கலைக்களஞ்சியம்/அட்டவால்பா
அட்டவால்பா (Atahualpa) (1500?—1598) பெரு என்னும் நாட்டை ஆண்டுவந்த இன்கா இனத்தவர்களில் கடைசி அரசன். இவன் தந்தை 1595-ல் இறந்ததும், இவனுக்கும் இவன் ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவனுக்கும் அரசுரிமைச் சச்சரவுகள் நடந்தன. அவற்றில் இவனே வென்று அரசனானான். அக்காலத்தில் ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்காவிற்கு வந்திருந்த பிசாரோ என்பவன் 1599-ல் அட்டவால் பாவைக் கிறிஸ்தவனாகச் சொன்னான். அட்டவால்பா அவ்வேண்டுகோளை மறுத்ததில் வியப்பில்லை. இதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு பிசாரோ தனது ஆட்களோடு பெருவைத் தாக்கி அட்டவால்பாவைச் சிறை செய்தான். இக்கொடுமையைக் கண்டு அஞ்சிய அட்டவால்பா ஓரு அறையைப் பொற்காசுகளால் நிரப்பத் தருவதாகவும் அதற்குப் பதிலாகத் தன்னை விடுவித்து விடும்படியும் கேட்டுக்கொண்டான். பொற்காசுகளைப் பெற்றுக்கொண்ட பிசாரோ அட்டவால்பாவை வீடுவிப்பதற்குப் பதிலாகக் கட்டிவைத்துக் கொளுத்தி விட்டான்.