கனிச்சாறு 1/082-089

விக்கிமூலம் இலிருந்து

78  இந்திவெறி ஆளுநரை அகற்றியது!

வரும்பயனை நினையாமல், வந்தபயன்
கருதாமல், வல்லார் வாய்ச்சொல்
தரும்பொருளை ஓராமல், பிறங்கடையை
உன்னாமல் தகவில் லாமல்,
பெரும்பிழையை எந்தமிழர் செய்திட்டார்;
அரசியலில் பிழைசெய் திட்டார்!
அரும்புதுமை ஒன்றுண்மை! இந்திவெறி
ஆளுநரை அகற்றிற் றிங்கே!

-1971

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/082-089&oldid=1515072" இலிருந்து மீள்விக்கப்பட்டது