கலைக்களஞ்சியம்/அகில் மரம்

விக்கிமூலம் இலிருந்து

அகில் மரம் (=அகரு): இது பெரிய மரம்: 60-70 அடி உயரமும், 5-8 அடி, சுற்றளவுமுள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பாகங்களில் முக்கியமான அஸ்ஸாமிலுள்ள காசி, காரோ, நாகா முதலிய மலைக்

அகில்
1. கிளை 2. பூங்கொத்து 3. பூ

காடுகளில் இது வளர்கிறது. பர்மாவிலும் உண்டு. இதன் பட்டையிலுள்ள நார், காகிதம் செய்யவும் கயிறு திாிக்கவும் உதவுகிறது. இந்த மரத்தில் பிசின் வடிவதில்லை. ஆயிறும் சற்று முதிர்ந்த மரத்திற்குள்ளே அங்கங்கே சில இடங்கள் கறுப்பாகியிருக்கும். அதில் ஒருவித என்ணெய்ப் பிசின் இருக்கிறது. அதுவே அதில் அகில் பற்றியிருக்கும் மரம் நோயுற்றதுபோலத் தோன்றும். இந்தப் பிசின் கிளைகள் கவைக்கும் இடத்தில் சாதாரணமாக உண்டாகும். ஒருவிதக் காளான் இந்த மரத்தில் பற்றிக் கொண்டு வளர்வதுதான் இது உண்டாவதற்குக் காரணம். நல்ல மரங்களில் காளான் பற்றியிருக்கும் மரத்துண்டைக் கொண்டு முனைபோல உள்ளே செல்லும்படி அடித்தால் இந்தக் காளான் வளர்ந்து பரவுதலால் அந்த மரத்திலும் அகிலுண்டாகும். அகில் தரும் மரங்களில் சில இனங்களுண்டு. இந்தியாவிலுள்ள முக்கியமான மரம் அக்விலேரீயா அகல்லோச்சா என்னும் இனம்.

அகில் சிறுசிறு துண்டுகளாக விற்கிறது. அதை நெருப்பில் சந்தனக் கட்டைத் துண்டுகளைப் போடுவது போலப் போட்டால் நல்ல சந்தனம் அல்லது அம்பர் போன்ற வாசனையுள்ள புகைவரும். மிகப் பழைய காலந்தொட்டு எகிப்து, அரேபியா, முதலிய நாடுகளிலும், இந்தியா, பர்மா முதலிய கீழ்த்தேசங்களிலும் இதை விரும்பி யுபயோகித்து வந்திருக்கின்றனர். பார்சிகளிலும இதைத் தங்கள் கோயில்களில் தூபப்பொருளாகப் பயன்படுத்துகின்றனர். அகில் பீசின் நிரம்ப உள்ள மரத்துண்டு நீரில் மிதக்காது அழுந்திவிடும். இதனால் அகிலின் தரத்தையறிந்துகொள்ள முடியும்.

அகிலிலிருந்து ஒரு தைலம் இறக்குகின்றனர். அதற்கு அகர் அத்தர் என்று பெயர். இந்தத் தைலத்தைத் தனியே வாசனைப் பண்டமாக உபயோகிப்பதும்ன்றி மற்ற உயர்ந்த வாசனைப் பொருள்களைக் கலப்பதற்கும் அவற்றின் வாசனை போகாமல் வைப்பதற்கும் பயன் படுத்துகின்றனர்.

அகில் தூளைத் துணிகளில் தூவி வைப்பதுண்டு. பூச்சி பிடிக்காமல் இருக்கும். ஊதுவர்த்தி, அகர்பத்தி செய்யயும் இது உதவுகிறது.

அகில் பெரும்பாலும் அஸ்ஸாமிலிருந்து பல இடங்களுக்கு அனுப்பப்டுகிறது. மிகப் பழைய காலங்தொட்டுத் தமிழ் மக்கள் அகிற் புகை அகிற் கூட்டுக்களில் பெரு விருப்பபுடையவர்கள்.

குடும்பம் : தைமீலியேசீ (Thymeliaceae).
இனம் : அக்விலேரியா அகல்லோச்சா (Aquilaria agallocha).