கலைக்களஞ்சியம்/அலி

விக்கிமூலம் இலிருந்து

அலி (600-661) : மகம்மது நபியின் மருமகன். இவர் நாலாவது கலீபாவாக இருந்தார். மிகுந்த அறிவு படைத்தவர் என்று புகழ் பெற்றவர். யாருடைய கண்ணையேனும் புகழவேண்டியிருந்தால் அராபியர் "அயின் அலி" (அலியின் கண்கள்) என்று கூறுவர். அலியின் கண்கள் அத்துணை அழகு வாய்ந்தனவாம். இவர் காலத்திலேயே ஷியா, சுன்னி என்னும் இரண்டு இஸ்லாமிய வகுப்பினர் தோன்றினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அலி&oldid=1503169" இலிருந்து மீள்விக்கப்பட்டது