உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 1/016-089

விக்கிமூலம் இலிருந்து

13  தமிழர்க்குத் தமிழ் உயிர்!

தமிழ்ப்பற்றை ஊட்டாத தமிழ்க்கல்வி
தமிழர்க்குத் தீங்கு செய்யும் !
தமிழ்ப்பற்றை எழுப்பாத கணக்காயர்
தருந்தமிழால் தமிழர் தாழ்வார் !
தமிழ்ப்பற்றை வளர்க்காத மாணவரால்
தமிழ்நாட்டைக் கேடு சூழும் !
தமிழ்ப்பற்றுக் கொள்ளாத தலைவரெல்லாம்
தமிழ்நாட்டுப் பகைவ ராமே !

-1960

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/016-089&oldid=1514503" இலிருந்து மீள்விக்கப்பட்டது