கலைக்களஞ்சியம்/அட்வொக்கேட்டு ஜெனரல்
அட்வொக்கேட்டு ஜெனரல் (Advocate General) : இவர் இங்கிலாத்தில் உள்ள அட்டார்னிக் ஜெனரல் என்பவருக்குச் சமமானவர். இவர் வழக்கறிஞர் கூட்டத்துக்குத் தலைமையானவருமான பிரதமச் சட்ட அதிகாரி (Chief Law Officer) ஆவர். உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்குத் தகுதியுள்ள ஒருவரை அட்வொக்கேட்டு ஜெனரவாகக் கவர்னர் தேர்த்தெடுக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புக் கூறுகிறது. சட்ட சம்பந்தப்பட்டவையும், கவர்னரால் குறிக்கப்பட்டவையுமான விவங்களில் அவர் தம் ஆலோசனைவைக் கூறக் கடமைப்பட்டவர். சட்டங்களை அல்லது விதிகளை எற்படுத்துவதிலும் இன்னும் வேறு முக்கியமான விஷயங்களிலும் சர்க்கார் அவருடைய ஆலோசயைப் பெறுவர் சர்க்கார் வக்கீல் (State Pleader). சர்க்கார் பிராசிகியூடர் போன்றவர்களும் முக்கியமான விஷயங்களில் அட்வெக்கெட்டு ஜெனரலின் ஆலேசனையைக் கேட்டுக் கொள்வார்கள். இந்திய அரசியல் அமைப்பின் 926-வது பிரிவின்படி தாக்கல் செய்யப்படும் மனுக்களிலும், அஜராகுமாறு அரசாங்கம் கூறும். உயர் நீதிமன்றத்தின் முக்கியமான செஷன்ஸ் கேசுகளிலும், உச்ச நீதிமன்றத்திலும் (Supreme Court) உயர் நீதிமன்றத்திலும் நடக்கும் முக்கியமான விசாரனைகளிலும் அரசாங்கத்துக்காக அஜராவார்; அரசாங்கம் கேட்டுக் கொண்டால் தேர்தல் கமிஷன் முன்பு நடக்கும் நடவடிக்கைகளில் கலந்து கொள்வார்; அட்வொக்கேட்டுகளின் தவறான நடத்தையைப் பற்றி விசாரணைகளில் உயர்நீதி மன்றத்தார்க்கு ஆலோசனை கூறி உதவுவார். அவருடைய பதவி கவர்னருடைய விருப்பத்தைப் பொறுத்தது. அவருடைய ஊதியத்தைக் கவர்னர் தீர்மானிப்பார். தற்சமயம் அவருடைவ மாத ஊதியம் 1500 ரூபாய். அது தவிர அவர் ஆஜராகும் முக்கிய விசாரணைகளுக்காக அவர் தனியாகப் பெறவேண்டிய ஊதியவிகிதமும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இராச்சியச் சட்டசபையின் இரு சபைகளிலும் கலந்து கொள்வதற்கும் பேசுவதற்கும் அவருக்கு அதிகாரமுண்டு, ஆனால் வாக்குரிமை இல்லை. வக்கீல் சபையில் அவர் உறுப்பினராவர்; சென்னை இராச்சியத்தில் அதன் அக்கிராசனரும் ஆவார். தனிப்பட்ட நஷ்டம் உண்டாகாத பொது மக்கள் தொல்லை (Public nuisance) பற்றிய வழக்குக்களையும், இந்து பரிபாலனச் சட்டப்படியுள்ள தரும ஸ்தாபனய்கள் தவிர ஏளைய தரும ஸ்தாபனங்களில் நம்பிக்கைத் துரோகமாக கடக்கும் தருமகர்த்தாக்களை நீக்குவதற்கான வழக்குக்களையும் அட்வகேட்டு ஜெனரலும் அவருடைய உத்தரவு பெற்றவர்களும்தான் தாக்கல் செய்யலாம். சர்க்காரின் சம்மதத்தைப் பெற்றுக்கொண்டு உயர் நீதிமன்றத்தில் அதன் அதிகாரத்திற்குட்பட்டவர்கள் மீது வழக்குத் தொடர அவருக்கு அதிகாரமுண்டு; உயர் நீதிமன்றத்தில் நடக்கும் செஷன் விசாரணைகளில் பஞ்சாயத்தார் (Jury) தீர்மானம் கொடுப்பதற்குமுன், அங்கு நடக்கும் விசாரணை நிறுத்தப்படவேண்டும் என்று எந்தச் சமயத்திலும் சொல்ல அவருக்கு அதிகாரம் உண்டு. அவர் அவ்வாறு சொன்னமாத்திரத்தில் விசாரணை உடனே நிறுத்தப்பட்டுப் பிரதிவாதி விடுதலை செய்யப்படுவார். இராச்சியத்திற்கு அட்வோக்கேட்டு ஜெனரல் இருப்பது போல இந்தியா முழுமைக்கும் ஓர் அட்டார்னி ஜெனரவ் (த.க.) நியமிக்கப்படுவார். ஏ. என். வி.