கலைக்களஞ்சியம்/அமுக்கிரா
Appearance
அமுக்கிரா (அசுவகந்தி) சற்றுப் பெரிய சிறு செடி, புதர். அகன்று அண்ட வடிவமான இலையுள்ளது. கொத்துக் கொத்தாகப் பூ இருக்கும். சிறிய
உருண்டையான தக்காளிபோன்ற சிவப்புக் கனி விடும். புல்லி வட்டம் வளர்ந்து ஒரு கூடுபோலக் கனியைச் சுற்றி மூடியிருக்கும். வேர் தடித்துச் சதையுள்ளதாக இருக்கும். பயிரிடாத இடங்களிலும் பாழிடங்களிலும் வயல் வரம்புகளிலும் இது முளைத்திருக்கும். இலையும், விதையும் முக்கியமாக வேரும் மருந்துக்குதவும். அசுவகந்தி லேகியம் புகழ்பெற்ற உடல் வன்மை தரு மருந்து.
குடும்பம் : சோலனேசீ (Solanaceae). இனம்: வைத்தானியா சோம்னிபெரா (Withania somnifera).