கலைக்களஞ்சியம்/அடிஸ் அபாபா
Appearance
அடிஸ் அபாபா (Addis Ababa) : அபிசீனியாவின் தலைநகரம்; அங்குள்ள மிகப்பெரிய நகரம். மக்: சு. 3.00.000. இங்கிருந்து 486 மைலுக்கப்பrலுள்ள ஜிபூடி துறைமுகப்பட்டினத்திற்கு ஒரு ரெயில் பாதை செல்லுகிறது. இங்குள்ளவர்களில் பெரும்பாலோர் நீக்ரோ வகுப்பினர். மின்சார சுகாதார வசதிகள் சென்ற 25 ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1935-ல் இத்தாலியர்கள் அபிசீனியாவை வென்றபோது இந்நகரில் பல புதுக்கட்டடங்களையும் மருத்துவச்சாலைகளையும் நிறுவினர். 1941-ஸ் இரண்டாம் உலக யுத்தத்தின்போது மறுபடியும் இந்நகரம் அபிசியர் வசமாயிற்று. இங்குப் பருத்தித் தூய்மை செய்யும் ஆவைகளும், மாவு ஆலைகளும் பல உள்ளன.