கலைக்களஞ்சியம்/அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்
Appearance
அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்(37-98) பிரிட்டனில் ரோமானியர்களுடைய கவர்னராக இருந்தவன். இவன் அந்நாட்டை மிக நல்ல முறையில் ஆட்சிபுரிந்தான். இவன் வடவேல்சிலிருந்த ஆதிக் குடிமக்களையும், கிளைடு ஆற்றின் கடல்வாய்க்கு வடக்கே யிருந்த காலிடோனியர்களையும் வென்றான். வடபிரிட்டனில் கிளைடு கால்வாய்க்கும் போர்த் கால்வாய்க்கும் இடையே பல கோட்டைகளைக் கட்டி பிரிட்டனின் தற்காப்புக்களைப் பலப்படுத்தினான். இவனுடைய வாழ்க்கை வரலாற்றை இவன் மருமகனான டாகிட்டஸ் என்னும் புகழ் பெற்ற வரலாற்றாசிரியன் எழுதியுள்ளான்.