கலைக்களஞ்சியம்/அந்தரத்தாமரை

விக்கிமூலம் இலிருந்து

அந்தரத்தாமரை நீர்ப்பூண்டு; வேர் ஆழமாகப் பதியாதது. கிளைகள் இலைக்காம்பு போலத் தோன்றும். ஒவ்வொரு கிளையும் ஓர் இருதய வடிவமுள்ள இலையில் முடியும். பூக்கள் சிறியவை ; வெண்மை நிறமுள்ளவை; நீண்ட காம்புள்ளவை ; கொத்தாக இருக்கும். இலைக்கு ஒரு அங்குலம் கீழே கிளையில் பூங்கொத்து இருக்கும். அதே யிடத்தில் கிளையிலிருந்து வேர்களும் உண்டாகும். இந்தச் செடி குளங் குட்டைகளில் சாதாரணமாக உண்டு.
குடும்பம் : ஜென்ஷியனேசீ (Gentianaceae).
இனம் : லிம்னான் திமம் கிரிஸ்டேட்டம் (Limnan- themum cristatum).