கலைக்களஞ்சியம்/அக்கெல்தாமா
Appearance
அக்கெல்தாமா : ரத்தக் களம் என்னும் பொருள்படும் இக்கிரேக்கச் சொல் எருசலேமிலுள்ள ஓர் இடுகாட்டு நிலத்தைக் குறிக்கும். ஏசுகிறிஸ்துவைக் காட்டிக் கொடுப்பதற்கு யூதாசு இஸ்காரியத்து பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக் காசுகள் குற்றத் தொடர்பு உடையவை என்று கருதப்பட்டமையால் அப்பணத்தை அரசாங்கம் எற்றுக்கொள்ளவில்லை. வெளிநாட்டார் வந்து எருசலெத்தில் இறந்துவிடின் அவ்வுடலங்களைப் புதைப்பதற்கு ஒரு பொது இடம் வேண்டுமென்று அம்முப்பது வெள்ளிக் காசுகளைக் கொண்டு அவ்வூர்க் கருமார்கள் ஒரு குயவனிடமிருந்து சிறிது நிலம் வாங்கினர். அதற்கே அக்கெல்தாமா என்பது பெயர். இப்பொழுது அங்கு எக்கொலைக் களத்தையும் குறிக்க ஒரு பொதுச் சொல்லாக வழங்குகிறது.