கலைக்களஞ்சியம்/அழிசி
Appearance
அழிசி : இவன் ஒரு சிற்றரசன்; சிறந்த வீரன்: இவன் ஊராகிய ஆர்க்காடு வரலாற்றுத் தொடர்புடையது. இங்கு அழிசி வடவருடன் போர் நிகழ்த்தினான். ஆர் என்பது ஆத்தி. ஆத்திமாலை சோழர்க்குரியது என்று வருவதால் இது சோழராட்சிக்குட்பட்டிருந்தது என்று அறியலாம். அழிசியின் பெயரால் அழிசிகுடி என்னும் ஊர் விருத்தாசலத்தைச் சார்ந்த சேத்தியார்தோப்பு அணைக்கட்டுக்குக் கிழக்கே உள்ளது (நற். 190, குறுந். 258).