கலைக்களஞ்சியம்/அம்பிகாபதி
Appearance
அம்பிகாபதி (12 ஆம் நூ.) கம்பரின் புதல்வர் ; சிறந்த கவிஞர் ; குலோத்துங்கன் அவைக்களப் புலவராக இருந்தார் என்றும், கம்பராமாயணத்துக்குச் “சம்பநாடன்” எனத் தொடங்கும் சிறப்புப்பாயிரங் கொடுத்தவர் என்றும், அம்பிகாபதிகோவை பாடியவர் என்றும், தமிழில் அணியிலக்கணம் செய்த தண்டியின் தந்தை யென்றும் கூறுவர்.