கலித்தொகை/1.பாலைக்கலி
Appearance
சங்க இலக்கியம் கலித்தொகை பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாலைத்திணைக் கலிப்பாப் பாடல்களை பாலைக்கலி எனக் குறிப்பிடுகின்றனர். இதில் உள்ள பாடல்கள் 35. இவை கலித்தொகை நூலில் 2 முதல் 36 எண்ணுள்ள பாடல்களாக முதல் அடுக்கில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாடிய புலவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. தலைவன் தலைவியைப் பிரிந்து பொருளீட்டச் செல்லும் பிரிவோடு தொடர்புடைய செய்திகளைக் கூறுவது பாலைத்திணை.