கனிச்சாறு 1/083-089

விக்கிமூலம் இலிருந்து

79  இந்தியை மாற்றுக!

சிறையுட் புகுத்தியும், சிற்றுயிர் வௌவியும்
செந்தமிழ்ச்சீர்
மறையப் புகுத்திய இந்தியை மாற்றுக!
மாற்றிலிரேல்,
குறையக் கிடத்திய கொம்பொடு போகாக்
குவட் டெருமைக்(கு)
உறையுட் புகுத்திய வாளை உருவுதற்
கோர் நொடியே!

-1971

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/083-089&oldid=1515073" இலிருந்து மீள்விக்கப்பட்டது