உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 1/033-089

விக்கிமூலம் இலிருந்து

30  தமிழ் ஆர்ப்பரிப்பா ? வெட்கம்!


தமிழரசின் அவைத்தலைவர்
செய்தித்தாள் நடத்துகின்றார்;
'தினத்தந்தி' 'ராணி' என்றே!

உமிழ்கின்ற கொச்சை நடை;
உடை களையும் புகைப் படங்கள்;
ஊர்கெடுக்கும் உரைகள்; காட்சி!

தமிழ் நாட்டின் இளைஞர்கை
மிளிர் தலெல்லாம் ‘பேசும் படம்'
'குமுதங்’கள் இழிந்த நூல்கள்!

அமிழ்கின்ற பண்பாட்டில்
தமிழ் என்ற ஆர்ப்பரிப்பா?
போர்ப்பாட்டா? அந்தோ! வெட்கம்!

-1967

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/033-089&oldid=1514520" இலிருந்து மீள்விக்கப்பட்டது