உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 1/026-089

விக்கிமூலம் இலிருந்து

23  தமிழ்ப் போராட்டம்!

பாவலர், யாத்திடும் பாக்களில்
பைந்தமிழ்த் திறம்பயில்க!
நாவலர் ஆர்த்திடும் பொழிவிலும்
உரையிலும் தமிழ்ஒளிர்க!
காவலர் மறத்தொடும் விழிப்பொடும்
செந்தமிழ்க் காப்பளிக்க!
ஆவலர் தனித்தமிழ் ஆண்மையர்
பெண்டிரோ டார்ப்பரிமே!

-1965

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/026-089&oldid=1514513" இலிருந்து மீள்விக்கப்பட்டது