கலைக்களஞ்சியம்/அகமத்ஷா அப்தலி
அகமத்ஷா அப்தலி (? - 1773): ஆப்கானிய அப்தலி சாதியைச் சோ்ந்தவன். இவன் 1737-ல் பாரசீக மன்னன் நாதா்ஷா தன் ஆதிக்கத்திலிருந்த ஆப்கானிஸ்தானத்தில் ஏற்பட்ட கலகத்தை அடக்கியபொழுது சிறைப்பட்டான். ஆயினும் நாதா்ஷா இவனுடய திறமையையும் ஒழுக்கத்தையும் வியந்து இவனைத் தனது முக்கிய ராணுவ அதிகாாியாக ஆக்கினான். இவன் 1745-ல் பஞ்சாப் கவா்னராயிருந்த சக்காாியாகான் இறந்தபொழுது பஞ்சாப் மீது படையெடுத்துப்பெஷாவா், லாகூ்ர், சிா்ஹிந்து ஆகியவற்றைக் கைப்பற்றினான். 1747-ல் நாதா்ஷா கொலையுண்ட பொழுது இவன் காந்தகாருக்கு வந்து அகமத்ஷா துரானி என்னும் பெயருடன் ஆப்கானிய அரசனானான். துரானி என்னும் சொல் முத்து என்று பொருள் படும். இவன் பன்முறை வட இந்தியாமீது படையெடுத்தான். 1761-ல் முன்றாம் பானிப்பட் போாில் மகாராஷ்டிரரை வென்றான். அதுவே அவா்களுடைய வீழ்ச்சிக்கு வழி கோலியதாகும். இவன் நான்காம் முறை படையெடுத்த போது மதுரா, ஆக்ரா முதலிய இடங்களில் செய்த சேதங்கள் அளவிலடங்கா. டெல்லி மொகலாய சக்கரவா்த்தியான முகம்மதுஷாவின் பதினேழு வயது மகள் ஹசரத் பேகம் என்பவளை வற்புறுத்தி மணந்து கொண்டான். 1773-ல் இறந்தான். தே. வெ. ம.