உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அபிடாஸ்

விக்கிமூலம் இலிருந்து

அபிடாஸ் (Abydos) 1.ஆசியா மைனரில் உள்ள ஹெல்லஸ்பாண்ட் (டார்டனல்ஸ்) என்னும் ஜலசந்திக்குத் தென்புறமுள்ள ஒரு நகரம். ஜலசந்தி மிகக் குறுகலாயிருக்கும் இடம் இதுதான். சர்சிஸ் என்னும் பாரசீகப் பேரரசன் கி.மு.480-ல் கிரீசை வெல்லப் புறப்பட்டபோது இவ்வூரிலிருந்து தான் ஐரோப்பா மீது படையெடுத்தான்.

2. அபிடாஸ் வட எகிப்தில் உள்ள ஒரு மிகப்பண்டைய நகரம்; அப்து என்பது கிரேக்கப் பெயர்; ஹெல்லஸ்பாண்ட் நகரத்தின்பெயரை இதற்கும் கிரேக்கர் இட்டனர். 40 நூற்றாண்டுகளுக்கு முன்பு எகிப்தில் ஆண்டுவந்த பேரரசர்களுடைய புதைவிடங்கள் பல இங்குத் தோண்டப்பட்டுள்ளன. இங்குள்ள பண்டைய கோவில்களின் சிதைவுகளிலிருந்து அக்கால எகிப்தியநாகரிகத்தைப்பற்றிப் பலவிவரங்கள் அறிய முடிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அபிடாஸ்&oldid=1455853" இலிருந்து மீள்விக்கப்பட்டது