உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அசோகன்

விக்கிமூலம் இலிருந்து

அசோகன் : மௌரிய அரசன் பிந்துசாரனின் ஆட்சியில் அவன் மகன் அசோகன் தட்சசீலத்தின் மண்டலாதிபதியாக இருந்து, அங்கு விளைந்த கலகத்தை அடக்கி, நாட்டில் அமைதியை விளைவித்தான். கி.மு.270-ல் தன் தகப்பனிறந்ததும் இவன் அரியணை ஏறினான். அதே ஆண்டில் கலிங்கநாட்டுடன் போர் தொடங்கினான். அதில் வெற்றிபெற்ற அசோகன் அந்நாட்டு மக்கட்கு ஏற்பட்ட துயரை உணர்ந்து வருந்தினான். இனி ஒரு நாட்டின் மீதும் போர் தொடுப்பதில்லை என்று சபதம் செய்து கொண்டான். இனித் தன்மவிசயமே செய்வது எனறு தீர்மானித்தான்.

அசோகனால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களின் இருப்பிடங்களை கொண்டு அவன் சாம்ராச்சியத்தின் பரப்பை மதிப்பிடலாம். வடமேற்கே பஞ்சாபில் மான்சேரா, ஷாபாஜ்காரி என்ற இடங்கள், மேற்கே கத்தியவார் தீபகற்பத்தில் ஜுனகத் நகரம், தெற்கில் மைசூர், அனந்தபூர் ஜில்லா, ஆகியவை அவன் இராச்சியத்தின் எல்லைகனாயிருந்தன.

கலிங்கப்போருக்குப்பின் அசோகன் பௌத்த சங்கத்தின் கொள்கைகளைக் கையாண்டு இவ்வாழ்க்கையை விட்டுவிடாமல் சங்கத்துக்குத் தொண்டுபுரிந்து வந்தான். புத்தரின் வரலாற்றை ஒட்டிய புண்ணியத் தலங்கலைத் தரிசித்து வந்தான். இதைக் கல்வெட்டுக்களில் தன்மயாத்திரை என்ற குறத்திருப்பதைக் காண்கிறோம். புத்தர் அவதரித்த இடமான லும்பினித் தோட்டத்தில் அசோகனால் நிறுத்தப்பட்ட கல்வெட்டையுடைய ஒரு தூணைக் காணலாம். தன் அதிகாரிகளூம் தன்னைப்போல அறத்தொண்டு செய்ய வேண்டுமென்ற ஆணையிட்டுத் தன் ஆணையைப் பல இடங்களில் பாறையிலும் கல் தூன்களிலும் பொறிக்கும்படியும் ஏற்பாடு செய்தான்.

இக்கல்வெட்டுக்களின் மூலம் அசோகனின் ஆட்சி முறை ஒருவாறு தெளிவாகிறது. சாலைகலைல்லாவற்றிலும் பல இடங்களில் கிணறுகள் வெட்டி, மரங்கள் வைத்து யாத்திரிகளுக்கும் அவர்கள் மாடு குதிரை முதலிய வாகனங்களூக்கும் வைத்திய வசதியயும் ஏற்படுத்தினன். பண்டிகைக் காலம் தவிர மற்றச் சமையங்களீல் உணவிற்காப் பிராணிகளைக் கொல்வதைத் தடுத்தான். எல்லாச் சமயத்தினர்களிடமும் பரஸ்பர அன்பு இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினன். அரசு வமிசத்தினர் வேட்டையாடுவதை நிறுத்திச் சாது சங்கங்கள் கூட்டவும் ஏற்பாடு செய்தான்.

பௌத்தசமயத்திற்கு அசோகன் செய்த தொண்டு மிகச் சிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. புத்தரின் அடையாளங்களை 8400 தூபங்களில் பிரதிஷ்டை செய்தான். அவனுடைய ஆதரவில் மூன்றவது பௌத்த மகாசங்கம் கூடிற்று. மொக்கனி புத்ததிஸ்ஸ என்ற பெரியார் தலைமை வாகித்தார். அசோகனின் குரு மதுரா நகரத்திலுள்ள உபகுப்தர் என்னும் பெரியார். அசோகன் இந்திய நாடெங்கும் பௌத்த பீக்குதக்களை அனுப்பி ஆங்காங்கே தர்ம்ப் பிரசாரத்தைச் செய்யும்படி ஏற்பாடு செய்தான். விதிசா நாட்டில் பிறந்த தேவி என்பவளிடம் அசோகனுக்குப் பிறந்த மகேந்திரனும், அவனுடைய தங்கை சங்கமித்திரையும் துறவு பூண்டு இலங்கைகுச் சென்ற, அந்நாட்டின் அரசனைப் பௌத்த சமயத்தை தழும்படி செய்து, அத்தீவில் அச்சமையத்தைத் தாபித்ததாக்த் தெரிகிறது. இவன் காலத்தில் கீழ்நாடுகளிளும் இந்த சமையம் பரவிற்று என்று தெரிகிறது. சங்கத்தில் பிளவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படி. அதிகாரிகளுக்கு கட்டளையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தேவானாம்பிரிய பிரியதரிசி என்ற பெயருடன் பல கல்வெட்டுகளைப் பொறித்த அசோக மன்னன் 37 ஆண்டுகள் ஆட்சி புரிந்து கி.மு.233ல் இறந்தான். நம் நாட்டின் ஒரு பகுதியில் வழங்கிவந்த பௌத்த சமையத்தை உலகச் சமையங்களில் ஒன்றாக் செய்த பெருமை அசோகனுடையது. அரசியலின் நோக்கம் அறமே என்பதைக் கையாண்டுவந்த அசோகன் வரலாற்றிலேயே ஒருவகையில் இனையற்றவன் என்ற சிறப்பைப் பெற்றவன். கூ. ரா. வே

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அசோகன்&oldid=1455610" இலிருந்து மீள்விக்கப்பட்டது