கலைக்களஞ்சியம்/அகத்தி

விக்கிமூலம் இலிருந்து

அகத்தி சிறிய மெல்லிய வன்மையில்லாத மரம் 20-30 அடி வளரும். அதிகமாகக் கிளை விடுவதில்லை ஓரடி நீளமுள்ள இரட்டைக் கூட்டிலையுடையது. சுமார் 20, ஜதை சிற்றிலைகள் உண்டு. சிற்றிலை ஓர் அங்குல நீளமிருக்கும், நீள்சதுர வடிவமுள்ளது. பூங்கொத்து சிறிய வளர் நுனிக் கொத்து (Raceme). 3-4 பூக்கள் கொண்டது. பூ பெரியது, 2-3 அங்குல மிருக்கும், சாதாரணமாக வெண்மை நிறமுள்ளது. சிவப்புப் பூவும் உண்டு. புல்லி இணைந்தது, மணி

அகத்தி
1. ஓர் இலையும் பூங்கொத்தும்
2. பூ
3. புல்லீ
4. அவரைப்பூ வடிவ அல்லிகளை
5. இருமுடிக் கேசங்களும் சூலகமும்
6. கோசம்
7. சூலகம்
8. காயும் விதைகளும்

வடிவமுள்ளது , அல்லி வட்டம் அவரைப் பூ வடிவமுள்ளது. மகரந்த கேசரம் பத்து, ஒன்று தனித்தும் ஒன்பது ஒன்றாகச் சேர்ந்தும் இருக்கும். காய் மெல்லியதாக ஓர் அடிநீளமிருக்கும் ; விதைகளுக்கு இடையில் பள்ளமாக யிருக்கும். குறுக்கு வெட்டில் சதுரமாகக் காணும். அகத்திக் கீரையும் பூவும் காயும் கறிசமைப்பார்கள். இந்தச் செடி மருந்துக்கு உதவும். வெற்றிலைத் தோட்டங்களில் கொடி படர்வதற்கும் நிழலுக்கும் நிரம்பப் பயிர் செய்வார்கள். குடும்பம் : பாப்பிலி யோனேசீ (Papilio-nceae). இனம் : செஸ்ப்போனியா கீராண்டிப்ளோரா (Sesbania Grandiflora).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அகத்தி&oldid=1453384" இலிருந்து மீள்விக்கப்பட்டது