உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அரத்தை

விக்கிமூலம் இலிருந்து

அரத்தை இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மருந்துச் செடிச் சாதி. இந்தச் சாதியில் சுமார் 40 இனங்களுண்டு. முக்கியமானவை இரண்டு. அவற்றுள் ஒன்று பேரரத்தை. இது கிழக்கு இமயமலைப் பிரதேசத்திலும், தென்மேற்கு இந்தியாவிலும் விளைகிறது. 6-7 அடி உயரம் வளரும். பலபருவ மட்டத் தண்டு தரைக்குள் இருக்கும். அது கிச்சிலிப் பழுப்பு நிறமுள்ளது; மணமும் காரமும் சிறு கசப்பும் உள்ளது. கனி 1 அங்குல நீளம். 3-6 விதைகளுண்டு. மற்றொன்றான சிற்றரத்தை சீன தேசத்திலிருந்து இறக்குமதியாகிறது. இதன் மட்டத்தண்டு சிறிதாகவும் செம்பழுப்பு நிறமாகவும் இருக்கும். பேரரத்தையை விட மணமும் காரமும் மிக்கது. இவை குடைச்சலுக்கும், இருமல், மார்சளி, சளிப்பு முதலியவற்றிற்கும் பயனாகின்றன. இவற்றை முறையே தும்பராஷ்டிரம், சன்ன ராஷ்டிரம் என்றும் சொல்வார்கள். குடும்பம் : ஜிஞ்ஜிபரேசீ (Zingiberaceae) ; சிற்றரத்தை : ஆல்ப் பைனியா அபிஷினேரம் (Alpinia officinarum); பேரரத்தை : ஆல்ப்பைனியா காலங்கா (Alpinia galanga).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அரத்தை&oldid=1454277" இலிருந்து மீள்விக்கப்பட்டது