கலைக்களஞ்சியம்/அல்ஹாம்பிரா
Appearance
அல்ஹாம்பிரா (Alhambra) ஸ்பெயினிலுள்ள கிரனடாவில் 13-ஆம் நூற்றாண்டில் அரசாண்ட மூர் சாதி அரசர்களுடைய கோட்டையும் கோயிலுமாகும். சிவப்பு நிறமான கற்களைக்கொண்டு கட்டியதால் சிவந்த கோட்டை என்ற பொருளுடைய அல்ஹாம்பிரா என்னும்பெயர் பெற்றது. இதிலுள்ள அரசதூதர் மண்டபம் புகழ் வாய்ந்தது. சுவர்களில் குர்ஆன் வாக்கியங்கள் அழகான செதுக்குச் சித்திரங்களாகப் பொறிக்கப்பட்டுள. 13 கோபுரங்கள் உள. மூர்களின் கலைக்குச் சிகரமாக இது உள்ளது. இதன் பரப்பு : 35 ஏக்கர். இது 1482-ல் ஸ்பெயின் மன்னர்கள் வசமாயிற்று.