உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 1/027-089

விக்கிமூலம் இலிருந்து

24  மணிநாள் விரைந்தது... !

கல்லறைப் பிணத்தைத் தோண்டிக்
கவின்பெறப் புகழ்வர்; ஆனால்
சில்லறை மொழிகள் கூறிச்
செந்தமிழ் அழிப்பர்; இன்னார்
சொல்லறை பட்டுந் தேரார்!
செவியறக் கொடிறு வீழ
மல்லறை வாங்கித் தேரும்
மணிநாளும் விரைந்த தன்றே!

-1965

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/027-089&oldid=1514514" இலிருந்து மீள்விக்கப்பட்டது