கலைக்களஞ்சியம்/அச்சு (printing type)

விக்கிமூலம் இலிருந்து

அச்சு (printing type): பெயர்த்து எடுக்கத்தக்க அச்சுக்களைக் கொண்டு அச்சடிக்கும் முறை தோன்றியபின் அதற்கேற்ப எழுத்துக்களின் வடிவங்கலும் பல மாறுதல்கள் செய்ய்ப்பட்டன. இந்த மறுதல்களையும், எழுத்து அச்சுக்களின் அளவுகளையும், அவற்றை அமைக்கும் வகைகளையும் ஏற்றவாறு முடிவு செய்வது தற்காலத்தில் ஒரு கலையாக வளர்ந்துவிட்டது. பயனுள்ள வகையில் அச்சு வேலையைச் செய்வதையே அச்சுக்கலை தனது முக்கிய நோக்கமாக்க் கொண்டுள்ளது. இதற்காக அதன் அழகு சிறிது குறைந்தலும் பொருட்படுத்த வேண்டியதில்லை. தேவயற்ற சிங்காரிப்புகள் இல்லாமல் ஒரே சீரான அழுத்தத்துடன் நல்ல வடிவங் கொன்டு அச்செழுத்துக்கள் இருக்கவேன்டும், அச்சிட்ட பக்கதைப் படிப்பது தடைப்படாத வகையில் எழுத்துக்கள் அமைய வெண்டும். ஒவ்வொரு எழுத்தும் தெளிவாகத் தெரியும்படியும், எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவாறும் இருப்பதோடு மற்ற எழுத்துக்களோடு எளிதில் இணையும்படியாகவும் இருக்கவேண்டும்.

சாதாரணமாக அச்சுவேலையில் பயன்படும் அச்சு மெல்லிய, சீள்சதுர வடிவான உலோகக் கட்டி. அதன் மேற்புரத்தில் எழுத்தின் வடிவம் மேடாக அமைந்திருக்கும். கட்டியின் ஒரு பக்கத்தில் தவாளிப்பு இருக்கும். அச்சு கோக்கும்போது எழுத்துக்கள் நேராக அமைந்திருக்கின்றனவா என்பதை அறிய இது உதவும்.

மானோ டைப் (Monotype) லைனோ டைப் (Lino type) எந்திரங்களில் பயனாகும் அச்சுக்கள் அவ்வப்போது வார்க்கப்பட்டு ஒருமுறை பயன்பட்டபின் உருக்கப்பட்டு விடுகின்றன. (பார்க்க; அச்சிடுதல்). ஆனால் மற்றப் பெரும்பான்மையான வேலைகளுக்குக் கையினால் அச்சுக் கோக்கப்படும்போது சிறு அறைகளில் தயாராக வைக்கப்பட்ட அச்சுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தனிப்பட்ட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. அச்சுக்கள் அச்சு உலோகம் என்ற உலோகக் கலவையால் செய்யப்படுகின்றன. இதில் காரியம், ஆல்டிமனி, வெள்ளீயம் ஆகிய உலோகங்கள் இருக்கும்.

அச்சை வார்க்குமுன் அதன் மாதிரி ஒன்று எஃகினால் அமைக்கப்படுகிறது. இது மிருதுவான பித்தளையின் மேலோ, செம்பின் மேலோ வைத்து அழுத்தப்படுகிறது. இதுதான் அச்சின் வார்ப்பாகும். அச்சு உலோகத்தை உருக்கி இதற்குள் வார்த்து அது இறுகுமாறு செய்யப்படும். உலோகம் குளிர்ந்தபின் வார்ப்பிலிருந்து அச்சு வெளியே எடுக்கப்படுகிறது. முன்னர் இவ்வேலைகள் அனைத்தையும் கையினால் செய்து வந்தார்கள். தற்காலத்தில் அச்சுக்களை மிக விரைவாக வார்க்கும் எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அச்சு எழுத்துக்களின் அளவு புள்ளி (Point) என்ற அலகினால் குறிப்பிடப்படுகிறது. 75 புள்ளிகள் ஓர் அங்குல நீளமாகும். தற்காலத்தில் தமிழ் நூல்கள் சாதாரணமாக 11 அல்லது 12 புள்ளி எழுத்துக்களிலும் தினசரிகள் 10 புள்ளி எழுத்துக்களிலும் வெளியிடப் பெறுகின்றன, தினசரிகளில் தலைப்புகள் 24 புள்ளி எழுத்துகளைப் போன்ற பெரிய எழுத்துக்களால் அமைக்கப்படுகின்றன. விளம்பரங்களில் இன்னும் பெரிய எழுத்துக்கள் பயனாகின்றன. இவற்றில் தெளிவைவிடக் கவர்ச்சியான தோற்றமே முக்கியமாகையால் விசேஷ வடிவான எழுத்துக்கள் வழங்குகின்றன. ஒரே வரியில் சில சொற்க்களை மட்டும் அழுத்தமான எழுத்துக்களாலோ, சாய்வு எழுத்துக்களாலோ அமைப்பது அச்சொற்களுக்கு ஓர் அழுந்தந் தருகிறது. எனினும் இதனால் அச்சின் தெளிவு குறைகிறது.

எழுத்துக்கள் நன்றாக இருந்தாலும் அவற்றைச் சரியானவாறு அமைக்காவிட்டால் அச்சுவேலை பாழாகிவிடும். ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ற அளவுள்ள எழுத்துக்களைத் தேர்ந்தெடுப்பதும், சொற்களுக்கிடையிலும், வரிகளுக்கிடையிலும் ஏற்ற இடைவெளி விடுதலும் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விசயங்களாகும். எழுத்தின் அகலத்தையும் கவனிக்கவேண்டும். குறுகலான வடிவமும், போதிய உயரமும் உள்ள எழுத்துக்கள் அதே உயரமும் இன்னும் அதிகமான அகலமும் உள்ள எழுத்துக்களைவிடக் குறைவான இடத்தை அடைக்கும்.