உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 1/023-089

விக்கிமூலம் இலிருந்து

20  தமிழ் உழவு செய்க !

எழுகதமிழ் மங்கையரே! நல்லிளைஞீர் உங்கள்
இளமைதரும் கனவொருபால் இருக்கட்டும்; முன்னே
தொழுகதமிழ் அன்னையினை; துலங்குகநும் ஆற்றல்!
துணிவுறவே ஊரூராய்த் தெருத் தெருவாய்ச் சென்றே
உழுகநறுஞ் சொல்லாலே! ஊன்றுகசெந் தமிழை;
உணர்வுமழை பொழிவிக்க; எண்ணஎரு ஊழ்க்க!
செழுமையுறுந் தமிழ்க்குலத்தை விளைவிக்க! பின்னர்
செந்தமிழ்த்தாய் அரசிருக்க ஏற்றவழி செய்மே!

-1963

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/023-089&oldid=1514510" இலிருந்து மீள்விக்கப்பட்டது