கனிச்சாறு 1/075-089
Appearance
71 நாடற்றுப் போவாய்....!
பீடற்ற இந்திப் பிணிப்பைப் பெயர்த்து, இப்
பெருநிலத்துள்,
ஈடற்ற செந்தமிழ்த் தாயை அரியணை
ஏற்றிலையேல்,
ஏடற்று முன்செய் எழுத்தற் றிருக்க
இடமுமற்று,
நாடற்றுப் போவாய் தமிழா, இனுஞ்சில
நாட்களிலே!
-1963