கலைக்களஞ்சியம்/அச்சிறுபாக்கம்

விக்கிமூலம் இலிருந்து

அச்சிறுபாக்கம் : செங்கற்பட்டு ஜில்லாலிலுள்ளது. சிவபெருமான் முப்புரம் எரித்தற்பொருட்டு தேவர்கள் அமைத்த தேரின்மேல் அடியிடலும் அச்சு முறிந்து போயிற்று. அச்சு இற்ற காரணத்தால் அது நிகழ்ந்தவிடம் அச்சிறுபாக்கம் எனப்பட்டது. தேவர்கள் விநாயகரை நினையாதலால் அச்சு முறிந்தது என்ப. கண்ணுவரும் கௌதமரும் இத்தலத்தில் பூசித்தனர். மூலத்தானத்தில் இருக்கும் சுவாமி ஆட்சிநாதர். தேவியார் இளங்கிளியம்மை சந்நிதி வடச்சுற்றில் இருக்கிறது. அச்சுற்றிலேயே தலவிருச்சமாகிய கொன்றை மரமும் தீர்தங்களில் ஒன்றாகிய சிம்மகூபமும் இருக்கின்றன. பாண்டியன் ஒருவன் நிறுவிய சிவலிங்கமும் அம்மனும் உண்டு. இத்தலம் திருஞானசம்பந்தருடைய பாடல் பெற்றது.