைகள் சிறிதாக இருப்பதால் இவற்றை மிகநேர்த்தியாகத் தனிப்பண்புடையதாக்கி, மிகத் திறம் படச் செயல்புரியும்படி செய்யலாம்.

fetch instruction : கொணர் ஆணை .

FF : எஃப்எஃப் : Form Feed என்பதன் குறும்பெயர்.

. fi : எஃப்ஐ : இணையத்தில் ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த இணையதளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.

fiber channel : ஒளியிழைத்தடம் : அதி வேகமாகச் செயற்படும் கணினிக்காக உருவாக்கப்பட்டு வரும் எதிர்கால ANSI செந்தரம் (தர அளவு). இதில், IPI, SCSI. HIPPI நிரல் தொகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் வேகம் வினாடிக்கு 12. 5 முதல் 100 MBytes வரை இருக்கும். fiber - optic cable : ஒளியிழைத் தொகுப்பு : பெருமளவுத் தரவுகளை ஒளியின் வேகத்தில் கொண்டு செல்லக்கூடிய, நுண்ணிய கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் இழைகளினாலான தரவு அனுப்பீட்டு ஊடகம்.

fiber optics : ஒளி இழைகள் : ஒளியின் வேகத்தில் அதிக எண்ணிக்கைகளில் தரவுகளை அனுப்பக்கூடிய கண்ணாடி அல்லது செயற்கை நுண் இழைகளின் ஊடக தரவு அனுப்பல் முறை.

fibonacci numbers : ஃ பைபோன் ACCI எண்கள் : முந்திய இரு எண்களின் கூட்டுத்தொகையாக (1, 1, 2, 3, 5, 8, 13 என்று இருக்கும் வகையில்) ஒவ்வொரு எண்ணும் இருக்கிற முழுஎண்களின் வரிசை. தேடுதலை இரு கீழின எண்களாகப் பகுக்கிற ஈரிலக்கத் தேடுதல்களை இது விரைவுபடுத்துகிறது.

fibonacci search : ஃபைபோன் ACCI தேடுதல் ; ஃபைபோன் ACCI எண்களைப் பயன்படுத்தும் ஒரு தேடுதல் படிநிலை வரிசை. இது ஈரிலக்கத் தேடுதலில் இரண்டின் வர்க்கங்களைப் பயன்படுத்துவது போன்றதாகும்.

fiche : படத்தாள்; நுண்படத்தாள் : பல்வகை நுண் தோற்றங்களை உள்ளடக்கிய ஒளிப்படத் தாள்.

fidoNet : ஃபைடோனெட் : டாம் ஜென்னிங்ஸ் என்பவர் 1984இல் உருவாக்கிய ஃபைடோ BBS என்பதிலிருந்து தோன்றிய மின்னணுவியல் அஞ்சல் மரபுத் தொகுதி. 10, 000-க்கும் அதிகமான ஃபைடோனெட் மையமுனைகள் பயன்பாட்டில் உள்ளன.

field புலம் : தரவுத் தள மேலாண்மை அமைப்பு கையாளும் மிகச்சிறிய அலகாகிய தரவுவின் ஒரு துண்டு. பணியாளர் கோப்பில், ஒரு நபரின் பெயர், வயது ஆகிய இரண்டும் இரண்டு தனித்தனி புலங்களாகக் கருதப்படும். ஒன்று அல்லது மேற்பட்ட புலங்களைக் கொண்டதே பதிவேடு.

Fjeld Alterable Control Element (FACE) : புலம் மாற்றக்கூடிய கட்டுப்பாட்டு அலகு : பயனாளர் நுண் நிரலாக்கத் தொடர் எழுத வழிவகுக்கும் சில அமைப்புகளில் உள்ள சிப்பு.

field - based search : புலம் சார் தேடல்

field, card : அட்டைப்புலம் .

field data : புல தரவுக் குறியீடு : மாறுபடும் உற்பத்தியாளர் குறி யீடுகளுக்கு இடைப்பட்ட ஏற்பாடாக அமெரிக்க இராணுவம் தரவு செயல்பாடுகளில் பயன்படுத்தும் சரிசெய் குறியீடு.

field delimitter : புல வரம்புக்குறி.

field effect transistor (FET) : புல விளைவி மின்மப் பெருக்கி : மாறிலி சக்தியேற்கும் சேமிப்புப் பொருளாகச் செயல்படும் இறுதிப்பகுதி அரைக்கடத்திச் சாதனம்.

field emmission : புல அனுப்புதல்; புல வீச்சு, புல உமிழ்வு : வலுவான மின்சாரப் புலத்தின் தாக்கத்தினால் ஒரு உலோகம் அல்லது அரைக் கடத்தியிலிருந்து எலெக்ட்ரான்களை வெற்றிடத்திற்கு அனுப்புதல்.

field engineer : களப் பொறியாளர் : கணினி வன்பொருள் மற்றும் மென்பொருளின் களப் பராமரிப்புக்குப் பொறுப்பேற்றுள்ள தனிநபர். வாடிக்கையாளரின் பராமரிப்பு பொறியாளர் என்றும் அழைக்கப்படுவார்.

field list : புலப் பட்டியல்.

field menu : புலப் பட்டி.

field name : புலப்பெயர் : ஒரு புலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பெயர். (பெயர், முகவரி, நகரம், மாநிலம் முதலியன). இது எல்லாப் பதிவேடுகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும். இது புலத்தை அடையாளங்காட்டக் கூடியதேயன்றி, அதில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுவை அடையாளங்காட்டக் கூடியதன்று.

field of view : புலப்பார்வை ; காட்சிப் புலம் : கணினி வரை கலைகளில், உருவாக்கப்பட்ட ஒளிப்படக் கருவி பார்க்கும் திறனின் எல்லைகளைக் குறிப்பிடுகிறது. ஒளிப்படக் கருவியை மையமாகக் கொண்ட கிடைமட்டக் கோணத்தையே இது பெரும்பாலும் குறிப்பிடுகிறது. கணிப்புக்கு எளிமையாக்க, கணினி வரைகலையாளர்களின் அனுமானத்தின்படி, ஒளிப் படக்கருவி ஒரு பிரமிட்டிற்குள் உள்ளது; கூம்புக்குள் அல்ல.

field programmable logic array : புல நிரலாக்க தருக்கக் கோவை : ஒரு வகையான ஒருங்கிணை மின்சுற்று (IC). இதில் தருக்க மின்சுற்றுகளின் (logic circuits) கோவை இருக்கும். தனித்த மின்சுற்றுகளிடையே இணைப்புகளையும், அதன்மூலமாக கோவையின் தருக்கச் செயல்முறைகளையும் நம் விருப்பப்படி நிரலாக்கம் செய்யமுடியும், தயாரிப்புக்குப் பிறகு, குறிப்பாக அவற்றைக் கணினிகளில் நிறுவும் நேரத்தில் நிரலாக்கம் செய்யலாம். இத்தகைய நிரலாக்கத்தை ஒரேயொருமுறை மட்டும் செய்யமுடியும். சிப்புவின் இணைப்புகளிடையே மிக அதிக மின்சாரத்தை செலுத்தி இத்தகைய நிரலாக்கத்தைச் செய்வர்.

field/record : புலம் /ஏடு.

field separator : புலப்பிரிப்பி : ஒரு பதிவேட்டில் புலங்களைப் பிரித்துக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடு காற்புள்ளி, அரைப்புள்ளி அல்லது முக்காற்புள்ளியாக இருக்கலாம்.

field size : புல அளவு .

field squeeze : புலப் பிழிவுக் கருவி : ஒர் அஞ்சல் இணைப்பியில், ஒரு தரவு புலத்தில் கூடுதலான காலியிடங்களை அகற்றி, எழுத்து வாசகத்தினுள் துல்லியமாக அச்சிடும்படி செய்யும் ஒரு செயற்பணி.

field, updatable : மாற்றத்தகு புலம் .

field upgradable : களத்தில் மேம்படுத்தக்கூடிய வன்பொருள் : வழங்கப்பட்ட பிறகு கணினி கிடங்கிலோ அல்லது பழுது பார்க்கும் மையத்திலோ அல்லது ஒருவரது அலுவலகத்திலோ, இத்தகைய களத்தில் மேம்படுத்தக் கூடியது.

FΙFΟ : எஃப்ஐ எஃப்ஓ ; First in First Out என்பதன் சுருக்கம். ஒரு பட்டியலில் பொருள்களைச் சேமிக்கவும் திரும்பப் பெறவுமான முறை. காத்திருப்போர் வரிசையில் (கியூவில்) முதலில் வந்தவர் முதலில் கவனிக்கப்பட்டு அனுப்பப்படுவார்.

field, variable : மாறுபுலம் .

fifth generation computers : ஐந்தாம் தலைமுறைக் கணினிகள் : அடுத்த கணினி வளர்ச்சி நிலை, ஒலி உள்ளீடு/வெளியீடு செயற்கை நுண்ணறிவு, காரண காரியமறிந்து, பகுத்தறிந்து, முடிவெடுக்கக்கூடிய எந்திரங்களை உருவாக்கும் தொழில் நுட்பம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

figure : உரு.

figure shift : எண் மாற்றம் : விசைப் பலகையின் ஒரு விசை அல்லது விசை உருவாக்கும் குறியீடு, செய்தியில் மாற்று வரும் வரை அடுத்து வரும் எழுத்துகளை எண்களாகக் கருத வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

file : கோப்பு : தரவுத் தொகுப்பு : ஒரு அடிப்படை சேமிப்பு அலகாகக் கருதப்படும், தொடர்புடைய பதிவுகளின் தொகுதி. file access time : கோப்பு அணுகல் நேரம் : ஒரு கோப்பினைத் திறந்து தரவுவைப் படிக்கத் தொடங்குவதற்கு கணினி எடுத்துக் கொள்ளும் நேரம்.

File Allocation Table (FAT) : கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை : ஒரு வட்டிலுள்ள தரவுகளின் பதிவேடு. இதன் மூலம் ஒவ்வொரு கோப்பின் உள்ளடக்கங்களையும் அணுகலாம். ஒரு செருகு வட்டில் அல்லது நிலைவட்டில் உள்ள ஒரு தரவுக் கோப்பு, அதில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கோப்பின் அமைவிடம் பற்றிய தரவுகளைக் கொண்டிருக்கும். இது, ஒவ்வொரு கோப்பினையும் தேவைப்படும்போது கண்டறிந்து படிப்பதற்கு உதவுகிறது. இந்த அட்டவணை பெரும்பாலும் இருமடியாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

file and record locking : கோப்பு மற்றும் பதிவேட்டுப் பூட்டு : பயனாளர் பன்முகச் சூழலில் தரவு மேலாண்மை செய்வதற்கான உத்திகள். தரவு, வாசகம், அல்லது உருக்காட்சிக் கோப்பினை ஒருவர் அணுகுவதை இந்தக் கோப்புப் பூட்டு தடுக்கிறது. ஒரு தரவுக் கோப்பினுள் தனியொரு பதிவேட்டினை அணுகுவதைப் பதிவேட்டுப் பூட்டு தடுக்கிறது.

file, archived : காப்பகக் கோப்பு .

file attachment : கோப்பு உடன் இணைப்பு.

file attribute : கோப்புப் பண்பியல்பு : ஒரு DOS கோப்பின் பண்பியல்புகள் தொடர்பான தரவுகள். எடுத்துக்காட்டாக, அது மறைந்துள்ளதா, படிப்பதற்கு மட்டுமேயானதா, எழுதுவதற்கு மட்டுமேயானதா என்ற விவரங்கள். ஒரு கோப்பினைப் பாதுகாப்பாகக் கையாள்வதற்கு அனுமதிக்கிற கோப்பு அணுகு வகைப்பாடு. முக்கிய பண்பியல்புகள்;எழுதப் படிப்பதற்குரியது; படிப்பதற்கு மட்டுமே உரியது; மறைவானது.

file backup : கோப்பு மாற்று ஏற்பாடு; மாற்றுக் கோப்புப்படி : கோப்புக் காப்பு : அழிக்கப்பட்ட அல்லது சேதமாக்கப்பட்ட தரவுத் தளம் ஒன்றை மீண்டும் கொண்டு வரப் பயன்படுத்தப்படும் தரவுக் கோப்புகளின் படிகள்.

file codes : கோப்புக் குறி முறைகள் .

file collection : கோப்புத் திரட்டு.

file compression : கோப்புச் சுருக்கம் : கோப்பு அழுத்தம்; கோப்பு இறுக்கம் : ஒரு கோப்பினை வேறிடத்துக்கு அனுப்பி வைக்க அல்லது சேமிக்க அதன் அளவைச் சுருக்கும் செயல்முறை.

file control block method : கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதி முறை : கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதிகள் மூலமாக வட்டுக்கோப்புகளை அணுகுகிற DOS செயற்பணிகளின் ஒரு தொகுதி. இது இன்று வழக்கற்றுவிட்டது.

file conversion : கோப்பு மாற்றல் : கோப்பின் ஊடகம் அல்லது அமைப்பு முறையை மாற்றும் செயலாக்கம்.

file conversion utility : கோப்பு மாற்றல் பயன்பாடு.

file control block : கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதி : ஒரு கணினியின் இயக்கமுறைமை, திறந்து வைக்கப்பட்ட ஒரு கோப்பு பற்றிய விவரங்களைப் பதிவுசெய்து வைத்துக் கொள்வதற்கு தற்காலிகமாக ஒதுக்கப்படும் நினைவகப் பகுதி.

file creation module : கோப்பு உருவாக்கத் தகவமைவு.

file deletion : கோப்பு நீக்கம்.

file descriptor : கோப்பு விவரிப்பி : BASIC போன்ற உயர்நிலை மொழிகளில், கோப்பு விவரிப்பி என்பது, கோப்பினைத் திறப்பதற்கான இடையக எண். எடுத்துக்காட்டு : as # 1 அல்லது # 3.

file, destination : சேரிடக் கோப்பு.

file directories : கோப்பு அட்டவணைத் தொகுப்பு.

file dump : கோப்புத் திணிப்பு.

file, end of : கோப்பு முடிவு.

file extent : பரவுக் கோப்பு.

file extension : கோப்பு வகைப்பெயர்.

file format : கோப்பு உருவமைவு : ஒரு கோப்பின் கட்டமைவு. தரவுத் தளம், சொல் செய்முறைப்படுத்துதல், வரைகலை, கோப்புகள் ஆகியவற்றுக்கு வணிகமுறை உருவமைவுகள் உள்ளன.

file fragmentation : கோப்புக் கூறாக்கம் : 1. ஒரு கோப்பின் விவரங்கள் வட்டில் தொடர்ச்சியாக எழுதப்படுவதில்லை. சிறுசிறு கூறுகளாக்கப்பட்டு வட்டில் ஆங்காங்கே பதியப்படுகின்றன. எங்கே பதியப்பட்டுள்ளது என்கிற விவரம் ஒர் அட்டவணையில் எழுதப்படுகிறது. இதன் காரணமாய் வட்டில் எழுதப்படாத இடங்களும் தொடர்ச்சியாக இருப் பதில்லை. வட்டு நிறைந்து போகின்ற நிலையில் கோப்பினை எழுதவும் படிக்கவும் அதிக நேரம் ஆவதுண்டு. இவ்வாறு கூறுகளாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களை ஒரளவு வரிசையாக எடுத்தெழுதுவதற்கென பயன்பாட்டு நிரல்கள் உள்ளன. 2. ஒரு தரவுத் தளத்தில் அட்டவணைக் கோப்பில் (Tables) ஏடுகள் (Records) வரிசையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. அவ்வப்போது ஏடுகளை அழிக்கிறோம், சேர்க்கிறோம். இதனால் ஏடுகள் கூறாகிக் கிடக்கும். ஆனால் பெரும்பாலான தரவுத் தள தொகுப்புகளில் ஏடுகளை வரிசைப்படுவதற்கென பயன்பாட்டு நிரல்கள் உள்ளன.

file gap : கோப்பு இடைவெளி : கோப்பு எங்கு முடிகிறது என்று கணினி அமைப்புக்கு உணர்த்தக்கூடிய, கோப்பின் இறுதியில் உள்ள இடைவெளி.

file handle : கோப்புக் கைப்பிடி : ஒரு கோப்பினை அணுகுவதற்குரிய தரவுகளை கொண்டுள்ள ஒரு மாறியல் மதிப்புரு. வட்டு அணுகுதலின் கோப்புக் கைப்பிடி முறையைப் பயன்படுத்தி ஒரு கோப்பினைத் திறக்கும்போது DOS மூலம் திருப்பியனுப்பப்படும் ஒரு குறியீட்டு எண். பின்வரும் வட்டுச்செயற்பாடுகள் அனைத்திலும் கோப்பினை அடையாளங் காண்பதற்கு இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

file handling : கோப்புக் கையாளல்.

file handling routine : கோப்புக் கையாளும் வாலாயச் செயல் முறை : ஒரு கோப்பில் உள்ள தரவுகளைப் படிக்கவோ அல்லது அதனுள் எழுதவோ செய்யக்கூடிய கணினி நிரலாக்கத் தொடரின் ஒரு பகுதி.

file identification : கோப்பு அடையாளம் காணல்.

file index : கோப்புக் குறிப்புப் பட்டியல்; கோப்பு அட்டவணை.

file, index sequential : சுட்டுத் தொடரியல் கோப்பு.

file label : கோப்பு அடையாளச் சீட்டு : ஒரு கோப்பினை அடையாளம் காட்டும் வெளிப்புற அடையாளச் சீட்டு.

file layout : கோப்பு அமைப்புமுறை; கோப்பு இட அமைவி  : அதன் வரிசைமுறை மற்றும் உட்பொருள்களின் அளவுகள் உட்பட தரவுகளை வரிசைப்படுத்தி ஒரு கோப்பில் அமைத்தல்.

file level model : கோப்பு நிலை மாதிரி; கோப்பு நிலைப் படிமம் : கேள்விகளுக்கோ அல்லது நிரலாக்கத் தொடர்களுக்கோ தரவு பயன்பாடுகளின் சிறந்த செயல்பாடுகள் தரவு அமைப்புகளை வரையறுப்பதற்கான மாதிரி அமைப்பு.

file librarian : கோப்பு நூலகர் : அனைத்துக் கணினிக் கோப்புகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குப் பொறுப்பேற்கும் நபர். வட்டுத் தொகுதிகளில் நிரலாக்கத் தொடர் தரவுக் கோப்புகள், மின்காந்த நாடாக்கள், துளையிட்ட அட்டைகள், நுண்திரைப்படங்கள் போன்றவை இவரது பொறுப்பில் அடங்கும்.

file locking : கோப்புப் பூட்டல்.

File Maker II : கோப்பு உருவாக்கி II : க்ளோரிஸ் என்ற அமைவனம் உருவாக்கியுள்ள மெக்கின்டோஷ் கோப்பு மேலாளர். இது பொதுவான தரவு மேலாண்மைக்குப் புகழ் பெற்ற ஒரு செயல்முறை. இது பல்வேறு புள்ளியியல் செயற் பணிகளையும், விரைவுத் தேடுதல் திறம்பாடுகளையும், விரிவான செய்தியறிவிப்பு அம்சங்களையும் அளிக்கிறது.

file man : கோப்பாளர் : விண்டோவின் 'கோப்பு மேலாளர்' என்று பொருள்படும் File Manager என்பதற்கான கொச்சை வழக்குச் சொல். இது பொது எல்லை MUMPS மென்பொருள். MUMPS செயல்முறையாளருக்கான பல்வேறு பயனீடுகளின் ஒரு தொகுதியை உடையது.

file management : கோப்பு மேலாண்மை.

file management system (FMS) : கோப்பு மேலாண்மைப் பொறியமைவு : தரவுகளை வரையறை செய்து, இந்த இனங்களைக் குறிப்பிட்ட பதிவேடுகளில் வைக்கவும், இந்தப் பதிவேடுகளை குறிப்பிட்ட கோப்புகளாக ஒருங்கிணைத்து, அவற்றைக் கையாளவும், பல்வேறு வழிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளை மீட்கவும் பயன்படுகிற ஒரு மென் பொருள் தொகுதி.

file manager : கோப்பு மேலாளர் : எளிய கோப்புகள் மற்றும் பொருளடக்கங்களைப் பயன்படுத்தும் எளிய தரவுத் தள மேலாண்மை நிரலாக்கத் தொடர். தரவுத் தள மேலாண்மை அமைப்பின் தம்பி அல்லது பதிவேடு மேலாளர் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

file maintenance : கோப்புப் பேணுகை, கோப்புப் பேணல் : கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்தல். வட்டு இயக்கிகளைக் காலாந்திரங்களில் சீரமைவு செய்தல்.

file marker, end of : கோப்பு முடிவுக் குறி.

file, mufti-reel : பல்சுருள் கோப்பு.

filename : கோப்புப் பெயர் : ஒரு குறிப்பிட்ட கோப்பை அடையாளம் காண உதவும் அகர வரிசை எண் முறை எழுத்துகள்.

file name extension : கோப்புப் பெயர் விரிவாக்கம்; கோப்புப் பெயர் நீட்டம்; கோப்புத் துணைப் பெயர்; கோப்பு இனப் பெயர் : ஒரு கோப்புப் பெயரின் இரண்டாவது பகுதியாக அமையும் குறியீடு. ஒரு புள்ளியின் மூலம் கோப்பின் பெயரில் இருந்து பிரிக்கப்படுகிறது. கோப்பில் எத்தகைய தரவுகள் உள்ளன என்பதைக் குறிப்பிடுகிறது.

file open : கோப்புத் திறப்பு.

file organization : கோப்பு ஒருங்கமைத்தல்; கோப்பு அமைத்தல்; கோப்புத் தொகுப்பு : பயன்பாட்டு நிரலாக்கத் தொடர் அமைப்பவர் தரவுகளைப் பார்க்கும் முறை.

file pointer : கோப்புச் சுட்டு : DOS திறக்கிற கோப்பு ஒவ்வொன்றுக்கும் அது வைத்து வருகிற ஒரு மாறியல் மதிப்புரு. இந்தக் கோப்புச் சுட்டு, கோப்பில் படிப்பு/எழுத்து செயற்பாடு தொடங்குகிற அமைவிடத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

file processing : கோப்புச் செயல்பாடு; கோப்பு அலசல் : அடிப்படைக் கோப்புகளில் நடப்புத் தரவுகளின் மாற்றங்களுக்கேற்ப காலமுறைப்படி புதுப்பித்தல். அடிப்படை இருப்பு எடுப்புக் கோப்பில் மாதாந்திர இருப்பு எடுப்புக்கோப்பிலிருந்து மாற்றம் செய்தல் போன்ற பரிமாற்ற தரவுகளைக் கொண்டதாக இவை அமைந்திருக்கும். File Maintenence-க்கு எதிர்ச்சொல்.

file protection : கோப்புக் காப்பு; கோப்புப் பாதுகாப்பு : ஒரு கோப்பிலிருந்து எதிர்பாராத விதமாக தரவு அழிக்கப்படுவதைத் தடுக்கும் சாதனம் அல்லது தொழில்நுட்பம். மின் காந்த நாடா கோப்பு பராமரிப்பு வளையம் அல்லது செருகு வட்டினைப் பாதுகாக்க அதன் மேல் ஒட்டப்படும் பகுதி. file - protect ring : கோப்புப் பாதுகாப்பு வளையம் : மின்காந்த நாடாவில் உள்ள தகவல்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் சாதனம். நாடா சுருணையிலிருந்து வளையத்தை நீக்குவதன் மூலம் நாடாவின் மீது தவறுதலாக எழுதுவது தவிர்க்கப்படுகிறது. write protect-க்கு இணைச் சொல்.

file recovery : கோப்பு மீட்பு : இழந்துபோன அல்லது படிக்க முடியாத வட்டுக் கோப்புகளை மீட்டெடுக்கும் செயல்முறை. பல்வேறு காரணங்களினால் கோப்புகள் தொலைந்து போகலாம். கவனக்குறைவாக அழித்துவிடல், கோப்பு பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு பாதிப்பு ஏற்படல், வட்டு பழுதடைதல் போன்ற காரணங்களினால் நாம் கோப்புகளை இழக்க நேரிடுகிறது. ஒரு கோப்பினை அழிக்கும்போது அதன் விவரங்கள் அழிக்கப்படுவதில்லை. அந்த இடம் பிற கோப்புகளுக்குக் கிடைக்கும். கோப்பு விவரங்கள் எழுதப்பட்ட இருப்பிடங்களை அடையாளம் காணமுடிந்தால் ஒட்டு மொத்தக் கோப்பையும் மீட்டுவிட முடியும். பழுதான கோப்புகளைப் பொறுத்தமட்டில், வட்டில் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் விவரத்தைப் படித்து வேறொரு வட்டில் அல்லது கோப்பில் ஆஸ்கி (ASCI) அல்லது இரும/பதினறும எண்ணுருவில் எழுதிக்கொள்ளும் நிரல்கள் உள்ளன. எனினும் இந்த முறையில் மூலத்தகவலை அப்படியே பெறுவது இயலாது. இழந்த கோப்புகளை மீட்பதற்குச் சிறந்த வழிமுறை அவற்றை காப்பு நகலிலிருந்து (Backup) பெற்றுக் கொள்வதேயாகும்.

file recovery programme : . கோப்பு மீட்புச் செயல்முறை : தற்செயலாக நீக்கப்பட்டு அல்லது சேதமடைந்துவிட்ட வட்டுக்கோப்புகளை மீட்பதற்கான மென்பொருள்.

file retrieval : கோப்பு கொணர்தல் : ஒரு தரவுக் கோப்பினை, சேமித்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து அதனைப் பயன்படுத்தவிருக்கும் கணினிக்குக் கொணரும் நடவடிக்கை.

file, sequential : தொடரியல் கோப்பு.

file server : கோப்புப் பரிமாறி; கோப்பு வழங்கி : ஒரு வளாகக் கணினிக் கட்டமைப்பிலுள்ள தலைமைக் கணினி. இது, இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொறியமைவுகளும் அணுகக் கூடிய கோப்புகள் அனைத்தின் சேமிப்புத் தொகுதியாகும்.

file sharing : கோப்புப் பகிர்வு : பிணையங்களில் மையக் கணினி அல்லது வழங்கன் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட கோப்பினைப் பல்வேறு பயனாளர்களும் ஒரே நேரத்தில் பார்வையிட, திருத்த, வசதி இருக்க வேண்டும். இவ்வாறு ஒரே நேரத்தில் ஒரு கோப்பினை பலர் கையாள்வது கோப்புப் பகிர்வு எனப்படுகிறது. ஒரே நேரத்தில் வேறு வேறு நிரல்கள் அல்லது வேறு வேறு கணினிகள் பயன்படுத்துகின்றன எனில் கோப்பு விவரங்கள் அதற்கேற்ற வடிவாக்கங்களில் மாற்றப்பட்டு அளிக்கப்பட வேண்டும். ஒரு கோப்பு, பலராலும் கையாளப்படுகிறதெனில் அக்கோப்பினை அணுகுவது, நுழை சொல் (Password) பாதுகாப்பு மூலம் ஒழுங்குப்படுத்தப்படவேண்டும். ஒரே நேரத்தில் ஒரு கோப்பினை ஒன்றுக்கு மேற்பட்டோர் திருத்த முடியாதவாறு கோப்புப் பூட்டு முறை (Fle lock) இருக்க வேண்டும்.

file sharing protocol : கோப்புப் பகிர்வு மரபு முறை : ஒர் இணையத்தில் நிலையங்களிடையே கோப்பு வேண்டுகோள்களுக்கு (திற, படி, எழுது, மூடு முதலியன) ஒரு கட்டமைவை அளிக்கிற செய்தித் தொடர்பு மரபு முறை. இது OSI உருமாதிரியின் படுகை-7 - ஐக் குறிக்கிறது.

file size : கோப்பு அளவு : ஒரு கோப்பில் உள்ள தரவுகளின் அளவை 'பைட்டு' எண்ணிக்கையில் குறிப்பிடுவது.

file spec (file specification) : கோப்புக் குறியீடு : ஒரு வட்டின் மீதுள்ள ஒரு கோப்பின் அமைவிடத்தைக் குறித்தல். இதில் வட்டு இயக்கி, தரவு குறிப்பேட்டுப் பெயர், கோப்புப் பெயர் போன்றவை அடங்கும்.

file storage : கோப்பு சேமிப்பகம் : மின் காந்த வட்டு, நாடா, அட்டை அலகுகள் போன்ற கணினி அமைப்புக்குள் ஏராளமான தரவுகளை வைத்திருக்கும் திறனுள்ள சாதனங்கள்.

file store : கோப்புச் சேமிப்பு.

file structure : கோப்பு வடிவமைப்பு : கோப்புக் கட்டமைப்பு : ஒரு தரவு பதிவுக்குள் புலங்களின் அமைப்பு முறை. சான்றாக, ஒரு பதிவின் முதல் புலம் பெயர்ப்பகுதியாகவும், அதன் இரண்டாவது எண் புலம் விலைப் பகுதியாகவும் அடுத்து மூன்றாவது என்று தொடர்ந்து சென்று கோப்பின் வடிவ அமைப்பினைக் கூறுகிறது. file system : கோப்பு முறை ; கோப்பமைவு முறை : ஒரு கணினிப் பொறியமைவில் கோப்புகளைப் பட்டியலிடும் முறை. தனித்தனிக்கோப்புகளை மேலாண்மை செய்கிற தரவு செய்முறைப்படுத்தும் பயன்பாடு. இதில் பழக்கப்பட்ட செயல்முறைப்படுத்துதல் மூலம் கோப்புகள் தொடர்புபடுத்தப்படுகின்றன. இது, தொடர்முறைச் செய்தித் தரவு தளத்திலிருந்து (Relational Database) வேறுபட்டது.

file transfer : கோப்பு மாற்றல்; கோப்புப் பெயர்வு : ஒரு இடத்திலிருந்து வேறோர் இடத்திற்கோ அல்லது ஒரு சேமிப்பு ஊடகத்திலிருந்து வேறொன்றுக்கோ கோப்பினை மாற்றுதல்.

File Transfer Access and Management (FTAM) : கோப்புப் பரிமாற்ற அணுகலும் மேலாண்மையும்.

file transfer protocol : கோப்புப் பெயர்வு வரைமுறை; கோப்புப் பரிமாற்று வரைமுறை.

file type : கோப்பு வகை : ஒரு கோப்பின் செயல்பாட்டு அல்லது கட்டமைப்புப் பண்புக்கூறுகளின் அடிப்படையில் கோப்பு வகைகள் அமைகின்றன. பெரும்பாலும் ஒரு கோப்பின் வகை அதன் பெயரைக்கொண்டே அடையாளம் காணப்படுகிறது. எம்எஸ்டாஸில் கோப்பின் வகைப்பெயர் (Extension) கோப்பின் வகையை அடையாளம் காட்டும். (எ-டு) DBF-தரவுத்தள கோப்பு; EXE-இயக்குநிலைக் கோப்பு.

file update : கோப்பு இற்றை நிலைப்படுத்துதல்; கோப்பு புதுக்குதல்.

file viewer : கோப்புப் பார்வையாளர் : ஒரு கோப்பின் உள்ளடக்கத்தைக் கண்காட்சியாகக் காட்டுகிற மென்பொருள். இது, பொதுவாக உருவமைவுகளின் ஒருவகையைக் கண்காட்சியாகக் காட்டும் திறனுடையது.

file virus : கோப்பு நச்சுநிரல்.

flexibility : நெகிழ்வுத்தன்மை .

fill : நிரப்பு : ஒர் ஒவியச் செயல் முறையில், கரையிட்ட பகுதியில் வண்ணத்தை மாற்றுதல். ஒர் அகல் தட்டில் பொதுவான அல்லது மடிநிலை மதிப்பளவுகளை சிற்றங்களின் ஒரு குழுமமாகப் பதிவு செய்தல்.

fill area : நிரப்புப் பகுதி : முனைகளைக் குறித்துரைத்து ஒரு மூடிய பலகோணக் கட்டத்தை வரைந்து, பின்னர் அதன் உட் பகுதியை நிரப்புகிற ஒரு வசதி.

fill character : நிரப்பு எழுத்து  : ஒரு சேமிப்புச் சாதனத்தில் பயன்படாத இடப்பரப்புகளில் எழுதப்படும் ஓர் எழுத்து.

fill colour : நிரப்பு நிறம் .

filling : நிரப்புதல் : கணினி வரைகலையில், வரையறுக்கப்பட்ட பகுதியின் உட்புறத்தில் நிறம், சாயல் அல்லது இயக்குபவர் விரும்புகின்றவற்றை இட்டு நிரப்பப் பயன்படும் ஒரு மென்பொருள் செயல்பாடு.

fill in screen : நிரப்புத் திரை : ஒரு தரவுப் பதிவுத் திரை. இதில் தரவுப் பதிவு முனைகளாகப் பல பெட்டிகள் அல்லது கம்பித் தொடர்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு தரவு முனையும் ஒரு தருக்க முறைப்படி அமைந்து, எந்த தரவு இனம் எங்கே செல்லவேண்டும் என்பதைக் குறிக்கும் முகப்புச் சீட்டையும் கொண்டிருக்கும். இந்த வகை நிரப்புத்திரை பெரும்பாலும் விமான பயணச் சீட்டு முன்பதிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் "தரவு பதிவுத் திரை" (Data Entry Screen) என்றும் கூறுவர்.

fill pattern : நிரப்புத் தோரணி : ஒர் உருக்காட்சியின் பரப்புப் பகுதியை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் வண்ணம், வண்ணச்சாயல் அல்லது தோரணி. ஒரு LAN நிலையம் தகவல்களைப் பெறாதிருக்கிறபோது அல்லது அனுப்பாதிருக்கிறபோது ஒருங்கிணைப்பைப் பேணுவதற்காக அந்த நிலையத்தினால் அனுப்பப்படும் குறியீடுகள்.

film : படச்சுருள்.

film developer : படச்சுருள் துலக்கல் : கோம் (COM) சாதனங்களுக்காக நுண் திரைப்படத்தினை மாற்றி அமைக்கும் கருவி.

film reader : படச்சுருள் படிப்பி .

film recorder படச்சுருள் பதிப்பி : ஒரு CAD, வண்ண அல்லது வணிக வரைகலைத் தொகுதி மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஒரு வரைகலைக் கோப்பிலிருந்து ஒரு 35மி. மீ. பட வில்லையைத் தயாரிக்கிற சாதனம். இது, 2, 000 முதல் 4, 000 வரையிலான வரிகளைக் கொண்ட உயர்செறிவுப் படங்களை உருவாக்குகிறது. படச்சுருள் பதிப்பியுடன் இணைக்கப் பட்டுள்ள ஒரு கட்டுப்பாட்டுப் பலகையில் செருகுவதன் மூலம் சொந்தக் கணினிகளுடன் படச்சுருள் பதிப்பிகளை இணைக்கலாம்.

FILO : ஃ பைலோ : First in Last out என்பதன் குறும்பெயர். ஒரு பட்டியல், மேசை அல்லது அடுக்கிலிருந்து வகையறாக்களைத் திரும்ப எடுப்பதற்கோ அல்லது அவற்றில் சேமிப்பதற்கோ கடைப்பிடிக்கப்படும் முறை. முதலில் சேமிக்கப்படும் பொருளைக் கடைசியில்தான் வெளியில் எடுக்க முடியும்.

filter : வடிகட்டி : ஒரு தரவுவை, வாசகத்தை அல்லது வரைகலை உருவமைவை மற்றொன்றாக மாற்றுகிற செய்முறை. இதில், தேர்ந் தெடுக்கப்பட்ட தரவு மட்டுமே செல்லக்கூடிய, தோரணி அல்லது திரை பயன்படுத்தப்படுகிறது. தரவுத் தளத்திலிருந்து தரவு இனங்களை வரவழைக்கிற மென்பொருள் நிரல்.

filter by form : படிவவழி வடிகட்டல்.

filter excluding selection : தேர்ந்ததைத் தவிர்த்து வடிகட்டல்.

filtering programme : சல்லடை நிரல்;வடிகட்டி நிரல் : தகவலை வடிகட்டித் தேவையான விவரங்களை மட்டும் எடுத்துத் தரும் நிரல்.

filter by selection : தேர்வு மூலம் வடிகட்டல்.

filter keys : வடிகட்டி விசைகள் : விண்டோஸ் 95 இயக்க முறை மையில் கன்ட்ரோல் பேனலில் அணுகும் முறை (Accessibility) விருப்பத் தேர்வுகள் உள்ளன. உடல் ஊனமுள்ளவர்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தும் முறைகள் அதில் உள்ளன. விசைப்பலகையிலுள்ள விசைகளின்மீது விரல்களை அழுத்தும்போது மெதுவான அல்லது தவறான விரல் அசைவுகளினால் ஏற்படும் பிழைகளைப் புறக்கணிக்குமாறு கணினிக்கு அறிவுறுத்த முடியும். இதற்கென வடிகட்டி விசைகள் வசதி உள்ளது.

final form text DCA : இறுதி வடிவ உரை டிசிஏ : ஒத்திசைவில்லா இரண்டு நிரல்களுக்கிடையே தரவு பரிமாறிக் கொள்ளும் பொருட்டு, அச்சிடவதற்குத் தயாரான வடிவில் சேமித்து வைக்கப்படும் ஆவணத்தின் தரவரையறை. ஆவண உள்ளடக்கக் கட்டமைப்பு என்ற பொருள்படும் Document Content Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் டிசிஏ என்பது.

finalize : முடிவுறுத்து.

finalizer : முடிவுறுத்தி.

finally : முடிகவாக.

final value : இறுதி மதிப்பளவை.

finally : முடிவாக.

financial information systems : நிதியியல் தரவுப் பொறியமைவு : ஒரு வணிகத்திற்கு நிதியுதவி செய்வதிலும், நிதியியல் ஆதாரங்களை ஒதுக்கீடு செய்வதிலும், கட்டுப்படுத்துவதிலும் நிதியியல் மேலாளர்களுக்கு உதவுகிற தரவுப் பொறியமைவு. பண மற்றும் பிணைய ஆவண மேலாண்மை, மூலதன வரவு செலவுத் திட்டம் வரைதல், நிதியியல் முன்னறிவிப்பு, நிதியியல் திட்டமிடல் ஆகியவை இதில் அடங்கும்.

financial planning language : நிதியியல் திட்டமிடல்மொழி : தரவு உருமாதிரிகளை உருவாக்கவும், ஒரு நிதியியல் திட்டமிடல் பொறியமைவுக்கு நிரலிடவும் பயன்படுத்தப்படும் மொழி.

financial planning system : நிதியியல் திட்டமிடல் பொறி யமைவு : மாற்று முறைகளைக் கணித்தறிவதற்குப் பயனாளருக்கு உதவிபுரிகிற மென் பொருள். இது, ஒரு தரவு உருமாதிரியை உருவாக்க அனுமதிக்கிறது. இந்த உருமாதிரி, சமன் பாட்டு வடிவில் தரவுக் கூறுகளின் ஒரு தொடர் வரிசையாக அமைந்திருக்கும். எடுத்துக் காட்டு : மொத்த ஆதாயம்;மொத்த விற்பனை, விற்பனைச் சரக்குகளின் அடக்கவிலை. பல்வேறு மதிப்பளவு களைச் செலுத்தி, பல்வேறு விருப்பத் தேர்வுகளைப் பெறலாம்.

find : கண்டுபிடிப்பு : குறிப்பிட்ட கோப்புகளில் ஒரு சரத்தைத் தேடுவதற்கான ஒரு DOS ஆணை.

find all files : அனைத்துக் கோப்புகளையும் கண்டறி.

find and replace : தேடி மாற்றி வை;தேடி மாற்று;கண்டறிந்து மாற்று.

find duplicates : போலிகளைக் கண்டறி.

find entire cells : அனைத்துக் கலங்களையும் கண்டறி.

finder : தேடி : ஆப்பிள் மெக்கின்டோஷ் இயக்கச் சூழ்நிலையின் மையப்பொருள். வட்டுகளில் சேமிக்கப்பட்ட கோப்புகளை ஒழுங்கு படுத்துவதும், காட்டுவதும் உள்ளிட்ட பல பணிகளைச் செய்யும் ஒரு நிரலாக்கத்தொடர்.

find next : அடுத்தது கண்டறி.

find now : இப்போது கண்டறி.

find unmatched : பொருந்தாதன கண்டறி.

fine : தரமான.

fine print : தரமான அச்சு. finesse : நய நுட்பம் : 'உருவங்கள்' என்ற பட்டியல் திரையின் 'ஜெம்' சூழலைப் பயன்படுத்து கிற ஒரு DTP மென்பொருள்.

finger : ஃபிங்கர் : இது ஒர் இணையப் பயன்பாட்டு நிரல். இணையத்தில் நுழையும் ஒரு பயனாளர், இணையத்தில் நுழைந்துள்ள இன்னொரு பயனாளர் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள உதவும் நிரல். இன்னொரு பயனாளரின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால், அவரின் முழுப்பெயர் மற்றும் பிறர் அறிந்துகொள்ள அவர் அனுமதித்துள்ள மற்ற விவரங்களையும் பெற முடியும். அல்லது ஒரு பெயரைத் தந்து அப்பெயரில் உள்ளவர்கள் இணையத்தில் அப்போது உலா வருகின்றனரா என்பதையும் அறியலாம். ஆனால், பிற வலைத்தளங்கள் இந்த நிரல் அணுகுவதற்கு அனுமதி தர வேண்டியது முக்கியமாகும். யூனிக்ஸ் பணித்தளத்தில் மட்டுமே செயல் பட்டு வந்த ஃபிங்கர் இப்போது வேறுபல பணித்தளங்களுக்கான வடிவங் களிலும் கிடைக்கிறது.

fingerprint reader : கைரேகை படிப்பி : பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஒருவரின் கைரேகையை அடையாளம்காணப் பயன்படுத்தப்படுகிற நுண்ணாய்வுக் கருவி. ஒரு கைரேகை முன் மாதிரி எடுக்கப் பட்டபின்பு, ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள கைரேகைகளுடன் அது ஒத் திருக்குமானால், ஒரு கணினியை அல்லது பிற பொறியமைவை அணுகு வதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.

finite : முடிவான;அறுதியான;வரையறைக்குட்பட்ட : வரையறை களுக்குட்பட்டது. ஒரு முடிவு அல்லது ஒரு கடைசி எண். Infinite-க்கு எதிர்ச் சொல்.

finite element method : அறுதி பொருள் முறை : பல்வேறு பொறியியல் துறைகளில் களப்பகுதியின் சிக்கல்களைத் தீர்க்க உதவும் தொழில்நுட்பம்.

FiPS : ஃபிப்ஸ் : "கூட்டரசுத் தகவல் செய்முறைப்படுத்தும் செந்தரம்" எனப் பொருள்படும் "Federal Infor-mation Processing Standard" என்பதன் தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

firewall : நெருப்புச் சுவர்;தீச்சுவர் : ஒர் உள்முக இணையத்திலுள்ள கணினிகளைப் புறமுக அணுகுதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு பாதுகாப்பு நடவடிக்கை. இது, இணையத்திற்கும் புற உலகிற்குமிடையில் ஒற்றை வாயில் ஏற்படுத்துவதன் மூலம் அமைக்கப்படுகிறது. இந்த வாயில் வழியாக மட்டுமே எல்லாத் தொகுதிகளும் செல்ல முடியும். பிறகு இந்த வாயில் வழியே குறிப்பிட்ட சில அணுகுதல்கள் மட்டுமே அனுமதிக்கப்படு மாறு அமைக்கப்படுகிறது.

firmware : நிலைச்சாதனம் : வட்டு அல்லது நாடா போன்ற கணினியின் வெளிப்புறத்தில் வைக்கப்படும் வன்பொருள் மற்றும் மென்பொருள் நிர லாக்கத் தொடர் அல்லாத ரோம் எனப்படும் வன்பொருள் சிப்புவினுள் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள நிரலாக்கத் தொடர்.

firmware programmes : அசையாப் பொருள் செயல்முறைகள்;நிலைச் சாதன செயல்முறைகள் : இவை படிப்பதற்கு மட்டுமேயான நினைவுப் பதிப்பி களில் (ROM) மட்டுமே அமைக்கப்படுகின்றன. இவற்றை மிக விரைவாக அணுகலாம். எந்திரத்தை நிறுத்தும்போது இவை இழக்கப்படுவதில்லை. எனவே, இவை எந்திரத்தில் நிரந்தரமாக இருந்து வரும் என்பதால் இவற் றைக் கணினியில் மீண்டும் ஏற்றவேண்டியதில்லை.

FIR port : எஃப்ஐஆர் துறை : வேக அகச்சிவப்புத் துறை என்று பொருள் படும் Fast Infrared Port என்ற தொடரின் சுருக்கச்சொல். ஒரு கம்பி யில்லா உள்ளீட்டு/வெளியீட்டுத் துறை. பெரும்பாலும் கையிலெடுத்துச் செல்லும் கணினிகளில் இருக்கும். அகச்சிவப்பு ஒளிக்கதிர் மூலமாக புறச்சாதனங்களுடன் தரவுவைப் பரிமாறிக் கொள்ளும்.

FIRST : ஃபர்ஸ்ட் : நிகழ்வு எதிர்ச்செயல் மற்றும் பாதுகாப்பு குழுக்களின் அமைப்பு என்று பொருள்படும் Forum of Incident Response and Security Teams என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையக் கழகம் (Internet Society-ISOC) அமைப்பினுள் செயல்படும் ஒரு நிறுவனம் ஆகும். கணினி அமைப்புகளின் பாதுகாப்புக்கு ஏற்படும் ஆபத்துகளுக்கு எதிரான கூட்டு முயற்சியையும், தரவு பகிர்வையும் ஊக்குவிக்கும் பொருட்டு செர்ட் (CERT) அமைப்புடன் சேர்ந்து செயல்படுகிறது.

first computer programmer : முதலாம் கணினி செயல் வரைவாளர்; நிரலர் : ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகளான லேடி அடா லவ்லேஸ் இந்த சிறப்புத் தகுதியைப் பெற்று உள்ளார். first fit : முதல் பொருத்திடம் : திறம்பாடு தேவையான அளவைவிட அதிகமாகக் கொண்டுள்ள முதல் தொகுதிக்கு நுண்ணாய்வு மூலம் சேமிப்புப் பகுதியினைத் தேர்ந்தெடுக்கிற ஒரு முறை.

first generation computer languages : முதல் தலைமுறைக் கணினி மொழிகள் : ஈரிலக்கக் குறியீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அறிவுறுத் தங்களின் ஒரு தொகுதி. இது முதல் தலைமுறை மொழி எனப்படும். இதில், '0' களும், '1'களும் அடங்கியிருக்கும். இதனை'எந்திர மொழி என்றும் கூறுவர். இதனைக் கணினி புரிந்து கொள்ளும். இந்தத் தலை முறையைச் சேர்ந்த மொழியை மட்டுமே கணினி நேரடியாகப் புரிந்து கொள்கிறது. கணினியால் செய்முறைப்படுத்துதல் தொடங்கப்படுவதற்கு முன்பு, பயன்படுத்துபவரின் அறிவுறுத்தங்கள் அனைத்தும் முதலில் இந்த மொழியில் மாற்றம் செய்யப்படுகின்றன. இதனை'ஈரிலக்க மொழி (Binary Language) என்றும் கூறுவர்.

first generation computers : முதல் தலைமுறைக் கணினிகள் : 1951இல் யூனிவாக்கில் (UNIVAC) அறிமுகப்படுத்தப்பட்டு, 1959 இல், முழுவதும் மின்மப் பெருக்கிகளால் ஆன கணினிகளாக வளர்ச்சி பெற்றதில் முடிகின்ற, வணிக முறையில் கிடைத்த முதல் கணினிகள். வெற்றிடக் குழாய்களைக் கொண் டிருந்த இவை இப்போது காட்சிப் பொருள்களாக மட்டுமே உள்ளன.

first in first out : முதல் புகு முதல் விடு;முதலில் வந்தது முதலில் செல்லும் : ஒரு கியூவில் நிற்பவர்களுள் முதலில் வந்தவரே முதலில் செல்லமுடியும். கணினியிலும் இதுபோல, ஒரு பட்டியலில் முதலில் சேர்க்கப்பட்டதே முதலில் நீக்கப்படுகின்ற முறை பல்வேறு செயலாக்கங் களில் பின்பற்றப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அச்சுப்பொறிக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களின் பட்டியலில் முதலில் வந்ததே முதலில் அச்சிடப்படும்.

first-in-last-out : முதல் புகு கடை விடு : முதலில் வந்தது இறுதியில் செல்லும்.

first order predicate logic : முதல் நிலை பயனிலை தருக்க முறை : ஒரு கோட்பாட்டில் உள்ள மாறிலிகளில் செய்யப் படவேண்டிய நியமங்களை இது அனுமதிக்கிறது. புரோ லாக் (Prolog) கணினி மொழியில் இத்தகைய தருக்க முறை பயன்படுத்தப் படுகிறது.

fitting : பொருத்துதல் : தரவுகளின் தொகுதி மற்றும் வடிவமைப்பு விதிமுறைகளில் துல்லியமாகப் பொருத்துவதற்காக கோடுகள், மேற்பரப்பு அல்லது வளைவுகளைப் பற்றிய கணக்கீடுகளை கணினி வரைகலை முறையில் செய்வது.

fixed : நிலையான, மாறாத;குறிப்பிட்ட : ஒரு தரவு பதிவேட்டில் எப் போதும் நிலையாக இருக்கின்ற புலம் பற்றியது.

fixed area : குறிப்பிட்ட பரப்பு : குறிப்பிட்ட நிரலாக்கத்தொடர் அல்லது தரவு பகுதிகளுக்கென ஒதுக்கப்பட்ட உட்புற சேமிப்பகத்தின் பகுதி.

fixed block length : நிலைத்த தொகுதி நீளம்.

fixed disk : நிலை வட்டு : வட்டுத் தொகுதி நிரந்தரமாக ஏற்றிவைக்கப் பட்டுள்ள ஒரு வட்டு இயக்கி. பெரும்பாலான சொந்தக் கணினிகளில் உள்ள அகற்ற முடியாத வன்வட்டுகள் இவ்வகையைச் சேர்ந்தவை.

fixed head disk unit : பொருத்தப்பட்ட படிமுனை வட்டு அலகு : இருமை தரவுகளைக் குறிப்பிட காந்தப் புள்ளிகள் வடிவில் தரவுகளைத் தன் மேற் பரப்பில் காந்தமயக் குறியீடுகள் செய்யப்பட்டுள்ள ஒன்று அல்லது மேற்பட்ட வட்டுகளைக் கொண்ட சேமிப்புச் சாதனம். வட்டுகளைச் சுற்றி வட்டப் பாதைகளில் தரவுகளை வரிசைப்படுத்தியிருப்பார்கள். படி/எழுது முனைகள் ஒரு வழித்தடத்திற்கு ஒன்றாக செய்திகளைப் படிக்கவும் எழுதவும் செய்யும். படி/எழுது முனைகளின் மேலோ அல்லது கீழோ வட்டு சுழலும்போது ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் உள்ள தரவுகளைப் படிக்கவோ/ எழுதவோ முடியும். Mowable head disk unit-க்கு மாறானது.

fixed length field : நிலை நீளப்புலம் : புலத்தின் நிலையான வடிவளவு. எடுத்துக்காட்டு : 25 எண்மி (byte) புலம், ஒவ்வொரு பதிவேட்டிலும் 25 எண் மிகளை எடுத்துக்கொள்கிறது. இது, செயல்முறைப்படுத்துவதற்கும், படிப் பதற்கும் எளிதானது. ஆனால், வட்டு இடப்பரப்பை வீணாக்கி, கோப்பு வடி வமைப்பைக் கட்டுப்படுத்துகிறது. இது, மாறியல் நீளப்புலம் (variable length field) என்பதிலிருந்து மாறுபட்டது. fixed length files : நிலை நீளக் கோப்புகள் : பயன்பாட்டுச் செயல் முறை கோப்புகளை, மற்றப் பதிவேடுகளின் துணையின்றி நேரடியாக அணுகக்கூடிய வகையில் பதிவேடுகளைச் சேமித்து வைத்துள்ள கோப்புகள்.

fixed length record : நிலையான நீளப் பதிவேடு : எப்போதும் ஒரே எண்ணிக்கையில் எழுத்துகளைக் கொண்ட பதிவேடு. Variable length record-க்கு எதிர்ச்சொல்.

fixed numeric format : மாறா எண் வகை வடிவம்.

fixed point : நிலையான புள்ளி;மாறாப்புள்ளி : ஒரு வகையான எண்முறை. ஒவ்வொரு எண்னின் மதிப்பும் பல இலக்கங்களின் தொகுதியால் குறிப்பிடப்படுகிறது. இதில் பின்னணிப் புள்ளிகன் (radix point) இடம் எது என்பது எண்களைப் பயன்படுத்தும் முறையைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. Floating Point-க்கு எதிச்சொல்.

fixed-point arithmatic : நிலைப் புள்ளிக் கணக்கீடு : ஒவ்வொரு எண்ணின் பதின்மப் புள்ளியினையும் சரியான இடத்தில் கொண்டிருக்கிற அமைப்பு முறை. எனினும், இதில் இட நிலையினைக் கணிப்புக்க முன்பே குறித்து விடலாம். இது கணினி விரைவாகக் கணிப்பதற்கு அனுமதிக்கிறது; எனினும் எண்களின் வடிவளவைக் கட்டுப்படுத்துகிறது.

fixed point notation : நிலைப் புள்ளிக் குறிமானம் : பதின்மப் புள்ளி ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலைத்து இடம்பெறும் எண் வடிவாக்கம். இத்தகைய எண்வடிவம் கச்சிதமான திறன்மிக்க முழுஎண் வடிவத்துக்கும், பரந்த மதிப்பு களைச் சுட்டவல்ல சிக்கலான மிதவைப் புள்ளி வடிவத்துக்கும் இடைப் பட்டதாகும். மிதவைப் புள்ளி எண்களைப் போலவே, நிலைப் புள்ளி எண் களிலும் பின்னப்பகுதி உண்டு. ஆனாலும், மிதவைப் புள்ளியெண் கணக் கீடுகளைவிட நிலைப்புள்ளியெண் கணக்கீடுகளுக்கு குறைந்த நேரமே ஆகும்.

fixed point representation : நிலைப் புள்ளி உருவகிப்பு.

fixed-programme computer : நிலை நிரல் கணினி.

fixed scale : நிலையான அளவு கோல்;நிலை அளவு கோல்.

fixed size records : நிலையான அளவுப் பதிவேடுகள் : ஒரே அளவிலான சொற்கள், எழுத்துகள், எட்டியல்கள், துண்மிகள், புலங்கள் போன்றவற்றைக் கொண்ட கோப்புத் தன்மைகள்.

fixed spacing : நிலையான இடைவெளி விடுதல்;மாறா இடைவெளி : ஒரு பக்கத்தில் குறுக்குவாட்டில் நிலையான இடைவெளிவிட்டு எழுத்து களை அச்சிடுதல்.

fixed storage : நிலையான சேமிப்பகம் : படிக்க மட்டுமான சேமிப்பகம். கணினி நிரல்கள் மூலம் உள்ளடக்கங்களை மாற்ற முடியாத சேமிப்பகம்.

fixed word length : நிலையான சொல் நீளம்;மாறா சொல் நீளம் : எப்போதும் ஒரே எண்ணிக்கையில் துண்மிகள், எண்மிகள், எழுத்துகளைக் கொண்ட எந்திரச் சொல் அல்லது இயக்கி பற்றியது. Variable word length என்பதற்கு எதிர்ச்சொல்.

fixed word length computer : நிலைச் சொல்நீளக் கணினி : ஏறத்தாழ அனைத்துக் கணினிகளுக்கும் இவ்விளக்கம் பொருந்தும். ஒரு கணினியில் நுண்செயலி, பிற வன்பொருள் பாகங்களுடன் தொடர்பு கொள்ளப் பயன் படுத்தும் முதன்மையான தரவுப் பாட்டையில் ஒரே நேரத்தில் எத்தனை துண்மி (பிட்) களைப் பரிமாறிக் கொள்ள முடியும் என்பதே ஒரு சொல் எனப்படுகிறது. ஒரு சொல் எனப்படுவது 2 பைட்கள் அல்லது 4 பைட்கள் நீளமுள்ளதாக இருக்கலாம். தற்போது புழக்கத்திலுள்ள ஐபிஎம் மற்றும் மெக்கின்டோஷ் சொந்தக் கணினிகளில் பொதுவாக 2 பைட்டு, 4 பைட்டு சொற்கள் கையாளப்படுகின்றன. 8 பைட்டு சொற்களைக் கையாளும் கணினிகளும் உள்ளன. நுண் செயலியின் அனைத்துச் செயலாக்கங்களிலும் ஒரே அளவான சொல் கையாளப்படும் எனில் அது நிலைச்சொல் நீளக் கணினி எனப்படுகிறது.

. fj : . எஃப்ஜே : இணையத்தில், பிஜி நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக்களப் பெயர்.

Fkey (Function Key) : எஃப் விசை (செயற்பணி விசை) : நிரல், புடை பெயர்வு, விருப்பத் தேர்வு விசை இணைப்புகளைப் பயன்படுத்துகிற மெக்கின்டோஷ் நிரல்வரிசை. எடுத்துக்காட்டு : எஃப் விசை 1 (நிரல்-புடை பெயர்வு 1), உள்முக நெகிழ் வட்டினை வெளியேற்றுகிறது.

flag : அடையாளக் குறியீடு : 1. முன்பு நடந்ததைக் கொண்டு, சொல் அல்லது நிரம்பி வழி கிறதுபோன்ற சில நிலைகளை நிரலாக்கத்தொடரின் பிற்பகுதிக்கு உணர்த்தப் பயன் படுத்துவது. 2. சிறப்பு கவனத்திற்காக ஒரு பதிவேட்டைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் குறியீடு. சான்று : ஒரு நிரலாக்கத் தொடரை வரிசைப் படுத்தும்போது பிழை ஏற்படும் வாக்கியங்களுக்கு அடையாளக் குறியீட்டை அமைத்து நிரலாக்கத் தொடர் எழுதுபவரின் கவனத்தைக் கவரலாம். 3. குறுக்கீடு போன்ற சிறப்புச் சூழ்நிலைகளைக் குறிப்பிடுவது.

flag character : அடையாளக் குறி;சுட்டுக்குறி.

flame : உணர்வெழுச்சி : மின்னணுவியல் அஞ்சல் வழியாக உணர்வு பூர்வமாக அல்லது அதீதமாகச் செய்தித் தொடர்பு கொள்வதைக் குறிக்கும் கொச்சை வழக்கு.

flame bait : பிழம்புத் தீனி;எரிகொள்ளிக்கு எண்ணெய் : உணர்ச்சி வயமான விஷயத்தில் சர்ச்சையைக் கிளப்பும் கருத்துகளை முன்வைத்தல். இந்தியாவைப் பொறுத்தவரை சாதி, மதம், வழிபாட்டு இடம் தொடர்பான கருத்துகள் இவ்வகையில் அடங்கும். கணினித் துறையைப் பொறுத்தவரை அஞ்சல் பட்டியல், செய்திக் குழுக்கள், ஏனைய நிகழ்நிலைக் கருத்தரங்கு களில் பிறரின் சினத்தைக் கிளறும் வகையில் முன்வைக்கப்படும் ஒரு கருத்து.

flame fest : பிழம்பு விருந்து : இணையத்தில் செய்திக் குழுவிலும் அல்லது பிற நிகழ்நிலைக் கருத்தரங்கிலும் சர்ச்சையைத் தூண்டும் வகையில் தொடர்ச்சியாக முன் வைக்கப்படும் செய்திகள்/கருத்துரைகள்.

flamer : தீயாள்;நெருப்பாளி;பிழம்பர் : மின்னஞ்சலில், செய்திக் குழுக்களில், நிகழ் நிலை விவாத மேடைகளில், நிகழ்நிலை அரட்டைகளில் சின மூட்டும், சர்ச்சைக்கிடமான செய்தியை அனுப்பி வைப்பவர்.

flame war : தீப்போர்;பிழம்புப் போர் : அஞ்சல் பட்டியல், செய்திக் குழு மற்றும் பிற நிகழ்நிலைக் கருத்தரங்கில் காரசாரமான வாதப் பிரதிவாதமாக மாறிப்போகின்ற ஒரு கலந்துரையாடல்.

flash BIOS : அதிவிரைவு பயாஸ்.

flashing : மின்வெட்டு : ஒரு காட்சித் திரையில் எழுத்துகள் மின் வெட்டுப்போல் தோன்றி மறைதல். திரையில் காட்டப் படும் ஒன்றின் மீது கவனத்தை ஈர்ப்பதற்கு இது பயன்படுகிறது.

flash memory:மின்வெட்டு நினைவகம்:விசையின்றித் தனது உள்ளடக்கத்தை இருத்தி வைத்துக் கொள்கிற நினைவகச் சிப்பு. ஆனால், இது மொத்தமாக அழித்துவிடப்படுதல் வேண்டும். மின்வெட்டு நேரத்தில் அழித்துவிடக்கூடிய இதன் தன்மையிலிருந்து இதற்கு இந்தப் பெயர் வந்தது. இந்தச் சிப்புகளின் விலை குறைவு. அதே சமயம் இவை அதிகத் துணுக்குச் செறிவுகள் உடையவை. இது இன்றைய,படிப்பதற்கு மட்டுமேயான நினைவகத்திற்கு மாற்றாக அமையக் கூடும்.

flat:தட்டை.

flat address space:தட்டை முகவரியெண் இடப்பரப்பு:இது ஒருவகை நினைவக முகவரி யிடும் முறை. இதில் ஒவ்வொரு எண்மி,'0'-லிருந்து தொடங்கும் வெவ்வேறு வரிசை எண் மூலம் குறிக்கப்படுகிறது. இது, 'கூறுபடுத்திய முகவரி யெண் இடப்பரப்புSegmented address space) என்பதிலிருந்து வேறுபட்டது.

flatbed plotter:கிடைத் தட்டை வருடு பொறி;கிடைத்தட்டை வரைவி; கிடைமட்ட படுகை வரைவி;சமதளப்படுகை வரைவி:தட்டையான மேற் பரப்பில் செங்குத்து மற்றும் குறுக்குவாட்ட திசைகளில் நகரும் முனை களைப் பயன்படுத்தும் இலக்கமுறை வரைவி. Drum Plotter-க்கு எதிர்ச்சொல்.

flatbed scanner:கிடைத்தட்டை வருடு பொறி;கிடைத்தட்டை வருடி: இத்தகைய வருடு பொறியில் கிடைமட்டமாக தட்டையான கண்ணாடிப் பரப்பு இருக்கும். இதன்மீது தான் புத்தகம் அல்லது தாள் ஆவணத்தைக் கிடத்த வேண்டும். அப்பரப்பின்கீழ் ஒரு வருடுமுனை அச்சுநகலின் உருப்படத்தை வருடிச் செல்லும். சில கிடைத்தட்டை வருடுபொறிகள் ஊடுகாண்(transparent) நகல்களை,காட்டாக சிலைடுகளை உருவாக்கும் திறனுள்ளவை.

flatbed type:தட்டைப் படுகை வகை.

flat file:தட்டைக் கோப்பு:மற்ற கோப்புகளுடன் தொடர்பு கொண்டிராத தரவுக் கோப்பு. இரு தட்டைக் கோப்புகளுக்கிடையிலான தொடர்பு எதுவும் தருக்க முறையிலானதாகும். எடுத்துக்காட்டு : இணையொத்த கணக்கு எண்கள். தொடர்புத் திறம்பாடு இல்லாத கோப்பு மேலாளர்களை இது குறிக்கிறது.

flat file database : தட்டைக் கோப்புத் தரவுத் தளம் : அட்டவணை வடிவிலான தரவுத்தளம். ஒவ்வொரு தரவுத் தளமும் ஒரேயொரு அட்ட வணையை மட்டுமே கொண்டிருக்கும். ஒரு நேரத்தில் ஒரு அட்ட வணையில் மட்டுமே பணியாற்ற முடியும்.

flat file directory : தட்டைக் தட்டைத்கோப்பு கோப்பகம் : உள் கோப் பகங்கள் (Sub Directories) இல்லாத, கோப்புகளின் பட்டியலை மட்டுமே உள்ளடக்கிய ஒரு கோப்பகம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

flat file system : தட்டைக் கோப்பு முறைமை : படிமுறை அடுக்கு (hierarchieal order) இல்லாத ஒரு வகைக் கோப்புமுறை. இம்முறையில் வட்டில் உள்ள எந்த இரண்டு கோப்பும் ஒரே பெயரைக் கொண்டிருக்க முடியாது. அவை வெவ்வேறு கோப்பகத்தில் இருப்பினும் ஒரே பெயர் இருக்க முடியாது.

flat panel display : தட்டைப் பலகக் காட்சி.

flat panel display terminal : தட்டையான காட்சி முகப்புப் பலகை; தட்டைப் பலகைக் காட்சியகம் : மின்ம (Plasma) காட்சிப்பலகை போன்று தரவை காட்டக்கூடிய சிறிய திரையுள்ள வெளிப்புறச் சாதனம்.

flat shading : தட்டை வண்ண செயல் : கணினி வரைகலையில் ஒரு வண்ணச் சாயலிட்ட மேற்பரப்பினை எளிய ஒளிவிடும்படி தூண்டுகிற ஒரு கணினி உத்தி.

flat screen : தட்டைத் திரை : தட்டையான காட்சிப் பலகையில் உள்ளது போன்ற சிறிய பலகை.

flat square monitor : தட்டைச்சதுர திரையகம்.

flat pack : தட்டைப் பெட்டி;சமதளப் பொதிவு : ஒரு முகப்பு அல்லது ஒரு அச்சிடப்படும் மின்கற்று அட்டையில் பற்றவைக்கக் கூடிய அல்லது ஒட்டவைக்கக் கூடிய சிறிய, எளிய, தட்டையான ஒருங்கிணைந்த மின்சுற்று அட்டை. இணைப்பிகள் கீழ் நோக்கி இறக்கி விடப்படுவதற்குப் பதிலாக வெளிப்பக்கம் விரிந்து செல்லும்.

flatted scanner : தட்டை நுண்ணாய்வு (வருடி) க் கருவி : நுண்ணாய்வு செய்யப்பட
தட்டை நுண்ணாய்வுக கருவி

தட்டை நுண்ணாய்வுக கருவி

வேண்டிய பொருள் வைக்கப் படுவதற்கான ஒரு கண்ணாடி மேற்பரப் பினையுடைய நுண்ணாய்வுக் கருவி. நுண்ணாய்வின்போது மூலப்படி நகரா மலிருப்பதால், தகடு ஊட்ட நுண்ணாய்வுக் கருவிகளை விட தட்டை நுண்ணாய்வுக் கருவிகள் அதிகத் துல்லியமான பலன்களை உண்டாக்கு கின்றன. ஒரு நுண்ணாய்வுக் கருவியினால் ஒரு முழுப்பக்க வரைகலையை அல்லது ஒரு பக்க வாசகத்தை ஒர் இலக்கமுறைக் கோப்பாக மாற்ற முடியும்.

flexible array : நெகிழ்வு வரிசை : பரிமாணத்தை விரிவாக்கவோ சுருக்கவோ கூடியதாகவுள்ள ஒர் அணி வரிசை.

flexible disk : நெகிழ்வட்டு.

flexible disk cartridge : நெகிழ்வு வட்டுப் பொதியுறை : பன்னாட்டுத் தர அளவுகளின்படி ஒரு நெகிழ் வட்டின் பெயர்.

flexi-disk : நெகிழ் வட்டு : மென்வட்டு என்பதன் என்னொரு பெயர்.

flexowriter : ஃபிளக்சேரைட்டர் : காகித நாடா உள்ளீட்டை ஏற்றுக் கொள்ளக்கூடிய தட்டச்கப் படிவம். பல பழைய கணினிகளில் உள்ளீடு / வெளியீடு சாதனமாகப் பயன்படுத்தப்பட்டது.

flicker : மினுக்கி : வேகமான தொடர்ச்சி மற்றும் போதாக்குறையான புத்தளிப்பு விகிதத்தின் காரணமாக திரையில் காட்டப்படும் விரும்பத்தகாத நிலையற்ற ஒளி, திரையில் காட்டப்பட வேண்டிய இயற்கையான வெளிச் சத்திற்கு ஈடு கட்டும் வகையில் உள்ளிருந்து வரும் வெளிச்சம் போதுமான தாக இல்லாதபோது இது நிகழ்கிறது.

flickering : மினுக்கல்.

flight computer : பறக்கும் கணினி : விண்கலம், விமானம் அல்லது ஏவுகணையில் அமைக்கப்பட்ட கணினி. flight simulator : பறத்தல் போன்ற நிகழ்வு : புதிய விமானத்தில் விமான ஒட்டிகளுக்குப் பயிற்சி அளிக்க விமான நிறுவனங்கள் பயன் படுத்தும் கணினி கட்டுப்பாட்டு போலி நிகழ்வு. விமானி உரிமம் புதுப்பித்தலின்போது பயிற்சி பெறவேண்டிய போலி விமானப் பயண நிகழ்வு. அதை இயக்கும் போது உண்மையில் வானத்தில் பறப்பது போலவே இருக்கும்.

flip-flop : ஏற்ற இறக்கம் : குறிப்பிட்ட நேரத்தில் நிலையான இரண்டு நிலைகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய இயங்கும் பொருள் கொண்ட சாதனம் அல்லது மின்சுற்று. Toggle-க்கு உடன்பாட்டுச் சொல்.

flippy : ஃபிளிப்பி ஃபிளாப்பி வட்டுக்குச் சமமான சொல். நெகிழ் வட்டுக்கு இன்னொரு பெயர்.

flippy board : இருபக்கப் பலகை : AT மற்றும் நுண் வழித்தடங்கள் இரண்டையும் இணைக்கிற சொந்தக் கணினி (PC) பலகை. இந்தப் பலகையின் ஒரு பக்கத்தில் AT இணைப்பிகளும், மற்றொரு பக்கத்தில் MCA இணைப்பிகளும் இருக்கும்.

flippy-floppy : இருபக்க நெகிழ் வட்டுஇருபக்கப் பயன்பாட்டுக்காக மாற்றப்பட்டுள்ள ஒற்றைப் பக்க 13. 33 செ. மீ. (5. 25 அங்) நெகிழ்வட்டு. இந்த வட்டின்மீது இரண்டாவது தடம் ஒன்றை வெட்டுவதன் மூலம் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. இதில் வட்டின் சுழற்சி மாறிமாறி வருவதால், இது பரிந்துரைக்கப்படுவதில்லை.

float : மிதவைஒரு பணி அல்லது செயல்முடிந்த பிறகு அடுத்த பணி தொடங்குவதற்கு இடையில் இருக்கக்கூடிய காலம் Slack Time என்றும் அழைக்கப்படுகிறது.

floating decimal arithmetic : மிதவைப் பதின்மக் கணக்கீடு.

floating point : மிதக்கும் புள்ளி;மிதவைப் புள்ளி : ஆதார எண்னின் மடங்கினால் பெருக்கப்படும் மான்டிசா என்ற எண்ணைப் பிரதிபலிக்கும் அளவுகளுள்ள எண் வடிவம். Fixed Point-க்கு எதிர்சொல்.

floating point arithmatic : மிதவைப் புள்ளிக் கணக்கீடு : அடிப்படை எண்ணாகிய (Radix Point) ரேடிக்ஸ் பின்னப் புள்ளியின் இருப்பிடத்தினை தானாகவே கணக்கிடும் கணக்கு முறை Fixed Point Arithmatic என்பதற்கு எதிர்ச்சொல்.

floating-point BASIC : மிதக்கும் புள்ளி பேசிக் : பதின்ம எண்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் பேசிக் மொழியின்

floating-point constant : மிதக்கும் புள்ளி நிலையெண்;மிதவைப் புள்ளி மாறிலி : இரண்டு பகுதிகள் உடைய எண். இதில் ஒரு பகுதியானது அந்த எண்ணின் பதின்மப் பகுதியைக் குறிக்கும். மற்றொரு பகுதி அந்த எண்ணின் பின்ன (ரேடிக்ஸ்) அடிப்படையை குறிக்கும். real constant என்றும் அழைக்கப் படுகிறது.

floating point notation : மிதவை முனைக் குறிமானம்;மிதவைப் புள்ளிக் குறிமானம்;மிதக்கும் புள்ளி முறை : மிகச்சிறிய எண் களையும், மிகப் பெரிய எண்களையும் வசதியாகக் குறிப்பதற்கு இயல்விக்கும் பதின்ம எண்களின் குறியீடு.

floating point number : மிதவைப் புள்ளி எண் : கொடுக் கப்பட்ட ஒர் அடி யெண்ணு (Base) க்கு ஏற்ப, பின்னம் மற்றும் அடுக்கெண் (Mantissa and exponent) ஆகிய இரு பகுதிகளைக் கொண்ட எண் வடிவம். பின்னம், பொதுவாக 0. 1க்கு இடைப்பட்ட எண்ணாக இருக்கும். அதனை, அடியெண் னின்மீது அடுக்கெண்ணை பத்தின் அடுக்காகக் கொண்டு பெருக்கினால் மிதவைப் புள்ளி எண்ணின் மதிப்பு கிடைக்கும்.

0. 12345х103

என்பது ஒரு மிதவைப் புள்ளி எண். இதில் 0. 12345 என்பது பின்னம் (mantissa). 10 என்பது அடியெண் (Base). 3 என்பது அடுக்கெண் (Exponent). இதன் மதிப்பு 123. 45 ஆகும். இதே எண்னை

1. 23. 45x 102

12. 345 x 10

என்றும் கூற முடியும். இங்கே புள்ளி இடம் மாறிக் கொண்டே இருப்பதால், மிதவைப் புள்ளி எனப் பெயர் பெற்றது. சாதாரண அறிவியற் குறிமானம் (scientific notation) பத்தினை அடியெண்ணாகக் கொண்ட மிதவைப் புள்ளி எண்களைப் பயன்படுத்துகிறது. கணினியில் இரண்டினை அடியெண்ணாகக் கொண்ட மிதவைப் புள்ளி எண்களே பொதுவாக புழக்கத்தில் உள்ளன.

floating-point operation : மிதக்கும் புள்ளி இயக்கம்;மிதவைப் புள்ளிக் கணக்கீடு : மிதக்கும் புள்ளிக் கணக்கைக் கொண்டு செய்யப்படும் இயக்கம்.

floating-point processor : மிதவை முனைச் செயலி : மிதவை முனைச் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு வடிவமைக்கப் பட்டுள்ள கணித அலகு. இது, ஒரு சொந்தக் கணினியில் ஒரு இணைச் செய் முறைப்படுத்தியாக இருக்கலாம். இதனை, முதன்மைக் கணினியுடன் இணைக்கப்படு கிற ஒரு வரிசைச் செய்முறைப் படுத்தி என்றும் அழைப்பர்.

floating point register : மிதவைப் புள்ளியெண் பதிவகம் : கணினியில் மிதவைப் புள்ளி எண் மதிப்புகளை இருத்தி வைக்க வடிவமைக்கப்பட்ட பதிவகம்.

floating point representation : மிதவைப் புள்ளி உருவகிப்பு.

floating-point routine : மிதக்கும் புள்ளி வழக்கச் செயல்;மிதவைப் புள்ளி வாலாயம் : வழக்கச் செயல்களின் தொகுதி. மிதக்கும் புள்ளி வன்பொருள் இல்லாமல் செய்யப்படும் கணினியில், மிதக்கும் புள்ளி இயக்கத்தைச் செய்ய வல்லது.

floating point type : மிதவைப் புள்ளி வகை.

FLOP : ஃப்ளாப் : Floating Point Operation என்பதன் குறும்பெயர்.

floppy disk : நெகிழ் வட்டு;மென் வட்டு;செருகு வட்டு : வளையக்கூடிய வட்டு. காகித அல்லது பிளாஸ்டிக் உறைகளில் வைக்கப்படும் ஆக்சைடு பூசப்பட்ட வட்ட மைலார் வட்டு. உறையோடு வட்டு இயக்கியில் உள்ளே நுழைக்கப்படும். சிறு கணினி, நுண்கணினிகளில் பரவலாகப் பயன்படுத்தப் படுவது. குறைந்த சேமிப்புத் திறனும், குறைந்த விலையும் அதே அளவு குறைந்த தகவல் பரிமாற்ற விகிதமும் உள்ளது. வழக்கமான ஃபிளாப்பி வட்டுகள் 20. 32 செ. மீ. குறுக்களவுள்ளன. சிறு ஃபிளாப்பி வட்டுகள். 13. 3. செ. மீ (5 1/4 அங்) குறுக்களவுள்ளவை. நுண் ஃபிளாப்பிகள் 9. செ. மீ (3 1/2) அங்.) -க்கும் குறைவான குறுக்களவுடன் வருகின்றன. பார்க்க magnetic disk, diskete, hard disk-க்கு எதிர்ச் சொல்.

floppy disk case : நெகிழ்வட்டுப் பெட்டி;மென் வட்டு உறை : ஃபிளாப்பி வட்டுகளைப் பாதுகாத்து வைக்கும் பெட்டி. பொதுவாக பிளாஸ்டிக்கினால் செய்யப்படும்.

floppy disk controller : நெகிழ்வட்டு கட்டுப்பாட்டுப் பொறி;மென் வட்டுக் கட்டுப்படுத்தி : மென்வட்டு இயக்கியைக் கட்டுப்படுத்தும் மின்சுற்று அட்டை அல்லது சிப்பு. floppy disk drive : நெகிழ் வட்டு இயக்கி : ஒரு நெகிழ் வட்டின் மீது எழுதவும் படிக்கவும் செய்கிற ஒரு மின்னியல்-எந்திரவியல் சாதனம். வட்டு இயக்கியில் ஒரு படிக்கும்/எழுதும் முனை இருக்கும்;இது, வட்டின் மீதுள்ள தரவுக் கோப்புகளை அணுகுகிறது. தேவைப்பட்டால் அவற்றை நாளது தேதி வரைப் புதுப்பிக்கிறது. வட்டு இயக்கி, வட்டின் உள்முகக் காந்த ஊடகத்தை நிமிடத்திற்கு 360 சுழற்சி வேகத்தில் சுழலச் செய்கிறது. இதனால், வட்டில் எழுதும்/படிக்கும் முனையின் கீழுள்ள அனைத்துப் பகுதிகளும் குறைந்த இடைவெளிகளில் தோன்றுகின்றன. பெயர்ச் சுருக்கம் : FDD

floppy disk unit : நெகிழ் வட்டு அலகு : காந்தப்படுத்தப்பட்ட நெகிழ் வட்டுகளில் தரவுகள் பதிவு செய்யப்படும் புறச்சேமிப்புச் சாதனம்.

FLOPS : ஃபிளாப்ஸ் (மிதவை முனைச் செயற்பாடுகள்/வினாடி) : Floating Point Operation Per Second என்பதன் குறும் பெயர். மிதவை முனைக் கணிப்புகளை அளவிடும் அலகு. எடுத்துக்காட்டு : 100 மெகா ஃபிளாப்ஸ் என்பது, ஒரு வினாடி 10 கோடி மிதவை முனைச் செயற்பாடுகளாகும்.

flaptical : நெகிழ்ஒளிவம்;நிகழ் ஒளியியல் : காந்தம் மற்றும் ஒளிவத் தொழில் நுட்பங்களின் சேர்க்கை. இதனடிப்படையில் உருவாக்கப்படும் 3. 5 அங்குல சிறப்புவகை வட்டுகளில் மிக அதிகத் தரவுகளை பதிய முடியும். வட்டினில் காந்த வடிவிலேயே தரவு எழுதப்படுகிறது. படிக்கப்படுகிறது. ஆனால், எழுது/படிப்பு முனை லேசர் கதிர்மூலம் இடம் நிறுத்தப்படுகிறது. இன்சைட் பெரிஃ பெரல்ஸ் என்னும் நிறுவனம் இச்சொல்லை உரு வாக்கியது. வணிகக் குறியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

floptical disk : நெகிழ் ஒளியியல் வட்டு;நெகிழ் ஒளி வட்டு : ஒளியியல் உத்திகளும், காந்த உத்திகளும் ஒருங்கிணைந்த ஒருவகை நெகிழ் வட்டு. இவை மிக அடர்த்தியான தரவு சேமிப்புத் தடங்களை உடையவை. இதனால் மிக உயர்ந்த சேமிப்புத் திறன் கொண்டவை. இது புதிய தொழில்நுட்பமாகையால், ஒளியியல் நெகிழ்வட்டுகள் இன்னும் அதிகமாக பயன்பாட்டுக்கு வரவில்லை.

floptical drive : நெகிழொளிவ இயக்ககம்.

flow : ஒழுக்கு;பாய்வு : flow analysis : ஒழுக்குப் பகுப்பாய்வு;பாய்வுப் பகுப்பாய்வு : கணினி அமைப்பில் பல்வேறு வகையான தரவுகளின் போக்குவரத்தை ஆய்வு செய்யும் ஒரு வழிமுறை. குறிப்பாக, தரவுவின் பாதுகாப்பு மற்றும் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பான ஆய்வாக இருக்கும்.

flow chart : தொடர் வரைபடம் : குறியீடுகள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கும் வரிகளைக் கொண்டு வரையப் படும் வரைபடம். இப்படத்தில் பின்வருவன இடம் பெறலாம். 1. குறிப்பிட்ட நிரலாக்கத் தொடர் இயக்கத்தின் தருக்க முறை மற்றும் தொடர்ச்சியைக் குறிப்பிடலாம். (நிரலாக்கத் தொடர் ஒடுபடம்) அல்லது 2. நோக்க அமைப்பு. ஒரு படத்தினை உருவாக்கும் செயலாக்க அமைப்பையும் குறிப்பிடலாம். கட்ட வரைபடம் (block diagram) என்றும் சிலசமயம் கூறப்படும். ஒப்பிடுக. Structured flow chart.

flow chart, detail : விவரப் பாய்வு நிரல்படம்.

flow charter : ஓடுபட உருவாக்கி;தொடர் வரைபடம் வரைவி : புலன் காட்சித்திரை இலக்க முறை வரைவி அல்லது அச்சுப் பொறியைக் கொண்டு தானாகவே ஒடுபடங்களை உருவாக்கும் கணினி நிரலாக்கத் தொடர்.

flow charting symbol : ஓடுபட அமைப்புக் குறியீடு;தொடர் வரைபடக் குழூஉக்குறி : ஒடு படத்தில் கருவிகள், தரவு ஒட்டம் மற்றும் இயக்கங் களைக் குறிப்பிடும் குறியீடு.

flow chart, system : முறைமைப் பாய்வு நிரல்படம்.

flow chart template : ஓடுபட அட்டை : ஓட்டப்பட படிம அச்சு : ஒடுபடக் குறியீடுகளைக் கொண்டு வெளிப்புற வடிவங்களைக் கொண்ட பிளாஸ்டிக் வழிகாட்டி. ஒடுபடம் தயாரிப்பதில் பயன்படுவது.

flow chart text : ஓடுபடச் சொற்கள்;ஒட்டப்படக் குறிப்பு : ஒடுபடக் குறியீடுகளுடன் தொடர்புள்ள வர்ணனைத் தரவு.

flow control : தொடர்வரிசைக் கட்டுப்பாடு : செய்தித் தொடர்புகளில் தரவு அனுப்பீட்டினைக் கட்டுப்படுத்துதல். இது, அடுத்த தொகுதி அனுப்பப்படு வதற்கு முன்பு, தரவுகளை ஏற்பு நிலையம் செய்முறைப் படுத்தும்படி செய்கிறது. செயல் முறைப்படுத்தும் நிரலாக்கத் தொடர்களில் தருக்க முறையாக அமையும் "என்றால்" (lf) "பிறகு" (Then), வளையம் போன்ற கட்டளை அமைப்புகளைக் குறிக்கிறது.

flowline : ஒடு வரி;பாய்வுக் கோடு : ஒடுபடத்தில் ஒடுபடக் குறியீடுகளை இணைக்கும் பாதையைக் குறிப்பிடும் வரி. சாதாரணமாக அதன் ஒடும் போக்கு கீழ்நோக்கியும் பக்கவாட்டிலும் இருக்கும். ஓடு கோடுகள் மேல் நோக்கியோ அல்லது இடதுபக்கமாகவோ இருக்கும்போது அம்புத் தலை முறையில் அவற்றின் திசைகள் குறிப்பிடப்படும்.

flush1 : ஒழுங்கு சீர் : கணினித் திரையில் அல்லது தாளில் விவரங்கள் ஒரு குறிப்பிட்ட சீரமைவுடன் அமைந்திருப்பது. ஒழுங்கு-வலம் எனில் வலப்புறத்தில் எழுத்துகள் ஒரச்சீர்மையுடன் அமைந்திருத்தலைக் குறிக்கும். ஒழுங்கு இடம் எனில் இடப்புற ஒரச் சீர்மையைக் குறிக்கும்.

flush2 : வெளியெடு;வழித் தெடு;துடைத்தெடு;அகற்று : நினைவகத்தில் ஒரு பகுதியிலுள்ள விவரங்களைத் துடைத்தெடுத்தல். எடுத்துக்காட்டாக, வட்டுக் கோப்பு இடைநிலை (Buffer) நினைவகத்திலுள்ள விவரங்களை அகழ்ந்தெடுத்து வட்டில் எழுதிக்கொள்ள வேண்டும். அதன்பின் இடைநிலை நினைவகத்தை துடைத்தெடுக்க வேண்டும் மீண்டும் நிரப்புவதற்காக. இது போலவே விசைப்பலகையில் உள்ளீடு பெறும் விவரங்களை நுண்செயலி அல்லது வேறு உறுப்புகள் படிக்குமுன் அவை இடைநிலை நினைவகத்தில் தங்கியிருப்பதுண்டு. அவற்றையும் துடைத்தெடுத்துப் படிக்கப் படவேண்டும்.

flush center : வெளியேற்று மையம் : அச்சுக்கலையில், வாசகத்தை இடது, வலது ஒரங்களிடையே ஒரே சீராக மையப் படுத்துவதைக் குறிக்கிறது.

flush left : வெளியேற்று இடச்சீர்மை : அச்சுக்கலையில், வாசகங்கள் அனைத்தையும் ஒரே சீராக இடப்புற ஒரத்தில் வரிசைப்படுத்துதல். இடது ஒரத்தில் செங்குத்துக் கோட்டினை உருவாக்கும் வகையில் வாசகத்தை வரிசைப்படுத்தும் முறை. இது ஒரு பொதுவான அச்சிடும் உத்தியாகும்.

flush right : வலச்சீர்மை : அச்சுக்கலையில், வாசகங்கள் அனைத்தையும் வலது ஒரத்தில் வரிசைப்படுத்தும் முறை. இதில் இடப்புற ஒரம் ஒரே சீராக இராது.

flux : காந்தப்புலம் : ஒரு காந்தத்தினால் உருவாக்கப்பட்ட ஆற்றல் புலம்.

flux reversal : காந்த்ப்புல திசை மாற்றம் : காந்தவட்டில் அல்லது காந்த நாடாவின் மேற்பரப்பில் உள்ள மிக நுணுக்கமான காந்தத் துகள்களின் திசையமைப்பில் ஏற்படும் மாற்றம். இரும இலக்கங்கள் 0, 1 ஆகியவை இருவேறு காந்தப்புல திசையினால் குறிப்பிடப்படுகின்றன. காந்தப்புல திசைமாற்றம் இரும 1-என்ற இலக்கத்தைக் குறிக்கின்றது. இரும 0-வைத் குறிக்க திசைமாற்றக் குறியீடு எதுவும் இல்லை.

FM : எஃப்எம் : Frequency Modulation என்பதன் குறும்பெயர். சமிக்கை களால் குறிப்பிடப்படும் மதிப்புகளை சமிக்கைகளின் நெருக்கத்தை ஒட்டி மாற்றுதல்.

focus : முன்னிறுத்தி.

focusing : துல்லியப்படுத்தல்;குவித்தல் : காட்சித்திரையில் தெளிவற்ற உருவத்தைத் தெளிவாக்குதல்.

folder : மடிப்புச் சுவடி;கோப்புத் தொகுப்பு : ஒருவிவரக் குறிப்பேட்டின் மாற்றுப்பெயர். 'Apple' கணினிகள், Windows NT கணினிகள் போன்றவற்றில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மெக்கின்டோஷ் கணினியில், ஆவணங் களையும் (கோப்பு கள்), பயன்பாடுகளையும் மற்ற மடிப்புச் சுவடிகளையும் இருத்தி வைத்துக் கொள்ளும் ஒரு மாற்றுக் கோப்புத் தொகுப்பு.

folder options : கோப்புறை விருப்பத் தேர்வுகள்.

folders : கோப்புறைகள்

folio : புத்தகத்தாள் எண் : அச்சுக் கலையில் அச்சிட்ட பக்க எண். எடுத்துக்காட்டு : புத்தகத் தாள் எண் 3 என்பது, ஒரு நூலில் 27ஆம் பக்கத்தைக் குறிக்கும்.

folio VIEWS : ஃபோலியோ வியூஸ்;வாசக நோக்கி : 'ஃபோலியோகார்ப்' என்ற அமைவனம் தயாரித்துள்ள சொந்தக் கணினிகளுக்கான வாசக மேலாண்மை மென்பொருள், இது வாசகத் தரவு தளங்களுக்கான சேமிப்பு, மீட்புத் திறம்பாடுகளை அளிக்கிறது. இது 40-க்கும் அதிகமான வாசக உருவமைவுகளிலிருந்து வாசகங்களை வரவழைக்கவல்லது. follow up : மறுமொழி;பதிலுரை;தொடர் நடவடிக்கை : செய்திக் குழு வில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரைக்குப் பதிலுரை. மூலக்கட்டுரையில் இருக்கும் பொருளடக்க (Subject) வரியே பதிலுரையிலும் இருக்கும். 'Re' என்பது முன்னொட்டாக இருக்கும். ஒரு கட்டுரையும் அதற்கான பதிலுரை களும் கால வரிசைப்படி தொகுக்கப்பட்டிருக்கும். பயனாளர் செய்தி படிக்கும் நிரல்மூலம் அனைத்தையும் வரிசையாகப் படிக்க முடியும்.

font : எழுத்து அச்சு;எழுத்துரு;எழுத்து வடிவு;எழுத்து வடிவிலான : ஒரு தொடர்ச்சியான தனித்த அச்சு வடிவில் எழுத்துகளின் முழுத் தொகுதி.

font cartridge : எழுத்து உருவளவுப் பொதியுறை : ஒர் அச்சடிப்பி வரிப் பள்ளத்தினுள் செருகக்கூடிய ஒரு தகவமைவில் அடங்கியுள்ள ஒன்று, அதற்கு மேற்பட்ட அச்செழுத்து முகப்புகளுக்கான உருவளவுத் தொகுதி. இந்த உருவளவுகள் பொதியுறைக்குள் ஒரு'ROM'சிப்புடன் சேமித்து வைக்கப் பட்டிருக்கும்.

font class : எழுத்துரு வகை;எழுத்துரு இனக்குழு.

Font/DA Mover : ஃபான்ட்/டி. ஏ மூவர் : பழைய ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் பயனாளர் விரும்பும் எழுத்துருக்களையும், திரைப் பயன் பாடுகளையும் நிறுவிக்கொள்ள உதவும் ஒரு பயன்பாட்டு நிரல்.

font editor : எழுத்து உருப்பதிப்பி : எழுத்து உருவளவுகளை வடிவ மைத்து, மாற்றமைவு செய்வதற்கு அனுமதிக்கிற மென்பொருள்.

font family : எழுத்து உருக்குடும்பம் : ஒரே எழுத்து முகப்பிலுள்ள பல்வேறு வடிவளவு எழுத்துருக்களின் தொகுதி. இதில், சாய்வெழுத்துகள், தடித்த எழுத்துகள் போன்ற மாறுபட்ட எழுத்துருக்கள் அடங்கும்.

font family property : எழுத்துரு குடும்பப் பண்பு.

font generator : எழுத்துரு முகப்பு உருவாக்கி : எழுத்துரு முகப்பு வரைவினை ஒரு குறிப்பிட்ட எழுத்துரு முகப்புக்குத் தேவையான புள்ளிக் குறித் தோரணியாக மாற்றக் கூடிய மென்பொருள். எழுத்துரு முகப்பு உருவாக்கம் நீள வாக்கில் இருப்பதில்லை. மாறாக, எழுத்து எந்த வடிவளவுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. எழுத்துரு முகப்பளவு பெரிதாக பெரிதாக அதனை கவர்ச்சி கரமாக்கும் வகையில் அதன் பண்பியல்புகளும் மாறுதல் அடைகின்றன.

font group : எழுத்துருத் தொகுதி.

font metric : எழுத்துரு முகப்பு அளவீடு : ஒர் எழுத்துரு முகப்பின் ஒவ்வொரு பண்பியல்புக்கு உரிய அச்சுக்கலைத் தரவுகள் (அகலம், உயரம், உருவாக்க மையம்).

font number : எழுத்துரு எண் : ஒரு பயன்பாட்டுத் தொகுப்பு அல்லது இயக்க முறைமை, ஒர் எழுத்துருவை அடையாளம் கண்டுகொள்ள உதவும் எண். ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியில் எழுத்துருக்கள் அவற்றின் பெயர்களைக்கொண்டும் மற்றும் அவற்றின் எண்களைக் கொண்டும் அடை யாளம் காணப்படுகின்றன. ஒர் எழுத்துரு கணினியில் நிறுவப் படும்போது அதே எண்ணில் ஏற்கெனவே ஒர் எழுத்துரு நிறுவப்பட்டிருக்கிறது எனில், புதிய எழுத்துருவின் எண்ணை மாற்றிக் கொள்ள முடியும்.

font page : எழுத்துருப் பக்கம் : ஐபிஎம்-பல்வண்ண வரைகலைக் கோவை ஒளிக்காட்சி (Graphics Array Video) அமைப்புகளில் கணினித் திரையில் எழுத்துகளைக் காண்பிக்க, அடிப்படையாக இருக்கும் ஒளிக்காட்சி நினைவகத்தின் (Video Memory) ஒரு பகுதி. நிரலர் தன் விருப்பப்படி வடிவமைத்த எழுத்துருவின் வரையறுப்பு அட்டவணையை (எழுத்து வடிவங்களின் தொகுப்பு), இந்த நினைவகப் பகுதியில்தான் இருத்தி வைக்கவேண்டும்.

font scaler : எழுத்துரு முகப்பு மறு உருவாக்கம் : எழுத்துரு முகப்பு வரைவினை புள்ளிக் குறிகளாக மாற்றுகிற மென்பொருள். எழுத்துரு முகப்பு உருவாக்கி என்பதும் இதுவும் ஒன்றே. ஆயினும் இது, பெரும்பாலும் எழுத்துரு முகப்புகளை மறு உருவாக்கம் செய்வதைக் குறிக்கிறது.

font size : எழுத்துரு அளவு : ஒர் எழுத்துருவின் உருவளவு. பெரும் பாலும் புள்ளிக் (point) கணக்கில் குறிக்கப்படுகிறது. ஒர் அங்குலம் 72 புள்ளிகளாகும்.

font size property : எழுந்துரு அளவுப் பண்பு.

font style : எழுத்துரு முகப்புப் பணி : இது எழுத்துரு முகப்பினையே (Type face) குறிக்கிறது. பெரும்பாலும் செங்குத் தான அல்லது சாய்வான வாசகங்களைக் குறிக்கிறது.

font style property : எழுத்துரு பாணிப் பண்பு.

font suitcase : எழுத்துருக் கைப்பெட்டி : மெக்கின்டோஷ் கணினிகளில் சில எழுத்துருக்களையும் திரைப்பயன் நிரல்களையும் கொண்ட ஒரு கோப்பு. இந்த இயக்க முறைமையின் முந்தைய பதிப்புகளில் இத்தகைய கோப்புகள் ஒரு கைப்பெட்டிச் சின்னத்தில் ஆங்கில ஏ என்ற எழுத்துடன் காட்சி யளிக்கும். பதிப்பு 7. 0 விலிருந்து இந்தச் சின்னம் தனிப்பட்ட ஒர் எழுத் துருவைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

font type : எழுத்துரு வகை.

font utility : எழுத்துரு முகப்பு பயனீடு : எழுத்துரு முகப்புகளைப் பளு இறக்கம் செய்தல், நிறுவுதல், வடிவமைத்தல், மாற்றமைவு செய்தல் உட்பட எழுத்துரு முகப்புகளை மேலாண்மை செய்வதற்கான செயற்பணிகளை அளிக்கும் மென்பொருள்.

fontware : எழுத்துரு முகப்புப் பொறி : சொந்தக் கணினிகளுக்காக'பிட்ஸ் டிரீம்'என்ற அமைவனம் தயாரித்துள்ள எழுத்துரு முகப்பு உருவாக்கப் பொறியமைவு. இது, எழுத்துரு முகப்பு வரைவு நூலகம் ஒன்றையும், ஒரு எழுத்துரு முகப்பு உருவாக்கியையும் கொண்டிருக்கிறது. எழுத்துரு முகப்புத் தொகுதிகளில், இயல்பு, சாய்வு, பருமன் , பருமச் சாய்வு எடைகள் அடங்கியுள்ளன.

font weight : எழுத்துரு முகப்பு எடை : எழுத்துகளின் எடையளவு (நொய்மை, நடுத்தரம் அல்லது பருமன்).

foo : ஃபூ : நிரல்கள் ஒரு குறிப்பிட்ட தகவலை உணர்த்த எடுத்துக் காட்டாகக் குறிப்பிடும் சரம். ஒரு கட்டளை வாக்கியத்தை விளக்கு வதற்காகப் பயன்படும் மாறிலிகள், செயல் கூறுகள் மற்றும் தற்காலிக கோப்புகளின் பெயர்கள் ஆகியவற்றைக் குறிக்க, நிரலர்கள் பொதுவாக 'ஃபூ'என்ற சொல்லையே பயன்படுத்துவர்.

footer : அடிப்பகுதி;அடிக்குறிப்பு : பக்க எண்கள் போன்று ஒரு பக்கத்தின் அடிப்பகுதியில் அச்சிடப்படும் தரவு, பெரும்பாலான சொல் பகுப்பிகளில் ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் அடிப்பகுதி தானாகவே அச்சிடப்படும்.

foot note : அடிக் குறிப்பு : ஒரு பக்கத்தின் அடியில் விளக்கமாக அமைந்துள்ள வாசகம். இது பெரும்பாலும் தரவுக்கான ஆதாரத்தைக் குறிக்கும். இவற்றை ஒன்று சேர்த்து ஒர் ஆவணத்தின் இறுதியில் அச்சிட்டால், இவை 'இறுதிக் குறிப்புகள்' (End notes) எனப்படும்.

foot print : கால் தடம்;அடிச் சுவடு : ஒரு கருவிக்குத் தேவையான தரைப் பகுதியின் வடிவமும், பரப்பும்.

for : சார்பு : ஒரு நிரலாக்கத் தொடரில் கட்டுப்பாட்டுக் கட்டமைவில், குறிப்பிட்ட கட்டளைகளின் தொகுதி எந்த அளவுக்குத் திரும்ப நிறை வேற்றப்படும் என்பதைக் குறித்துரைக்கிற முதல் அறிக்கை.

force : 1. கட்டாயப்படுத்து : ஒரு நிரலாக்கத் தொடரின் நடுவில் மனிதர் தலையிட்டு தாண்டு நிரலைச் செயல்படுத்துவது.

force : 2. விசைவலியச் செய்;வல்லந்தமாக : சோஃப்கோ என்ற அமைவனம் தயாரித்துள்ள தரவுதளத் தொகுப்பி. இதில்"C"மற்றும் dBase கட்டமைவுகள் இணைந்துள்ளன. இது மிகச்சிறிய, நிறை வேற்றத்தக்க செயல்முறைகளை உருவாக்குவதற்குப் புகழ் பெற்றது.

forced page break : வலிந்தபக்கப் பிளவு : பயனாளர் வலிந்து புகுத்திய ஒரு பக்கப் பிளவு.

forecast : வருவதுரை;முன் கணிப்பு : கடந்த காலத்தை ஒட்டி வருங்காலத்தினைக் கணித்துக் கூறல், அனுமானமாகச் சொல்லாமல் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு புதியதாக்க சக்திகளையும், மாற்றங்களையும் உள்ளடக்கியவாறு எதிர்காலத்தை மதிப்பிட்டு தெளிவாகக் கணித்தல்.

fore casting : முன் கணித்தல்.

foreground/background : முன்புறம்/பின்புறம்;முன்புலம்/பின்புலம்; முன்னணி/பின்னணி : ஒரு பன்முகப் பணிச் சூழலில் செயல்முறைகளை இயக்கு வதற்குக் குறித்தளிக்கப் பட்டுள்ள முந்துரிமை. முன்புறச் செயல்முறைகள், மிக உயர்ந்த முந்துரிமையைக் கொண்டவை. பின்புறச் செயல் முறைகள், மிகக்குறைந்த முந்துரிமை கொண்டவை. ஒரு சொந்தக் கணினியில் முன்புறச் செயல்முறை என்பது, பயனாளர் தற்போது கையாளும் செயல்முறை;பின்புறச் செயல் முறை என்பது, ஒர் அச்சு உருளை அல்லது செய்தித் தொடர்பு செயல்முறை. foreground colour : முன்புற வண்ணம்; முன்புல வண்ணம்; முன்னணி வண்ணம் : திரையில் எழுத்துகள் அல்லது வரை கலைகள் எழுதப்பட்டுள்ள வண்ணங்கள்.

foreground job : முன்புல வேலை;' முன்னணி வேலை.

foreground processing : முன் புறச் செய்முறைப்படுத்துதல்; முன்னணிச் செயலாக்கம்; முற் பகுதிச் செயலாக்கம் : கணிப்பு வசதிகளைப் பயன்படுத்தி முற்படு விளைகோள் பெறுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள கணினி செயல்முறை களைத் தானாகவே நிறைவேற்றுதல். இது பின்புறச் செய் முறைப்படுத்தலுக்கு மாறு பட்டது. திரையில் உள்ள அச்சடிக்கப்பட்டுள்ள எழுத்து கள் அல்லது வரையப்பட்டுள்ள புள்ளிகள்.

foreground programme : முற்பகுதி நிரலாக்கத்தொடர்; முன்னணி நிரலாக்கத் தொடர் : அதிக முன்னுரிமை உள்ள நிரலாக்கத் தொடர். பல நிரலாக்கத் தொடர் தொழில்நுட்பத்தினைப் பயன் படுத்தும் கணினி அமைப்பில் ஒரே நேரத்தில் இயக்கப்படும் நிரலாக்கத் தொடர்களில் முன்னதாக செயல்படுத்தப்பட வேண்டியது.

foregrounds : முன்புறங்கள்; முன்புலங்கள்; முன்னணிகள் : ஒரு பன்முகப் பணிப் பொறியமைவில், மிக உயர்ந்த முந்துரிமைச் செயல்முறைகள். பார்க்க : பின்புறப்பணி (Background task).

foreground task : முன்புலப் பணி.

forest : வனம்; காடு : மரங் களின் தொகுதி. தரவு கட்டமைப்பில் (Data Structure) தொகுப்புப் பட்டியல்கள் (Linked liss) மூலம் உருவாக்கப்படும் ஒருவகைக் கட்டமைப் புக்கு tree என்று பெயர். வேர் எனப்படும் தலைமை உறுப்புடன் பட்டியலின் ஏனைய உறுப்புகள் கிளைகளாக தொகுக்கப் பட்டிருக்கும். ஒன்றுக்கு மேற் பட்ட tree அமைப்புகள் இருப் பின் Forest என்கிறோம்.

forest & trees : காடு - மரங்கள் : "சேனல் கணிப்பு என்ற அமைவனம் தயாரித்துள்ள தரவு பகுப் பாய்வுச் செயல்முறை. இதில், பல்வேறு பயன்பாடு களிலிருந்து தரவுகள் ஒருங் கிணைக்கப்பட்டுள்ளது.

fork : கிளை : மேக்ஓஎஸ் இயக்க முறைமையில் ஒரு கோப்பினை அடையாளம் காணப் பயன்படும் இரு பகுதி களில் ஒன்று. ஒரு மெக்கின்டோஷ் கோப்பு, தரவு கிளை (data fork), வளக் கிளை (resource fork) இரண்டையும் கொண்டிருக்கும். பயனாளர் உருவாக்கும் பெரும்பாலான அல்லது அனைத்துக் கோப்புகளும் தரவு கிளையில் இருக்கும். வளக்கிளை பெரும்பாலும் பயன்பாட்டு நோக் கிலான தரவுகளை அதாவது எழுத்துருக்கள், உரையாடல் பெட்டிகள் மற்றும் பட்டி களைக் கொண்டிருக்கும்.

fork : கிளை பல்பணி இயக்க முறைமையில் ஒரு தாய் செயலாக்கம் தொடங்கிய பிறகு ஒரு சேய் செயலாக்கத்தைத் தொடங்கி வைக்கும் கட்டளை.

FOR loop ஃபார் மடக்கி : ஒரு கணினி நிரலில் ஒரு குறிப்பிட்ட கட்டளைப் பகுதியை குறிப்பிட்ட தடவைகள் திரும்பத் திரும்பச் செய்ய வைக்கும் கட்டுப்பாட்டுக் கட்டளை. இக்கட்டளையின் தொடர் அமைப்பு மொழிக்கு மொழி வேறுபடுகிறது. பெரும் பாலான மொழிகளில் ஒரு சுட்டுமாறிலியின் மதிப்பு குறிப் பிட்ட எல்லைக்குள் தொடர் மதிப்பாக மாறிக் கொண்டே இருக்கும். (எ-டு) பேசிக் மொழி :

FΟR Ι = 1 ΤΟ 10

PRINT |

NEXT |

பாஸ்கல் மொழி :

FOR | : = 1 TO 10 DO

         WRITELN (|) ;

சி-மொழி :

for (i=0;i<10;i++)

    printf ("%d", i) ;

சி. மொழியில் ஃபார் மடக் கியை இந்த வரையறைக்கு அப்பாலும் பல்வேறுபட்ட வடிவங்களில் பயன்படுத்த முடியும்.

form ; படிவம் : 1. ஏற்கனவே அச்சிடப்பட்ட ஆவணம் கூடுதல் தரவுவைச் சேர்த்து பொருள் உள்ளதாக ஆக்கப் படுகிறது. 2. நிரலாக்கத்தொடர் வெளியீட்டுப் படிவம்.

formal language : முறையான மொழி : முறைசார் மொழி : புரியாத கணிதப் பொருள்கள். கோபால் அல்லது பேசிக் போன்ற நிரலாக்கத்தொடர் மொழிகள். ஆங்கிலம் அல்லது ஃபிரெஞ்சு போன்ற இயற்கை மொழிகளின் இலக்கணத்தைப் பின்பற்றிப் பயன்படுத்தப்படும்.

formal logic : முறையான தருக்க அளவை : ஒரு வாக்குவாதத்தின் போது பயன்படுத்தப்படும் சொற்களின் பொருளைவிட செல்லத்தக்க வாக்குவாதத்தின் அமைப்பு மற்றும் வடிவம் என்ன என்பதை ஆராய்தல். format : வடிவமைத்தல்;உருவமைவு, வடிவம் : 1. தரவுகளைக் குறிப்பிட்ட முறையில் அமைத்தல். 2. வெளியீட்டுக்கு ஏற்ற வகையில் செய்திகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான நிரலாக்கத்தொடர்.

format, address : முகவரி வடிவ அமைப்பு.

format, addressless instruction : முகவரியிலா ஆணை வடிவம்.

format bar : வடிவமைப்புப் பட்டை : ஒர் ஆவணத்திலுள்ள எழுத்துருவை, அதன் உருவளவை, பாணியை, நிறத்தை மாற்றுவது போன்ற, பணிகளுக்கென ஒரு பயன்பாட்டுத் தொகுப்பில் இருக்கும் ஒரு கருவிப் பட்டை.

format card : அட்டை வடிவம்.

format effector : உருவமைவுத் தூண்டுச் சாதனம் : பதிவு செய்யப்பட்ட அல்லது பொதுவாக ஒரு குறியீடு மூலம் காட்சியாகக் காட்டப்படுகிற, தரவு அச்சடிப்பு உருவமை வினைச் சீரமைவு செய்வதற்குப் பயன் படுத்தப் படுகிறது. ஒரு கட்டுப் பாட்டு எழுத்து.

format operation : உருவமைவுச் செயற்பாடு.

format painter : வடிவம் தீட்டி.

format, print : அச்சுவடிவமைப்பு.

format programme : உருவமைவுச் செயல்முறை : ஒரு வட்டு வைத்துக் கொள்ளக் கூடிய சேமிப்புக்கூறு ஒவ்வொன்றின் மீதுள்ள கூறு அடையாளத்தைப் பதிவு செய்வதன் மூலம் ஒரு காலி வட்டினைத் தொடங்கி வைக்கிற மென்பொருள்.

format, record : ஏட்டு வடிவமைப்பு.

format specification : உருவமைவுத் தனி வரையறை;உருவமைவு வரையறை : செயல் முறை உட்பாட்டுக்கும் வெளிப் பாட்டுக்கும் இடையிலான தொடர்பினைக் குறித்துரைக்கும் முறைசார்ந்த தருக்க முறைமை யினைப் பயன்படுத்துகிற தானியக்கச் செயல்முறைப் படுத்தும் உத்தி.

formatted display : வடிவமைக்கப்பட்ட காட்சி;வடிவுறு காட்சி : ஒன்று அல்லது மேற்பட்ட காட்சிப்புலங்களின் உள்ளடக்கம் அல்லது தன்மைகளை, பயனாளர் வரையறுக்கும் திரைக்காட்சி.

formatting : வடிவமைத்தல்.

formatting characters : வடிவமைப்பு எழுத்துகள். formatting bar:வடிவமைப்புப் பட்டை.

formatting tool bar:வடிவமைப்புக் கருவிப் பட்டை

formatter:வடிவமைப்பு; வடிவூட்டி:செய்திகளை வடிவமைக்கும் சொல் பகுப்பி நிரலாக்கத்தொடரின் பகுதி.

form background:படிவப் பின்னணி;படிவப் பின்புலம்

form design படிவ வடி வமைப்பு:தரவு உள்ளீட்டுப் படிவங்களையும், மூல ஆவணங் களையும் உருவாக்குதல்.

form factor:வடிவக் காரணி:ஒரு சாதனத்தின் இயற்பியல் வடிவளவு.

form feed(FF):பக்கம் நகர்த்தி;படிவ அளிப்பு:அடுத்த பக்கத்தின் உச்சிப் பகுதிக்குக் காகிதத்தை முன்னே நகர்த்துகிற ஒரு கட்டுப்பாட்டுக் குறியீடு மற்றும் பொத்தான்.

form feed character:பக்கம் நகர்த்தி எழுத்து:அடுத்த பக்கத்தின் அல்லது உருப்படிவத்தின் முதல் வரிக்கு நகர்த்துவதற்கு ஒர் அச்சடிப்பியைப் பயன்படுத்துகிற ஒர் உருவமைவுத் துண்டுச் சாதனம்.

form file:படிவக் கோப்பு.

form filling:படிவம் நிறைவு செய்தல்;படிவ நிறைவாக்கம்.

form letter:படிவக் கடிதம்:ஒரு கடிதத்தைப் பலருக்கும் அனுப்பி வைக்கத் தயாரிக்கும் முறை,அஞ்சல்-இணைப்பு (mail-merge) என்றழைக்கப்படுகிறது. அனைத்துச் சொல் செயலி(word processor) தொகுப்புகளிலும் இத்தகைய வசதி உண்டு. பலரின் முகவரிகள் ஒரு தரவுத் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அனைவருக்கும் அனுப்ப ஒரேயொரு கடித ஆவணம் தயாரிக்கப் பட்டிருக்கும். அஞ்சல் இணைப்பு நிரலை இயக்கியதும்,தனித் தனி முகவரிகளுடன் கடிதம் தயாராகி விடும். கடிதத்தில் முகவரி நாம் குறிப்பிடும் இடத்தில் செருகப்பட்டிருக்கும். தனித்தனிக் கடிதங்களை அச்சிட்டு அனைவருக்கும் அனுப்பி விட முடியும். அஞ்சல்-இணைப்பு மூலம் உருவாக்கப் படும் கடிதம் படிவக் கடிதம் என்றழைக்கப்படுகிறது.

form letter programme:படிவ எழுத்து நிரலாக்கத்தொடர்;படிவ மடல் நிரலாக்கத் தொடர்:படிவ எழுத்துகளை உருவாக்கும் நிரலாக்கத்தொடர். சங்கம அச்சு நிரலாக்கத் தொடர் என்றும் அழைக்கப்படுகிறது.

forms : படிவங்கள். forms capolite browser : படிவம் காண்தகு உலாவி.

forms control : படிவக் கட்டுப்பாடு : தரவு அளிக்க, சேகரிக்கப் பயன் படுத்தப்படும் ஆவணங்களைப் பயன்படுத்துவதில் வழிகாட்டுவதற்காக ஒரு நிறுவனம் ஏற்படுத்தும் நடப்புச் செயல்முறை.

forms design : படிவ வடிவமைப்பு.

formula : வாய்பாடு : ஒரு சமன்பாடாகக் கூறப்படும் விதி. சான்றாக ஒரு வட்டத்தின் வெளிச்சுற்றைக் கண்டுபிடிக்க C= 2πr என்ற வாய்பாடு கூறப் படுகிறது. சில அளவுகளின் சம உறவைக் காட்டும் வழி. மற்ற அளவு களைக் கொடுத்து ஒரு அளவைக் கணக்கிடுவதற்குப் பயன்படுவது.

formula bar : வாய்பாட்டுப் பட்டை.

formulas : வாய்பாட்டுகள்.

formula translator : வாய்பாட்டு மொழி பெயர்ப்பி.

form view : உருப்படிவக் காட்சி : முன் அச்சிட்ட உருப்படிவம் போன்று வரிசைப்படுத்தப்பட்ட ஒர் இனத்தை அல்லது பதிவேட்டினைக் காட்டுகிற திரைக்காட்சி. இது, 'அட்டவணைக் காட்சி' (Table view) என்பதிலிருந்து வேறுபட்டது.

form wizard : படிவ வழிகாட்டி.

Forrester, Jay : ஃபாரஸ்டர், ஜே : அமைப்பு மாற்றத்துறையில் தலை வராகக் கருதப்படுபவர். 1951 முதல் 1965-க்குள் உருவான பெரும்பாலான கணினிகளில் உள் நினைவகமாகப் பயன்பட்டு வந்த காந்த மையத்தை உருவாக்கியவர். எம். ஐ. டி-யில் ஒரு அணிக்குத் தலைமை வகித்தவர். இன்றைய வணிக எந்திரங்களின் வரிசையில் ஆரம்பக் கணினியால் செல் வாக்குப் பெற்ற விர்ல்வின்ட் கணினியை உருவாக்கியவர். காந்த மைய நினைவகமும் இணைவான ஒரே நேரமுறையும் கணினியின் உள்ளே தரவுவைக் கையாள்வதற்கு ஏற்றதென்று விர்ல்வின்ட் வடிவமைப்பாளர்கள் தாம் முதன்முதலில் மெய்ப்பித்துக் காட்டினர்.

for statement : தீர்மானித்து திரும்பச் செய் கட்டளை : ஒர் நிரலாக்கத் தொடரில் சில குறிப்பிட்ட கட்டளைகளை, குறிப்பிட்ட தடவைகள் திரும்பத் திரும்ப நிறைவேற்றுகிற கட்டளை வாக்கியச் சொல். இது தனது சொந்தக் கட்டுப்பாட்டுத் தரவுகளை உள்ளடக்கியிருக்கிற ஒரு வளையத்தை உண்டாக்குகிறது.

FORTH : ஃபோர்த் (கணிப்பொறி மொழிகளில் ஒன்று) : செயல் முறை நிரலாக்கத் தொடர் அமைப்பதில் பயன்படுத்தப் படும் நிரலாக்கத் தொடர் மொழி. உற்பத்தித்திறன், நம்பகத்தன்மை மற்றும் செயல் திறன் களில் பயன்படுத்த குறிப்பாக ஏற்றது. வடிவமைப்பு நிரலாக்கத் தொடர மைத்தல், மேலிருந்து கீழ் வளர்ச்சி, மாய நினைவகம் ஆகியவற்றில் பயன் படுத்த ஏற்றது. மாய அடுக்கு நினைவகத்திற்கு ஏற்றதொரு பெருமொழியாக கூறப்படுவது.

FORTRAN : ஃபோர்ட்ரான் (நிரலாக்கத் தொடர் மொழி) : Formula Translator என்பதன் குரும்பெயர். பரவலாகப் பயன்படுத் தப்படும் உயர்நிலை நிர லாக்கத் தொடர் மொழி. கணித, அறிவியல் மற்றும் பொறியியல் கணிப்புகளுக்குப் பயன் படுத்தப்படுவது. அமெரிக்கத் தரநிர்ணய நிரலாக்கத் தொடர் மொழியாக இரண்டு பதிப்புகளில் ஃபோர்ட்ரான், பேசிக் ஃபோர்ட்ரான் ஏற்கப்பட்டது.

FORTRAN 77 : ஃபோர்ட்ரான் 77 : ஃபோர்ட்ரானின் ஒரு வடிவம். அன்சி 3. 9. 1978 தர நிர்ணயத் திற்கு ஏற்றது. நுண்கணினி சூழ்நிலைகளில் பயன் படுத்தும் கூடுதல் வசதி பெற்றது.

FORTRAN translation process : ஃபோர்ட்ரான் மொழிபெயர்ப்பு செயல் முறை : ஃபோர்ட்ரான் மொழியில் எழுதப்பட்ட நிரலாக்கத் தொடரில் கணிப்பு முடிவுகளை உருவாக்கப் பயன்படும் செயல்முறை. கணினிகள் நிரலாக்கத் தொடர்களைத் தொகுக்கவும் செயல்படுத்தவும் உதவுவது.

forum : மன்றம் : ஒரு குறிப்பிட்ட தலைப்பில் பயனாளர்கள் தத்தம் கருத்துகளை எழுத்து வடிவில் தெரிவித்துக் கலந்துரையாட ஒர் ஊடகத்தைப் பல்வேறு நிகழ்நிலை (online) சேவைகள் வழங்கி வருகின்றன. இணையத்தில் பெருமளவு காணப்படும் மன்றங்கள் யூஸ்நெட்டில் செயல்படும் செய்திக் குழுக்களாகும்.

fortune cookie : செல்வவளக் குக்கி;அதிர்ஷ்டக் குக்கி : பொன்மொழிகள், வருவது உரைத்தல், நகைச்சுவை-இவற்றின் தொகுப்பிலிருந்து ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கணினித் திரையில் காண்பிக்கும் ஒருநிரல். யூனிக்ஸ் இயக்க முறைமையில் பல நேரங்களில், உள்துழையும் போதும் வெளியேறும்போதும் இது போன்ற குக்கிகள் செயல்படும்.

forward : முன்னோக்கு.

forward chaining : முன் நோக்குப் பிணைப்பு : முன் நோக்கு சங்கிலித் தொடர் : மேதமைக் கணினி முறைமைகளில் (Expert Systems) சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு வழி முறை. இம்முறையில் வரை யறுக்கப்பட்ட விதிமுறைகள் ஒரு புறம். மெய்ம்மையான விவரங்கள் அடங்கிய தரவுத்தளம் இன்னொரு புறம். இரண்டிலும் தொடங்கி, இறுதியில் தரவுத்தள விவரங்களின் அடிப்படையில், விதிமுறைகளில் கூறப்பட்ட அனைத்து மெய்க்கூறுகளையும் நிறைவு செய்யும் வகையில் இறுதி முடிவு எட்டப்படும்.

forward compatible : முன்னோக்கு ஒத்திசைவு : 'மேல்நோக்கு ஒத்திசைவு' (Upward Compatible) என்பதும் இதுவும் ஒன்றே.

forward error correction : முன்னோக்குப் பிழைதிருத்தம் : ஏற்பு முனையில் தவறான தரவுகளைத் திருத்தக்கூடிய செய்தித் தொடர்பு உத்தி. அனுப்பீட்டுக்கு முன்பு, பிழைதிருத்தத்திற்காக கூடுதல் துண்மிகளைச் சேர்க்கிற ஒரு படிநிலை முறை மூலமாகத் தரவுகள் செய்முறைப் படுத்தப்படுகின்றன. அனுப்பப்படும் செய்தி பிழையுடனேயே வருமானால், அதைத் திருத்துவதற்குத் திருத்தத் துண்மிகள் பயன் படுத்தப்படுகின்றன.

forward pointer : முனோக்கிய குறிப்பி;முன்னோக்குச் சுட்டி : தரவு அமைப்பில் அடுத்த பொருளின் இருப்பிடத்தைக் கூறும் குறிப்பி.

FGSDIC : ஃபோஸ்டிக் : Film Optical Sen sing Device for input to Computers என்பதன் குறும் பெயர். நிரப்பப்பட்ட மக்கள் தொகை படிவத் தரவுகளைக் கணினிக்குள் செலுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலு வலகம் பயன்படுத்தும் உள்ளீட்டுச் சாதனம்.

four address instruction : நான்கு முகவரி நிரல்;நான்கு முகவரி கட்டளை : முடிவுகளை வகைப்படுத்துவதற்கான முகவரி மற்றும் அடுத்து செயல் படுத்தவேண்டிய கட்டளைக்கான நிரல் மற்றும் பிற பட்டியல்கள் போன்ற இரண்டு இயக்கிகளின் முகவரிகளை வழக்கமாகக் கொண்டிருக்கும் எந்திர நிரல்.

fourier transform : ஃபூரியர் நிலைமாற்றம் : ஜீன் பாப்டிஸ்ட் ஜோசப் ஃபூரியர் (Jean Baptiste Joseph Fourier) : 1768-1830) என்னும் ஃபிரெஞ்சுக் கணித மேதை உருவாக்கிய ஒரு கணித வழிமுறை. அலைக்கற்றைப் பகுப்பாய்வு (Spectral Analysis), படிமச் செயலாக்கம் (Image Processing) போன்ற சமிக்கை உற்பத்திப் பணிகளிலும் ஏனைய சமிக்கைச் செயலாக்க முறைகளிலும் இக்கோட்பாடு பயன் படுத்தப்படுகிறது. ஃபூரியர் நிலைமாற்றம் ஒரு சமிக்கை உருவாக்க மதிப்பை நேரம் சார்ந்த செயல்கூறாய் (function) மாற்றுகிறது. தலைகீழ் ஃபூரியர் நிலைமாற்றம் அலைவரிசை சார்ந்த செயல்கூறினை நேரம், வெளி அல்லது இரண்டும் சார்ந்த செயல்கூறாய் மாற்றித் தருகிறது.

four out of eight code : எட்டில் நான்கு குறியீடு;எட்டில் நான்கு குறிமுறை : பிழை கண்டுபிடிப்பதற்கான குறியீடு.

fourth generation computers : நான்காம் தலைமுறை கணினிகள் : மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட இப்போது புழக்கத்தில் உள்ள இலக்கமுறை கணினிகள். விஎல்எஸ்ஐ தொழில்நுட்ப கணினிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

fourth generation language : நான்காம் தலைமுறை மொழி : பயனா ளருக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் ஒர் உயர்நிலை மொழி. இதற்கு, மரபு முறையையும் சொற்றொடரியலையும் கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டிய அவசிய மில்லை. பெயர்ச் சுருக்கம் : 4GL வழக்கமான உயர்நிலை மரபு முறையையும் சொற்றொடரியலையும் விட மிக முன்னேறிய கணினி மொழி. எடுத்துக்காட்டாக தரவு தளத்தில், ஆனைப் பட்டியல், ஒரு தரவுக் கோப்பிலுள்ள அனைத்துப் பதிவேடுகளையும் காட்சியாகக் காட்டுகிறது. இரண்டாம், மூன்றாம் தலைமுறை மொழிகளில் ஒவ்வொரு ஏட்டினைப் படிக்கவும் கோப்பு முடிவைச் சோதிக்கவும், திரையில் ஒவ்வொரு தக வலையும் காட்டவும், செய்முறைப்படுத்தும் பதிவேடுகள் காலியாகும் அச்செயற்பாட்டினைத் திரும்பத் திரும்பச் செய்யவும் கட்டளைகள் எழுதப்பட வேண்டும். முதல் தலைமுறை மொழிகள் எந்திர மொழிகள்;இரண்டாம் தலை முறை மொழிகள் எந்திரம் சார்ந்த ஒருங்கிணைப்பு மொழிகள். Fortran, Cobol, Basic, Pascal, C போன்ற மூன்றாம் தலைமுறை மொழிகள் உயர் நிலைச் செயல்முறைப்படுத்தும் மொழிகள். dBASE, FoxBase, FoxPro போன்றவை நான்காம் தலைமுறைகள் என அழைக்கப்பட்டாலும், இவை உண்மையில் மூன்றாம், நான்காம் தலைமுறை மொழிகள் இணைந்தவை. dBASE list நிரல் என்பது நான்காம் தலைமுறை நிரல். ஆனால் இதில் செயல்முறைப் படுத்தப்பட்டுள்ள பயன்பாடுகள் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவை. வினவு மொழியும், அறிக்கை எழுது கருவியுங்கூட நான்காம் தலைமுறையைச் சார்ந்தவை.

fox message : சாம்பல் பூத்த செய்தி : ஒவ்வொரு எழுத்தும் ஒரு முனை யத்தினால் சரியாக அனுப்பப்படுமாறு சரிபார்ப்பதற்கான ஒரு வாக்கிய எழுத்துருக்கள்.

FPLA : எஃப்பீஎல்ஏ : Field Programmable Logic Array என்பதன், குறும்பெயர். இது பயனாளர் நிரலாக்கத் தொடர் அமைக்கக்கூடிய பிஎல்ஏ. சாதாரண பிஎல்ஏ வை அரைக் கடத்தி உற்பத்தித் தொழிற் சாலையில்தான் நிரலாக்கத் தொடர் அமைத்து மாற்ற முடியும்.

fractals : ஃபிராக்டல்ஸ் : அண்மைக் காலத்தில் பெனோயிட் மண்டல் பிராட்டால், குறியீடு அமைக்கப்பட்ட கணிதத் துறையின் ஒரு பிரிவு. கணினி வரைகலையியல் பயன்பாடுகளில், சில தரவு புள்ளிகளில் இருக்கும் சிக்கல்களில் இருந்து ஒற்றுமையைக் கொண்டுவரும் தொழில் நுட்பம் தொடர்பானது.

fractional TI : பின்ன டீ1 : டீ 1 தடத்துக்கான ஒரு பகிர்மான இணைப்பு. 24 T1 குரல் மற்றும் தரவுத் தடங்களின் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.

fragmentation : சிதறிக் கிடத்தல்;துண்டாக்கல் : முதன்மை நினைவகத் தின் அனைத்துப் பகுதிகளிலும் பயன்படுத்தப்படாத இடம் திட்டு, திட்டாக இருத்தல்.

frame : சட்டம்;திரைக்காட்சி : 1. ராஸ்டர் ஸ்கேன் காட்சி அலகில் ஒரு முழு ஸ்கேன் உருவாக்கும் ஒளிக்காட்சி (வீடியோ) தோற்றம். 2. முதல் பரப்பில் பதிவாகும் நிலை. காகிதம் அல்லது காந்த நாடா செங்குத்தாக நகரும்போது ஒரு முறை பதிவாகும் குறுக்குவெட்டு அகலம். ஒரு திரைக் காட்சியில் மாறுபட்ட பதிலிடு நிலைகளின் மூலம் பல துண்மி அல்லது துளையிடும் நிலைகளை உருவாக்க முடியும். frame base CAI : சட்டக ஆதார கணினி உதவிபெறு கட்டளை : செயல் முறைப்படுத்திய கட்டளைகளை அடிப்படையாகக் கொண்ட கணினி உதவி பெறு கட்டளை உத்தி.

frame-based knowledge : சட்டகம் சார்ந்த அறிவு : சட்டகங்களின் ஒரு படிநிலை அல்லது இணைய வடிவில் குறிக்கப்படுகிற தரவு.

frame buffer : திரைத்தோற்றம் தாங்கி;சட்டக வைப்பகம் : கணினி வரைகலையில், ஒரு கணினி, படத்தை சேமிக்க ஏற்றுக் கொள்ளும் நினைவகத்தின் சிறிய பகுதி.

frame grabber : சட்டகப்பறிப்பி : கணினி வரைகலையில், ஒளிப் பேழை உருக்காட்சிகளை கணினி உருவாக்க உருக்காட்சிகளாக மாற்றுகிற ஒரு சாதனம். இந்தச் சட்டகப் பறிப்பி, செந்திறத் தொலைக்காட்சிக் குறியீடு களைப் பெற்று, நடப்பு ஒளிப் பேழைச் சட்டகத்தை ஒரு கணினி வரைகலை உருக்காட்சியாக இலக்க முறைப்படுத்துகிறது.

frame (computer), main : பெருமுகக் கணினி.

frame maker : சட்டக உருவாக்கி : "சட்டகத் தொழில் நுட்பக் கார்ப்ப ரேஷன்" என்ற அமைவனம் தயாரித்த மேசை மோட்டு வெளியீட்டுச் செயல் முறை. இது யூனிக்ஸ், மெக்கின்டோஷ், விண்டோஸ் ஆகியவற்றில் செயல்படுகிறது. கட்டமைவு செய்யப்பட்ட ஆவணங்களுக்குப் பொருத்தமான இது, இதன் முழுமையாக ஒருங்கிணைந்த சொல் செய்முறைப் படுத்து தலுக்கும், வரைகலைத் திறம்பாடுகளுக்கும் புகழ்பெற்றது.

frame rate : சட்ட வீதம் : 1. ஒரு ராஸ்டர் வருடு கணினித்திரையில் காட்டப்படுவதற்கு முழு ஒற்றைத் திரை படிமங்கள் எவ்வளவு வேகத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன என்பதைக் குறிக்கிறது. மின்னணுக்கற்றை வினாடிக்கு எத்தனை முறை திரையை ஆக்கிரமிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. 2. அசைவூட்ட (Animation) செயல்பாடுகளில், ஒரு வினாடிக்கு எத்தனைமுறை ஒரு படிமம் புதுப்பிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. சட்டவீதம் வினாடிக்கு 14 சட்டங்களைவிட அதிகமாயின் அசைவூட்டம் உண்மையான இயக்கம் போலவே தோற்றம் அளிக்கும்.

frame relay : சட்டக அஞ்சல் : x 25-ஐ விட விரைவாக அனுப் பீடு செய்வதற்கு உதவுகிற அதிவேகப் பையடக்க விசை. இது, குரலைவிட தரவுகளுக்கும் உருக்காட்சிகளுக்கும் பொருத்தமானது.

frame relay assemblers/disassembler : சட்டத் தொடர்பி தொகுப்பான்/பிரிப்பான் : தடச்சேவை சாதனம் (Channel Service Unit-CSU), இலக்க முறைச் சேவை சாதனாம் (Digital Service Unit-DSU), பிணையத்தை சட்டத் தொடர்பியுடன் இணைக்கும் திசைவி (router) ஆகிய மூன்றும் இணைந்தது. இச்சாதனம், சட்டத் தொடர்பிப் பிணையங்களில் தகவலைப் பொட்டலங் களாக மாற்றி அனுப்பி வைக்கும். மறுமுனையிலிருந்து இது போல அனுப்பப்படும் பொட்டலங்களைச் சேர்த்து மூலத் தகவலாக மாற்றும். இம்முறையில் தீச்சுவர் (Firewall) போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் கிடையாது. எனவே, தனியாக பிணையப் பாதுகாப்பு செயல் முறை சேர்க்கப்பட வேண்டும்.

frame source : சட்ட மூலம் : ஹச்டிஎம்மில் சட்டச் சூழலில், ஒரு பொருளடக்க ஆவணம் மூல ஆவணத்தைத் தேடி, பயனாளர் கணினி யிலுள்ள உலாவி வரைந்துள்ள ஒரு சட்டத்துக்குள் காண்பிக்கும்.

frame work : வரைச் சட்டம் : பொருள்சார் செயல்வரைவு அடிப்படையில், பயன்பாடுகளை உருவாக்குவதற்கான பொதுவானதொரு துணைப் பொறி யமைவு வடிவமைப்பு. இது அருவ வகைப்பாடுகளையும், உருவ வகைப் பாடுகளையும் கொண்டது. பொருள்சார் செயல்வரைவு முறை மென் பொருள் மறுபயன்பாட்டுக்கு உதவுகிறது. வரைச்சட்டங்கள், வடிவமைப்பு மறுபயன் பாட்டுக்கு உதவுகிறது.

franz lisp : ஃபிரான்ஸ் லிஸ்ப் : பெர்க்கியிலுள்ள கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள LISP-இன் ஒரு பதிப்பு.

fred : ஃபிரெட் : 1. எக்ஸ் 500-க்கான ஒர் இடைமுகப் பயன்நிரல். 2. கட்டளைத் தொடர் எடுத்துக்காட்டுகளில் ஒரு மாறிலியின் பெயருக்காக நிரலர்கள் பலராலும் பயன் படுத்தப்படும் ஒரு சொல். ஒரு நிரலர் ஏற்கெனவே ஃபிரெட் என்னும் சொல்லைப் பயன் படுத்தியிருந்தால் இன்னுமொரு மாறிலியின் பெயர் இடம் பெறுமிடத்தில் பார்னே (Barnay) எனக் குறிப்பிடுவர்.

free BSD : இலவச பிஎஸ்டி : ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளுக்காக இலவசமாக வெளி யிடப்பட்ட பிஎஸ்டி யூனிக்ஸ் பதிப்பு. பெர்க்கிலி சாஃப்ட் வேர் டிஸ்ட்ரி பூஷன் என்பதன் சுருக்கமே பிஎஸ்டி எனப்படுவது. கலிஃபோர்னியாவிலுள்ள பெர்க்கிலி பல்கலைக் கழகத்திலுள்ள பிஎஸ்டி அமைப்பு யூனிக்ஸ் இயக்க முறைமையை வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்கு வகித்தது. இன்றைக்கு யூனிக்ஸின் அங்கமாக இருக்கும் பல்வேறு சிறப்புக் கூறுகளும் பிஎஸ்டி யால் உருவாக்கப்பட்டவை.

Freedom of Information Act : தரவு சுதந்திரச் சட்டம் : (அமெரிக்க) ஐக்கிய அரசின் அமைப்புகள் தொகுக்கும் தரவுகளை சாதாரண மக்கள் பெறுவதற்கு அனுமதிக்கும் ஐக்கியச் சட்டம்.

free form : தாராள வடிவம் : தரவு நுழைவு சமயத்தில் உள்ளீட்டுச் சாதனங்களின் மூலம் நுழைக்கப்படும் குறியீடுகளால் கட்டுப்படுத்தப்படும் ஸ்கேனிங், இயக்கம்.

free-form database : வடிவற்ற தரவுத் தளம் : நீளம் அல்லது ஒழுங்க மைவினைப் பொருட்படுத்தாமல் வாசகத்தைப் பதிவு செய்வதை அனு மதிக்கிற தரவுத்தளப் பொறியமைவு. இது சொல்பகுப்பியை ஏற்றுக்கொண் டாலும், தேடுதல், மீட்பு, தரவு சீரமைப்பு ஆகியவற்றுக்கு சிறந்த முறைகளை அளித்து வேறுபடுகிறது.

free-form language : வடிவற்ற மொழி;சுதந்திர வடிவ மொழி;கட்டறு வடிவ மொழி : கட்டளைத்தொடர் ஒரு வரியில் எந்த இடத்திலும் தொடங்கலாம். கட்டளைச் சொற்கள் ஒரு வரியின் எவ்விடத்திலும் இடம் பெறலாம் என்று அமைந்துள்ள மொழி. சி மற்றும் பாஸ்கல் மொழிகள் இவ்வகையைச் சார்ந்தவை. ஃபோர்ட்ரான், கோபால் மொழிகள் அவ்வாறில்லை. கட்டளைச் சொற்கள் வரியின் குறிப்பிட்ட இடத்தில் தொடங்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் உண்டு.

free-form text chart : தாராள வடிவ உரை நிரல் படம்.

free Hand : தாராளச் செயல் முறை : அல்டஸ் கார்ப்பரேஷன் என்ற அமைவனம் தயாரித்துள்ள முழு அம்சங்களும் கொண்ட வரைபடச் செயல் முறை. இதில் பல்வேறு வரைவுக்கருவிகள் தனி உத்திகளுடன் இணைக்கப் பட்டுள்ளன.

free net : இலவச வலையம்.

free of cost : செலவில்லாமல். free phone service : இலவச தொலைபேசி இணைப்புச் சேவை;இலவச இணைப்புச்சேவை.

free software : கட்டறு மென்பொருள் : இலவசமான மென்பொருள் மட்டுமன்று. கட்டுப்பாடற்ற சுதந்திர மென்பொருளுமாகும். மூலவரைவு உட்பட முழுமையாக இலவசமாக வெளியிடப்படும் மென்பொருள். பயனாளர்கள் அதனை இலவசமாகப் பயன்படுத்துவதுடன், விருப்பப்படி மாற்றியமைக்கலாம். மாற்றியமைத்தபின் மீண்டும் அதனை இலவசமாகவே பிறருக்கு வழங்க வேண்டும். செய்யப்பட்ட மாற்றங்கள் தெளிவாகக் குறிப் பிட்டுக் காட்டப்பட்டிருக்க வேண்டும். மூல ஆசிரியரின் பெயர் அவருடைய பதிப்புரிமைச் செய்தி ஆகியவற்றை மாற்றவோ, நீக்கவோ கூடாது. இலவச மென்பொருளுக்கும் கட்டறு மென்பொருளுக்கும் வேறுபாடு உண்டு. இலவச மென்பொருளை இலவசமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அதன் மூலவரைவு கிடைக்காது. கிடைத்தாலும் மாற்றியமைக்க முடியாது. ஆனால் கட்டறு மென்பொருள் பொது உரிம ஒப்பந்த முறைப்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. கட்டறு மென்பொருள் என்னும் கருத்துரு, மாசாசூசட்ஸிலுள்ள கேம்பிரிட் ஜின் கட்டறு மென்பொருள் அமைப்பு (Free Software Foundation) உருவாக்கிய ஒன்றாகும்.

Free Software Foundation : கட்டறு மென்பொருள் அமைப்பு (கழகம்) : ஒரு மென்பொருளைப் பயன்படுத்த, நகலெடுக்க, திருத்த, வியாபார நோக்கின்றி மறுவினியோகம் செய்ய பொதுமக்களுக்கு கட்டற்ற உரிமை இருக்க வேண் டும் என்ற நோக்கத்தை முன்னிறுத்தி திரு. ரிச்சர்டு ஸ்டால் மேன் என்பவர் உருவாக்கிய அமைப்பு. யூனிக்ஸை ஒத்த ஜிஎன்யூ மென்பொருளின் பரா மரிப்பை இந்த அமைப்பே கவனித்துக் கொள்கிறது. ஜிஎன்யூ மென்பொருளை இலவசமாக வழங்கலாம். மாற்றி அமைக்கலாம். விலைக்கு விற்பது கூடாது.

free space : வெற்று இடம்;காலி இடம் : ஒரு நெகிழ்வட்டு அல்லது ஒரு நிலைவட்டில் தரவு எழுதப்படாத வெற்று (காலி) இடத்தைக் குறிக்கும்.

freeware : இலவசப் பொருள் : கட்டணம் இல்லாமல் விற்பனையாளர் கொடுக்கும் மென்பொருள்.

freeze columns : நெடுக்கைகளை நிலைப்படுத்து.

freeze frame video : உறைசட்ட ஒளிக்காட்சி : உருவம் சில வினாடிகளுக்கு ஒரேயொரு முறை மட்டுமே மாறக்கூடிய ஒளிக்காட்சிப் படம்.

freeze panes : பாளங்களை நிலைப்படுத்து.

frequency : அதிர்வலை;அதிர்வெண்;அலை வரிசை : ஒலி அழுத்தம், மின்சக்தி தீவிரம் அல்லது பிற அளவுகளில் ஒரு அலை தனது சமநிலை அளவுகளில் இருந்து மாறி ஒரு சுழற்சி ஏற்படுவதற்கு அலகு நேரத்தில் எத்தனை தடவைகள் முடிகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. மிகவும் பொதுவான அதிர்வெண் அலை ஹெர்ட்ஸ் (Hz), 1 Hz ஹெர்ட்ஸ் என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி.

frequency counter : அதிர்வெண் எண்ணி;அலைவெண் காட்டி : குறிப்பிட்ட நேர இடைவெளியில் ஒரு மின்சமிக்கை எத்தனை சுழற்சி அடைகிறது என்பதை எண்ணும் மின்னணுச் சாதனம்.

frequency division multiplexing : அலைவெண் பிரிவினைப் பன்முகமாக்கம் : அனுப்பீட்டு ஊடகத்தின் கட்டுக்கம்பிகளில் அனுப்பப்படும் மின்காந்த அலைக்கற்றை, தருக்க முறைத் தடங்களாகப் பகுக்கப்பட் டிருக்கும் பன்முக வடிவம். இந்த வழிகளில் பன்முகச் செய்திகளை ஒரே சமயத்தில் அனுப்பலாம்.

frequency hopping : அலைவரிசைத் துள்ளல் : ஒரு முனைக்கும் இன்னொரு முனைக்கும் இடையேயான தரவுப் பரிமாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட அலைக்கற்றைக்குள் வெவ்வேறு அலை வரிசைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்துதல். இம்முறையினால் அத்துமீறிய குறுக்கீடுகளைத் தவிர்க்க முடியும். ஒற்றை அலைவரிசையை செயலற்றதாக்குவது போல் இதனைச் செய்ய முடியாது.

frequency modulation : அலைவெண் மாறுபாடு : ஒரு குறியீட்டின் அலைவெண், ஈரிலக்க'1'-க்கும்'0-க்குமிடையில் பல விதமாக மாற்றப்படுகிற ஏற்ற இறக்க உத்தி. குறைந்த அலை வெண் 0 ஆகும்.

frequency modulation encoding : அலைவரிசைப் பண்பேற்ற குறியீடு : சுருக்கமாக எஃப்எம் குறியீடு என்றழைக்கப்படும். வட்டில் தகவலைப் பதிவதில் பின்பற்றப்படும் ஒரு வழிமுறை. தகவல் மற்றும் கடிகாரத் துடிப்புகள் எனப்படும் ஒத் திசைவுத் தகவலும் (Synchroni. cing information) வட்டின் மேற்பரப்பில் பதியப்படுகிறது. கடிகாரத் துடிப்பு களும் வட்டில் பதியப்படுவதால் அதிகமான வட்டுப்பரப்பு தேவைப்படுகிறது. எனவே எஃப்எம் குறியீட்டு முறை பிறமுறைகளோடு ஒப்பிடுகையில் திறன் குறைந்ததாகக் கருதப்படுகிறது. இப்போது இதைவிடச் சிறந்த முறைகளும் உள்ளன. திருத்தப்பட்ட அலைவரிசைப் பண்பேற்றக் குறியீட்டுமுறை (Modified Frequency Modulation Encoding-MFM) என்பது அவற்றுள் ஒன்று. தொடர் நீள வரம்பு (Run Length Limited- RLL) குறியீட்டு முறை சற்றே சிக்கலானது. ஆனால் எல்லா வற்றையும்விட மிகச்சிறந்த குறியீட்டுமுறை எனக் கருதப்படுகிறது.

frequency response : அலைவரிசைப் பிரதிபலிப்பு : ஒரு கேட்பொலி சாதனம், குறிப்பிட்ட உள்ளிட்டுச் சமிக்கைகளின் அடிப்படையில் உரு வாக்கி, வெளியீடாகத் தரும் அலைவரிசைகளின் வரம்பு.

frequency shift keying (FSK) : அதிர்வெண் மாற்றி விசையிடல் : தரவு அனுப்பு முறை. இதில் அனுப்பப்படும் 'துண்மி'யின் நிலை கேட்கும் ஒலியால் உணர்த்தப்படும்.

frequency spectrum : அலைக்கற்றை : ஊர்தி மற்றும் அதிர் வெண் குறியீட்டு அலைவெண்களின் கூட்டுத்தொகை மேற்பக்க அலைவெண் எனப்படும். ஊர்திக்கும், அதிர்வெண் குறியீட்டு அலைவெண்களுக்கு மிடையிலான வேறுபாடு, கீழ்ப் பக்க அலைவெண் எனப்படும்.

frequency, ultra high : மீவுயர் அதிர்வலை.

friction feed : உராய்வு செலுத்தி;உராய்வு அளிப்பு;உராய்வு வழி ஊட்டல் : அச்சுப் பொறிக்குள் தாளைச் செலுத்தும் ஒரு முறை. பொதுவாக, இரு புறமும் துளையிடப்பட்டதாள் இரு பல்சக்கரங்களின் மேல் இடப்ப்ட்டு, சக்கரங்கள் சுழலும்போது நகர்த்தப்படும். ஆனால் சில அச்சுப்பொறிகளில் தட்டுகளில் தாள்கள் வைக்கப்பட்டு அதன்மீது சுழலும் அழுத்த உருளை (Pressure Roler) மூலமாக நகர்த்தப்படும். இன்னும் சிலவற்றில் சுழலும் இரு உருளைகளுக்கு இடையில் உட் செலுத்தப்படும். துளையில்லாத தாள்களை உட்செலுத்த இது போன்ற உராய்வு செலுத்த முறை பயன்தரும்.

friendliness : தோழமை : ஒரு கணினி அல்லது நிரலாக்கத் தொடருடன் சேர்ந்து இயங்குவது எவ்வளவு எளிமையானது என்பதைக் காட்டுகிறது. பயனாளர்-தோழமை நிரலாக்கத் தொடரைக் கற்றுக்கொள்ள குறைந்த நேரமே போதுமானது;பயன்படுத்த எளிதானது.

friendly : தோழமையான : கணினியை அல்லது கணினி நிரலை எவரும் எளிதாகக் கற்றுக் கொள்ளவும், எளிதாகப் பயன்படுத்தவும் ஒரு வன்பொருள் அல்லது ஒரு மென்பொருளில் உள்ளிணைக்கப்பட்டுள்ள ஒரு வசதி. தோழமை என்பது பெரும்பாலான தயாரிப்பாளர்களால் வலியுறுத்தப் படுகிறது. பெரும்பாலான பயனாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

friendly interface : தோழமை இடைமுகம்;தோழமை பரி மாற்றம் : முகப்புக் கருவி மற்றும் கணினி நிரலாக்கத்தொடர் ஆகிய இரண்டையும் இணைத்து வடிவமைத்து, எப்போதாவது கணினியை இயக்குபவருக்கும் எளிமையாகச் செய்து தருவது.

friendly user : பயனாளர் தோழமை.

fringeware : கொசுறுப்பொருள் : இலவசமாகத் தரப்படும் மென்பொருள். ஆனால் அதன் மதிப்பும் செயல்திறனும் கேள்விக்குரியது.

frob : ஃப்ராப் : ஜாய்ஸ்டிக் அல்லது சுட்டுப்பொறி (மவுஸ்) போன்ற பிடிக்கும் சாதனத்துடன் விளையாடுவது.

from scanner : வருடி மொழியிலிருந்து;வருடியிலிருந்து.

front and end processor : தொடக்க மற்றும் இறுதிச் செயலகம் : புரவலர் கணினியின் தொடக்கம்/இறுதியில் உள்ள தனி தரவுத் தொடர்புக் கணினி. தரவுத் தொடர்புக்கு வரிசை ஒதுக்குதல், தரவு மாற்றல் பிழை ஆய்தல், செய்தி கையாளல் மற்றும் பிற விவர தரவுத் தொடர்பு பணிகளைக் கையாண்டு புரவலர் கணினிக்கு இந்த வேலைகளைக் குறைக்கிறது.

front end : மின்னிலை : பிறிதொரு பயன்பாடு அல்லது மென்பொருள் கருவியுடன் ஒரு இடைமுகத்தை ஏற்படுத்தித் தரும் ஒரு பயன்பாட்டு மென் பொருள் அல்லது அதன் ஒரு கூறு. இத்தகைய முன்னிலைக் கருவியாகச் செயல்படும் பயன்பாட்டுத் தொகுப்புகள் பின்புல மாய்ச் செயல்படும் மென்பொருளைக்காட்டிலும் மிகவும் தோழமையான ஒர் இடை முகத்தை பயனாளருக்கு வழங்கும். வெவ்வேறு தயாரிப்பாளர்களின் மென்பொருள் படைப்புகளுக்கும் ஒரே மாதிரியான இடைமுகத்தை முன் னிலைக் கருவிகள் வழங்குகின்றன. 2. வழங்கன் கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுத் தளம் பின்னிலை (Back End) என்றும், கிளையன் கணினிகளில் செயல்படும் பயன்பாட்டுத் தொகுப்புகளின் முன்னிலைக் (Front End) கருவி என்றும் அழைக்கப்படுகின்றன. (எ-டு) ஆரக்கிள் பின் னிலைத் தரவுத் தளம். விசுவல் பேசிக், டெவலப்பர் 2000 ஆகியவை முன்னிலைக் கருவிகள்.

front end processor : முன்னணிச் செயலகம்.

front end tool : முன்னிலைக் கருவி.

front panel : முகப்புப் பலகம் : கணினிப் பெட்டியில் அதன் இயக்கு விசைகள், விளக்குகள், கட்டுப்பாட்டுக் குமிழ்கள் அடங்கிய முகப்புப் பட்டிகை.

fry : வறு : மிக அதிக வெப்பம் அல்லது மின்சாரம் செலுத்துவதன் மூலம் ஒரு மின் சுற்றினைப் பாழாக்குதல்.

fs : எஃப்எஸ் : femto second பதன் குறும்பெயர்.

FSK : எஃப்எஸ்கே : Frequency Shift Keying என்பதன் குறும் பெயர்.

FTP commands : எஃப்டீபீ கட்டளைகள் : கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் (File Transfer Protocol) கட்டளைத் தொகுப்பு.

FTP server : எஃப்டீபீ சேவையகம்;எஃப்டீபீ வழங்கன்;Host-புரவன் : இணையம் வழியாகவோ அல்லது எந்தவொரு டீசிபி/ஐபி பிணையம் வழி யாகவோ, கோப்புப் பரிமாற்ற நெறிமுறையைப் (FTP) பயன் படுத்தி, பயனா ளர்கள் கோப்புகளை பதிவேற்ற அல்லது பதிவிறக்க அனுமதிக்கும் ஒரு கோப்பு வழங்கன் கணினி.

FTP site : எஃப்டீபீ தளம் : எஃப்டீபீ வழங்கன் கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகள் மற்றும் நிரல்களின் தொகுப்பு.

full adder : முழுக்காட்டி மைக் கூட்டி : மூன்று இருமை துண்மிகளைத் தனித்தனியே உள்ளீடாகப் பெற்று அவற்றைக் கூட்டும் திறனுடைய கணினி மின்சுற்று. அவற்றில் ஒன்று முன்பு கூட்டப்பட்டதில் மீதியைக் கொண்டு செல்லும். fuil duplex : முழு இருதிசை இயங்கி;முழு இருவழிப் போக்கு : ஒரு தரவுத் தொடர்பு இணைப்பில் இரு திசைகளிலும் தரவுகளைத் தனித்தனியாக ஒரே நேரத்தில் அனுப்புவது பற்றியது. half duplex மற்றும் simplex ஆகியவற்றுக்கு எதிர்ச்சொல்.

full featured : முழு வடிவம் : ஒரே வகையைச் சேர்ந்த மிக முன்னேறிய உருமாதிரிகளுடன் அல்லது செயல்முறைகளுடன் ஒப்பிடத் தக்க திறம்பாடுகளையும், செயற்பணிகளையும் கொண்ட வன்பொருள் அல்லது மென்பொருள்கள்.

full frame : முழுத் திரை;முழுமைச் சட்டகம் : ஒரு காட்சித் திரையில் பார்க்கக்கூடிய முழுப் பகுதியையும் பார்க்கும் அளவுக்கு ஒரு படத்தின் அளவை மாற்றும் செயல்முறை.

full justification : முழு சீர்மை;இருபுற ஓரச் சீர்மை : சொல் செய லாக்கம் (word processing) அல்லது கணினிப் பதிப்பகப் பணிகளில், ஒரு பக்கத்தில் அல்லது பத்தியில் தட்டச்சு செய்யப்பட்ட வரிகளை இடம், வலம் இரு ஒரங்களிலும் ஒரே சீராக அமைக்கும் செயல்பாடு.

full motion video : முழுதியங்கு நிகழ்படம்;முழுதியங்கு ஒளிக்காட்சி : ஒரு வினாடிக்கு 30 படச்சட்டங்கள் (30 FPS-Frames per second) வீதம் திரையில் காண்பிக்கப்படும் இலக்க முறை ஒளிக்காட்சி (Digital Video).

full motion video adapter : முழுதியங்கு ஒளிக்காட்சி ஏற்பி;முழுதியங்கு ஒளிக்காட்சித் தகவி : கணினியில் பயன்படுத்தப்படும் ஒரு விரிவாக்க அட்டை. ஒளிக்காட்சி நாடாப் பதிவி (Video Casstte Recorder) போன்ற சாதனங்களிலிருந்து இயங்கு நிகழ்படங்களைக் கணினியில் பயன்படுத்தும் இலக்கமுறை வடிவமாக (AVI, MPEG, MJPEG போன்ற வடிவங்களில்) மாற்றித் தரும் அட்டை இது.

full name : முழுப்பெயர் : ஒரு பயனாளரின் உண்மையான முழுப்பெயர். இது, பெரும்பாலும் முதல் பெயர், இடைப் பெயர் (அல்லது இடையெழுத்து), கடைப்பெயர் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். (எ-டு) டென்னிஸ் எம். ரிட்சி, ஜான் எஃப். கென்னடி ஒரு பயனாளரின் கணக்கு விவரத்தின் ஒரு பகுதியாக அவரைப் பற்றிய சொந்த விவரங்களும் கணினி யில் பதிவு செய்யப்படுவ துண்டு. இயக்க முறைமை ஒரு பயனாளரை அடையாளம் காணப் பயன்படும் விவரங்களுள் அவரின் முழுப்பெயரும் ஒன்று.

full-page display : முழுப்பக்கம் காட்டுதல்;முழுப்பக்கக் காட்சி : திரையில் ஒரு நேரத்தில் 21 x 28 செ. மீ அளவுக்கு செய்தியைக் காட்டும் சொல் பகுப்பி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் முனையம்.

'full path : முழுப் பாதை : இயக்கம், தொடக்கம், விவரக்குறிப் பேடு, துணை விவரக் குறிப்பேடுகள் ஆகியவற்றை உள்ளடக்கி, கோப்பின் அல்லது பொருளின் பெயருடன் முடிவடையும் பாதைப் பெயர்.

ful pathname : முழுப் பாதைப்பெயர் : ஒரு படிநிலைக் கோப்பு முறைமையில் ஒவ்வொரு வட்டகத்திலும் வேர் கோப்பகம் (Root Directory) தொடக்க நிலையாக உள்ளது. அதனுள் ஏனைய கோப்பகம்/கோப்புறை களும் அவற்றில் உள் கோப்பகம்/கோப்புறைகளும் அமைகின்றன. ஒரு கோப்பினை அணுகுவதற்கு அது சேமிக்கப்பட்டுள்ள வட்டகப் பெயர் (Drive Name), வேர் கோப்பகம், கோப்பகம், உள்கோப்பகங்களை வரிசையாகக் குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக, myfile. doc என்னும் கோப்பு C வட்டகத்தில் Book என்னும் கோப்பகத்தில் Chapter 1 என்னும் உள்கோப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளது எனில், டாஸ் இயக்க முறை மையில், C : \ΒΟΟΚ\ CΗΑΡΤΕR1\ΜΥFΙLΕ. DOC என்பது அக்கோப்பின் முழுப் பாதையைக் குறிக்கும் பெயராகும்.

full project life cycle : முழுத்திட்ட ஆயுள் சுழற்சி : தொடக்கம் முதல் முடிவு வரையிலான திட்டம்.

full screen : முழுத் திரை : ஒளிக்காட்சித் (வீடியோ) திரையின் முழு முகமும் காட்சித் திரையாகப் பயன்படும் சூழ்நிலை.

full-screen application : முழுத்திரைப் பயன்பாடு.

full screen editing : முழுத் திரை தொகுப்பு;முழுத் திரைப் பதிப்பு : சொற்களை மாற்றுவதற்காக திரை முழுவதும் சுட்டியை நகர்த்தும் திறன்.

full text searching : முழு சொல் பகுதி தேடுதல்;முழுத் திரைதேடல் : கணினியின் துணை நினைவகத்தில் சேமிக்கப் பட்டுள்ள ஒரு கட்டுரை அல்லது நூலின் முழு சொற் பகுதியையும் தேடி குறிப்பிட்ட தகவலைக் கண்டறிதல்.

full version : முழு பதிப்பு.

fully formed character : முழு வடிவ எழுத்து : அச்சுப்பொறிகளை தொட்டச்சுப்பொறி (Impact Printer), தொடா அச்சுப் பொறி (Non-Impact Printer) எனப் பிரிக்கலாம். புள்ளியணி அச்சுப்பொறிகள் (Dotmatrix Printers), டெய்சி சக்கர அச்சுப்பொறிகள் (Daisy Wheel Printers) ஆகியவற்றைத் தொட்டச்சில் சேர்க்கலாம். மையச்சு (Inkjet), ஒளியச்சு (Laser) பொறிகளை தொடா அச்சில் சேர்க்கலாம். புள்ளியணி அச்சுப்பொறியில், அச்சு முனை மைநாடாவில் மோதி தாளைத் தொட்டு அச்சிடு கின்றது. ஆனாலும் எழுத்துகள் புள்ளி களால் ஆனவை. ஆனால் டெய்சி சக்கர அச்சுப்பொறியில் எழுத்து வடி வங்கள் தட்டச்சுப் பொறியில் உள்ளது போல, அச்சுக்கூடத்தில் பயன் படுத்தும் எழுத்துகளைப்போல அச்சுருவில் வார்த்தெடுக்கப்பட்ட முழு வடிவ எழுத்துகளாக இருக்கும்.

fully populated : முழு இடவசதிப் பலகை : மிக அதிக எண்ணிக்கை யிலான சிப்புகளைச் செருகுவதற்கு இடவசதிகொண்ட ஒர் அச்சிட்ட சுற்று வழிப் பலகை.

fully populated board : முழுதும் நிரம்பிய பலகை : அச்சிட்ட மின்சுற்றுப் பலகை ஒருங்கிணை மின்சுற்றுப் பொருத்து வாய்கள் அனைத்திலும் ஒருங் கிணை மின்சுற்று (IC) -கள் பொருத்தப்பட்டிருக்கும். நினைவக பலகையில் பெரும்பாலும் சில ஐசி பொருத்து வாய்கள் மீதமிருக்கும். அதுபோன்ற பலகைகளை "முழுதும் நிரம்பாப் பலகைகள்" எனலாம்.

function : பணி;செயல்முறை;செயல்கூறு;சார்பு : 1. ஒரு மதிப்பினை உருவாக்கும் செயல் முறை. 2. செயலாக்கப்படும் வழக்கச் செயல். 3. ஒரு பெரிய செயல்திட்டத்துக்கு நிரலாக்கத் தொடர் வரையும்போது, அச்செயல் திட்டத்தை சிறுசிறு பணிக்கூறுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பணிக்கூறுக்கும் தனித்தனியே நிரலாக்கத் தொடர் அமைத்து, பின்பு ஒருங்கிணைத்து இயக் கலாம். ஒரு சிறிய பணிக்கூறு அல்லது செயல்கூறு ஃபங்ஷன் எனப்படு கிறது.

function call : செயற்பணி அழைப்பு : மையச் செயலகத்துக்கு (CPU) ஒரு செயற்பணியை ஏற்றி, நிறைவேற்று மாறு அறிவுறுத்துகிற ஒரு செயல்முறைக் குறியீடு. செயற்பணி அழைப் புடன் சேர்ந்து வாதங்கள் அல்லது நிலை யளவுருக்களும் செல்லும்.

function codes : பணிமுறை குறியீடுகள் : வெளிப்புறச் சாதனங்களில் கட்டுப்பாட்டுப் பணிகளுக்கு உதவும் சிறப்புக் குறியீடுகள். காட்சித்திரையை காலிசெய் என்பது ஒரு பணிக் குறியீடு.

function key : பணி விசை;செயல்முறை விசை;சார்புச் சாவி;செயற்பணி விரற் கட்டடை;இயக்கச் சாவி : சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விசை. இதை அழுத்தும்போது கணினியின் விசைப்பலகை, சொல் பகுப்பி அல்லது வரைகலை முதலியவற்றில் சில பணிகளைத் துவக்குகிறது.

function key, user defined : பயனாளர் வரையறு பணிவிசை.

function library : செயற்பணி நூலகம் : செயல்முறை நிரல்களின் தொகுப்பு.

function overloading : செயல் கூறு பணிமிகுப்பு : ஒரு நிரலில் ஒரே பெயரில் பல்வேறு செயல்கூறுகளை வைத்துக் கொள்ளும் வசதி. அளபுருக் களின் (parameters) எண்ணிக்கை, வகை, வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் செயல் கூறுகளின் வேறுபாடு அறியப்படும். அளபுருக்களின் வகை, வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் மொழிமாற்றி (compiler) சரியான செயல் கூறினை தானாகவே அடையாளம் கண்டுகொள்ளும். (எ-டு) sin (float), sin (int) என்று இரண்டு செயல்கூறுகள் இருக்க முடியும். ஒன்று ஆரக் கோணத்தையும் இன்னொன்று கோணமதிப்பையும் ஏற்கும். sin (3. 142) /2. 0) என்பது sin (π/2) என்பதால் 1. 0 என்ற விடை கிடைக்கும். sin (45) என்பது 0. 5 என்ற விடையைத் தரும். பொருள்நோக்கு நிரலாக்க (Object Oriented Programming) மொழிகளில் செயல்கூறு பணி மிகுப்பு ஒரு முக்கிய கூறாகும். சி#, சி++, ஜாவா மொழிகளில் இது உண்டு.

functional decomposition : செயற்பணிச் சிதைவு : ஒரு செய்முறையை செயற்பாடுகாளாகப் பகுத்தல்.

functional description : பணிமுறை விளக்கம்;செயல் விவரிப்பு : ஒரு கணினி அமைப்பின் தேவைகளை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் சொற்றொடர். functional design : செயல் பாட்டு வடிவமைப்பு : கணினி அமைப்பின் செயல்பாட்டு உறுப்புகளிடையே நிலவும் உறவுமுறை பற்றிய வரை யறுப்புகள். கருத்துரு சாதனங்களின் விவரங்கள் மற்றும் அவை இணைந்து செயல்படும் முறைகளும் இவற்றுள் அடக்கம். செயல்பாட்டு வடிவமைப்பு என்பது வரைகலை வடிவில் ஒரு செயல்பாட்டு வரைபடம் மூலம் விளக்கப் படும். கணினி அமைப்பின் பல்வேறு கூறுகளைக் குறிக்க தனிச்சிறப்பான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

functional programming : செயல்கூறு நிரலாக்கம் : நிரலாக்கத்தில் ஒரு பாணி. நிரலின் அனைத்து செயல்பாடுகளும் தனித்தனி செயல்கூறுகளாக (Functions) அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக, இதனால் பக்கவிளைவு எதுவும் ஏற்படாது. முழுமையான செயல்கூறு நிரலாக்க மொழிகளில் வழக்கமான மதிப்பிருத்து கட்டளை இருப்பதில்லை. நகலெடுத்தல், மாற்றம் செய்தல் ஆகிய செயல்பாடுகளின் மூலமாக மதிப்பிருந்தும் பணி நிறை வேற்றப்படுகிறது. இணை நிலை செயலாக்கக் (Parallel processing) கணின களில் செயல்கூறு நிரலாக்கம் மிகுந்த பலனைத் தரும் என்று கருதப் படுகிறது.

functional redundancy checking : செயல்பாட்டு மிகை சரிபார்ப்பு : ஒரு கணினிச் செயல்பாட்டில் நிகழும் பிழையைத் தவிர்ப்பதற்கான வழிமுறை. இதன்படி, கணினியில் இரண்டு நுண்செயலிகள் இருக்கும். அவையிரண்டும் ஒரே நேரத்தில் ஒரே விவரத்தின்மீது ஒரே கட்டளையைச் செயல்படுத்தும். இரண்டு நுண் செயலிகள் மூலம் கிடைக்கின்ற விடைகள் ஒன்றாக இருக் கின்றனவா என்று சரிபார்க்கப்படும். இல்லை எனில் பிழை ஏற்பட்டுள்ளது என்று பொருள். இன்டெல் நிறுவனத்தின் பென்டியம் மற்றும் அதற்கு மேம்பட்ட நுண்செயலிகளில் செயல்பாட்டு மிகை சரிபார்ப்பு முறை உள்ளி ணைந்த ஒன்றாகும்

functional specification : செயல்பாட்டு வரையறுப்பு : ஒரு தரவு கையாளும் அமைப்பு முறையை உருவாக்கும்போது கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டிய நோக்கங்கள், நடவடிக்கைகளின் வகைகள்-இவற்றைப் பற்றிய ஒரு விளக்கம். functional units : செயல்படு உறுப்புகள்.

functional units of a computer : ஒரு கணினியின் பணிமுறை அலகுகள் : இலக்கமுறை கணினிகளில் கணித தருக்க அலகு, சேமிப்பக அலகு, பாட்டு அலகு, உள்ளீடு மற்றும் வெளியீட்டுச் சாதனங்கள்.

function subprogramme : துணை நிரல் செயல்கூறு;பணி நிரலாக்கத் தொடர் : ஒரு தனி மதிப்பு முடிவினைத் திருப்பி அனுப்பும் துணை நிரலாக்கத் தொடர்.

funware : விளையாட்டுப் பொருள் : நிறுவனப்பொருளில் உள்ள விளையாட்டு நிரலாக்கத் தொடர்.

fuse : உருகி : அளவுக்கு மேலான சுமை ஏற்றப்படும் போது ஒரு மின்சுற்றினைத் துண்டிக்கும் பாதுகாப்பு தற்காப்புச் சாதனம். உருகிக்கு மேலே உள்ள மின்னோட்டம் உருகியின் இணைப்பினை உருகவைத்து மின் சுற்றினைத் துண்டிக்கும். மின்சாரம் அளவுக்கு அதிகமாகப் போவதைத் தடுத்து கருவியைப் பாதுகாக்க பெரும்பாலான கணினிச் சாதனங்களில் இது பயன்படுத்தப்படுகிறது.

fused-on toner : உருக்கு விசை : ஒர் ஊர்தி உருமணி, ஒளிக் கடத்தி அல்லது வன்பொருள் போன்ற செய்முறைப்படுத்தும் பொருளுடன் இணைப்பதற்குத் தேவைப்படும் அளவுக்குச் சூடாக்கப்படும் உருக்கு விசை.

fush : ஃபுஷ் : 1. ஒரு இருப்பகத்தில் இருக்கும் உள்ளடக்கங்களில் ஒரு பகுதியைக் காலி செய்தல். 2. எழுத்துகளை வரி, வரியாக அமைக்கும் போது இடது பக்கமாகவோ அல்லது வலது பக்கமாகவோ அமைத்தல்.

fusible link : சங்கமிக்கும் இணைப்பு : பரவலாகப் பயன் படும் நிரலாக்கத் தொடரமைப்புத் தொழில் நுட்பம். அதிக மின்சக்தியைப் பயன்படுத்தி ஒரு சேமிப்பகச் சாதனத்தில் உலோக இணைப்பைத் துண்டித்து '0'வை உருவாக்குவது. கடத்தும் பொருளை 1 ஆகக் கருதுவது.

fuzzy logic : மங்கல் : கணினி மூலம் ஒரு தரவை 0, 1 களின் தொகுதியாக மாற்றும்போது சில வேளைகளில் தரவுகளின் துல்லியத் தன்மை கெட்டு விடுகிறது. துல்லியம் தேவைப் படுகின்ற தரவுகளை, 0-வுக்கும் 1-க்கும் இடைப்பட்ட நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, கணினி முறைக்கு மாற்றும் தருக்க முறை.

fuzzy search : மங்கல் தேடுதல் : தேவையான தரவுகளுக்கு மிக நெருக்கமான தரவுகளைத் தருகிற வகையில் தரவுககளைத் துல்லியமின்றித் தேடுதல்.

fuzzy set : மங்கல் தொகுதி : ஒரு தொகுதித் தேற்றத்தில் அனைத்துக் கும் அல்லது எதற்கும் பதிலாக பல்வேறு அளவு தொகுதி உறுப்பாண் மைக்கு அனுமதிக்கிற ஒரு பொதுமுறை.

fuzzy theroy : மங்கல் தேற்றம் : கணினியில் செய்முறைப் படுத்து வதற்கு இடமளிக்கும் வகையில் தரவுகளையும், மனிதரின் பகுத்தறிவையும் குறிப்பாக குறிப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள தருக்க முறையின் ஒரு பிரிவு.

. tx : . எஃப்எக்ஸ் : இணையத்தில், ஃபிரான்ஸ் பெருநகரைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

FYI : எஃப்ஒய்ஐ : 1. தங்களின் மேலான கவனத்துக்கு என்று பொருள் படும் For Your Information என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின் அஞ்சலிலும் செய்திக் குழுக்களிலும், படிப்பவர்க்குப் பயன் படக்கூடிய தரவுகளை அறிமுகப்படுத்தப் பயன்படுத்தப்படும் சொல். 2. கருத்துரைக் கான கோரிக்கை (Request For Comments-RFC) போல இன்டர்நிக் (InterNIC) வழியாக வழங்கப்படும் ஒரு மின்னணு ஆவணம். ஆர்எஃப்சி என்பது வன் பொருள்/மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கானது. ஆனால் எஃப். ஒய்ஐ என்பது இணையத் தர வரையறை அல்லது பண்புக் கூறு பற்றிப் பயனாளர் களுக்கு விளக்குவதை நோக்கமாகக் கொண்டது.