உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அலாதீன்

விக்கிமூலம் இலிருந்து

அலாதீன் (Aladdin) அராபியக் கதைகள் ஒன்றின் கதாநாயகன். அலாதீனும் அவனுடைய அதிசய விளக்கும் என்பது உலகமுழுவதும் சுவைக்கும் ஒரு கதையாகும். அலாதீன் ஓர் ஏழைச் சிறுவன். ஒரு மந்திரவாதி, அவனை ஒரு குகைக்குள் சென்று ஒரு விளக்கை எடுத்துவரச் சொன்னான். அலாதீன் விளக்கை மந்திரவாதியிடம் கொடுக்க மறுத்தான். பிறகு, அதைத் தேய்த்ததும் ஒரு பூதம் வந்து அவனுக்குச் செல்வம் தந்தது. அவன் சீனாவின் இளவரசியை மணந்தான். ஆனால் மந்திரவாதி அவனை ஏமாற்றி விளக்கை வாங்கிக் கொண்டு போனான். அலாதீன் அவனைக் கொன்று, விளக்கைத் திரும்பப் பெற்று, இளவரசியுடன் இன்பமாக வாழ்ந்தான் என்பது கதையின் சுருக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அலாதீன்&oldid=1503164" இலிருந்து மீள்விக்கப்பட்டது