கலைக்களஞ்சியம்/அனவரத விநாயகம் பிள்ளை, சு.

விக்கிமூலம் இலிருந்து

அனவரத விநாயகம் பிள்ளை, சு. (1877- 1940]: இவர் தந்தை சுப்பிரமணியபிள்ளை; தாயார் ஈசுவர வடிவு அம்மாள்.
சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தத்துவப்பாடம் படித்து, பி.ஏ-ல் முதல்வராகத் தேர்ச்சி பெற்றார். எம்.ஏ-ல் தமிழ்ப்படித்து நச்கினார்க்கினியரைப்பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். கிறிஸ்தவக் கல்லூரியில் முதலில் டியூட்டராகவும், பிறகு உள்நாட்டு மொழிகட்கு மேற்பார்வையாளராகயும், (Superin tendent of Vernaculat Studies) பல ஆண்டுகள் வேலை பார்த்தார். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், சென்னைப் பல்கலைக் கழகத்துத் ‘தமிழ் லெச்சிகன்’ உறுப்பினராகவும், தமிழாராய்ச்சியாளராகவும் இருந்தார். இவர் இயற்றிய நூல்கள் நச்சினார்க்கினியர், சைவ சித்தாந்த

வரலாறு, ஒளவையார், ஏகநாதர், தமிழ்ப் பெருமக்கள் வரலாறு, மாணவர் தமிழகராதி, பழமொழி அகராதி முதலியவை. இவர் பல தமிழ் நூல்களை ஆராய்ச்சிமிக்க முன்னுரைகளுடன் பதிப்பித்திருக்கின்றார். தமிழ்ப் புராணங்கள், தமிழ் மொழி முதலிய பல பொருள்களைப்பற்றிய கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். (பி.20-9-1877-இ. ஏப். 1940).