கனிச்சாறு 1/031-089
Appearance
28 மற்போர் தொடங்குக!
கற்போரே செந்தமிழைக் கலக்குகின்றார்;
காசுபணம் பதவிநலம் தமக்கே மானம்
விற்போராய் வாழுகின்றார்; விளைவெல்லாம்
வீழ்த்துகின்றார்; இனிமேலும் அவர்பால் சென்றே
சொற்போரால் மல்லாடிச் சோர்வுறுதல்
முறையன்று; தமிழ்நினைவு சூம்பும் முன்னே
மற்போரைத் தொடங்கிடுவாய்; எழுதமிழா!
மறுநொடியில் விளைவுபல மலிதல் காண்பாய்!
-1966